ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணி, அடுத்த பருவத்திற்காக (2026) தங்களது அணியின் வியூக ஆலோசகராக (Strategic Advisor) நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான கேன் வில்லியம்சனை நியமித்துள்ளது.
>>இந்திய ஒருநாள் தொடர்; முதல் போட்டியில் முன்னணி வீரர்களை இழக்கும் ஆஸி.<<
அதன்படி லக்னோ அணியின் முன்னோடி ஆலோசகராக (Mentor) இருந்த ஸகீர் கானுக்குப் பதிலாக வில்லியம்சன் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாதபோதும், வில்லியம்சன் தற்போது நியூசிலாந்து அணியுடனான தனது ஒப்பந்தத்தை (Central Contract) தளர்த்திக் கொண்டு, லீக் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றார்.
தனது புதிய பொறுப்பின் மூலம் வில்லியம்சன் லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் மற்றும் அணித்தலைவர் ரிஷப் பாண்ட் ஆகியோருடன் இணைந்து, இந்த டிசம்பரில் நடைபெறவிருக்கும் IPL 2026 தொடரின் வீரர்கள் ஏலம் மற்றும் அணியின் திட்டமிடலில் முக்கியப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வில்லியம்சனின் அனுபவம், லக்னோ அணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று LSG நிர்வாகமும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<