வரலாற்றில் இன்று : ஆகஸ்ட் மாதம் 03

280

2000ஆம் ஆண்டு – 100ஆவது டெஸ்டில் 2 வீரர்கள்

இங்கிலாந்து அணியின் 2 நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்களான அலெக் ஸ்டுவர்ட் மற்றும் மைக் அத்தர்டன் ஆகியோர் தமது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய நாளாகும். 1989ஆம் ஆண்டு தொடக்கம் 2001ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மைக் அத்தர்டன் 37.69 என்ற துடுப்பாட்ட சராசரியில் 7728 ஓட்டங்களைப் பெற்றார். அதில் அவரது அதிகபட்ச ஓட்டம் ஆட்டம் இழக்காமல் பெற்ற 185 ஓட்டங்களாகும். அத்தோடு 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அலெக் ஸ்டுவர்ட் 39.54 என்ற துடுப்பாட்ட சராசரியில் 8463 ஓட்டங்களைப் பெற்றார். அதில் அவரது அதிகபட்ச ஓட்டம் 180 ஓட்டங்களாகும்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 2

ஆகஸ்ட்  மாதம் 03ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1960 கோபால் சர்மா (இந்தியா)
1939 ஏ.கே. சென்குப்தா (இந்தியா)
1933 பாட் க்ராஃபோர்ட் (அவுஸ்திரேலியா)
1855 ஜோ ஹண்டர் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்