2016ஆம் ஆண்டுக்கான தேசிய மற்றும் இளையோர் நீர்சார் சம்பியன்ஷிப் போட்டிகள் நவம்பர் மாதம் 26ஆம் திகதி சுகததாச உள்ளக நீச்சல் தடாக அரங்கில் ஆரம்பமாயின. குறிப்பிட்ட நீச்சல் போட்டிகள் அனைத்தும் நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளன.

ஆடவர் திறந்த (open) 100 LC மீட்டர் பட்டர்பளை (Butterfly) போட்டியில் இலங்கை கடற்படையை சேர்ந்த K.P.S.B டி சில்வாவினால் 58 வினாடிகளிலும், மகளிர் பிரிவுக்கான போட்டியில் இலங்கை கடற்படையை சேர்ந்த R.K. ரன்கோத்கேவினால் 1 நிமிடம் 10 வினாடிகளிலும் நிறைவு செய்து வெற்றி கொள்ளப்பட்டது.
ஆடவர் திறந்த (open) 200 LC மீட்டர் பேக்ஸ்ட்ரோக் (Backstroke) நீச்சல் போட்டியில் புனித பேதுரு கல்லுரியைச் சேர்ந்த அக்கலங்க பீரிஸ் 2 நிமிடங்கள் 15 வினாடிகளில் நிறைவு செய்து முதலாவதாக வந்த அதே நேரம் மகளிர் பிரிவில் KWA (Killer Whale Aquatics) கழகத்தைச் சேர்ந்த I.E. சேனநாயக்க முதலிடம் பெற்றுக்கொண்டார்.
ஆடவர் 400 LC மீட்டர் ரீலே நீச்சல் போட்டியில் மேட்லி ரீலே போட்டியில் இலங்கை கடற்படை அணி வீரர்களான K.P. மானவடு,V.G.L.S. கௌஷல்ய, J முனசிங்க மற்றும் K. டி சில்வா ஆகியோர் 4 நிமிடங்கள் மற்றும் 3.64 வினாடிகளில் முடித்து முதலிடம் பெற்று KWA (Killer Whale Aquatics) அணியை 1 விநாடி வித்தியாசத்தில் வெற்றி கொண்டனர்.

எஞ்சிய அனைத்து நீச்சல் போட்டிகளும் அடுத்த இரண்டு நாட்களில் சுகததாச உள்ளக நீச்சல் தடாகத்தில் நடைபெறவுள்ளன.






















