2016/17 லா லிகா சிறந்த வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி

190
courtesy - AFP

ஐரோப்பிய கால்பந்து லீக் தொடர்களில் முக்கிய இடத்தை வகிக்கின்ற லா லிகா போட்டித் தொடரில் 2016/17 பருவகாலத்திற்கானஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்” மற்றும்அதிக கோல்களைப் பெற்ற வீரர்” ஆகிய 2 விருதுகளும் பார்சிலோனா அணியின் நட்சத்திர ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.  

சிறந்த கால்பந்து வீரராக மெஸ்சியின் சாதனையை சமன் செய்த ரொனால்டோ

இந்த தலைமுறையின் தலைசிறந்த கால்பந்து.. மெஸ்ஸி ஐந்து முறை இந்த விருதை பெற்றுள்ளார்…

 ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான லா லிகா கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஸ்பெய்னின் பிரபல விளையாட்டு பத்திரிகையான மார்காவினால் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா பார்சிலோனாவில் கடந்த திங்களன்று (18) நடைபெற்றது.

இந்தாண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருது ரியல் மெட்ரிட் அணியை பிபா கழக உலகக் கிண்ணம், யூரோ கிண்ணம் உட்பட பல முக்கிய தொடர்களில் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற அந்த அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்படும் என பலரும் எதிர்பார்த்தனர்.  

இந்நிலையில், இந்தாண்டிற்கான லா லிகா சிறந்த வீரருக்கான விருது 30 வயதுடைய லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. குறித்த விருது வழங்கும் நிகழ்வின் பின்னர் ஸ்பெய்னின் கேம்ப் நோ நகரில் நடைபெற்ற பார்சிலோனா மற்றும் டிபோர்டிவா லா கொருனா அணிகளுக்கிடையிலான போட்டிக்கு முன் வழங்கப்பட்டது. இப்போட்டியில் மெஸ்ஸி கோல்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், பார்சிலோனா அணி 4-0 என வெற்றியைப் பதிவுசெய்தது.

புதிய FIFA தரவரிசை வெளியீடு : ஆண்டின் சிறந்த அணியாக ஜெர்மனி சாதனை

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) இந்த ஆண்டிற்கான இறுதி தரவரிசை வெளியீட்டின்படி…

அது போன்றே, 2016/17 பருவகாலத்தில் 34 லா லிகா போட்டிகளில் விளையாடிய மெஸ்ஸி 37 கோல்கள் அடித்ததோடு, 12 முறை ஏனைய வீரர்கள் கோல் போட உதவியுள்ளார். அதேசமயம் ரொனால்டோ 25 கோல்கள் அடித்துள்ளார். மேலும் அவர் 6 முறை கோல் போட உதவியுள்ளார். இதனால் இந்த ஆண்டில் அதிக கோல் பெற்றவர்களுக்கான விருதும் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.  

கடந்த பல வருடங்களாக சர்வதேச அளவில் வழங்கப்பட்ட முக்கிய விருதுகளை லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரே வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.