சுற்றுலா அயர்லாந்து ஏ கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை ஏ கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கிடையில் இன்று (01) கட்டுநாயக்கவில் ஆரம்பமான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய அயர்லாந்து ஏ அணி, மஹீஷ் தீக்ஷன மற்றும் தரிந்து கௌஷாலின் பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 159 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இலங்கை A கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த மொஹமட் சிராஸ்
சுற்றுலா அயர்லாந்து A கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கிடையே
இதில், இவ்வாரம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட அணியுடனான போட்டித் தொடருக்காக உடற்தகுதியை நிரூபிக்கத் தவறி இலங்கை அணிக்கு தேர்வாகாமல் போன 18 வயதுடைய பாடசாலை வீரரான மஹீஷ் தீக்ஷன, 9 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து ஏ அணியின் தலைவர் ஹெரி டெக்டர், முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.
இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய அயர்லாந்து ஏ அணிக்கு ஸ்டீபன் டொஹெனி 10 ஓட்டஙகளுடனும், ஜேம்ஸ் மெக்கலம் 24 ஓட்டங்களுடனும் ஏமாற்றம் கொடுத்தனர். அடுத்துவந்த ஜேம்ஸ் ஷெனனை 3 ஓட்டங்களுக்கு ஹஷேன் ராமநாயக்க ஆட்டமிழக்கச் செய்தார்.
இதே வேகத்தில் பந்துவீச நுழைந்த தரிந்து கௌஷால், அயர்லாந்து ஏ அணித் தலைவர் ஹெரி டெக்டரை (26) எல்பியூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து ஏ அணிக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மேலும் நெருக்கடியை கொடுக்கத் தொடங்கினர்.
2020 டி-20 உலகக் கிண்ண நேரடித் தகுதியை இழந்த இலங்கை அணி
அவுஸ்திரேலியாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட்
எனினும், 5ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த லோர்கன் டக்கர் மற்றும் ஆரோன் கிளெஸ்பி ஜோடி 55 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று ஓரளவு நம்பிக்கை கொடுத்தனர். இதில் 51 பந்துகளுக்கு முகங்கொடுத்து 23 ஓட்டங்களைப் பெற்றிருந்த கிளெஸ்பி, மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
எனினும் மத்திய வரிசையில் களமிறங்கி அவ்வணிக்கு நம்பிக்கை கொடுத்த லோர்கன் டக்கர் நிதானமாக அரைச்சதத்தை (47) நோக்கி துடுப்பெடுத்தாடியிருந்தார். பின்னர், அவர் தரிந்து கௌஷாலின் பந்துவீச்சில் போல்ட் ஆகி ஆட்டமிழக்க, அயர்லாந்து ஏ அணியின் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.
இதன்படி, தமது முதல் இன்னிங்ஸிற்காகத் துடுப்பாடிய அயர்லாந்து அணி, 53.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை ஏ அணியின் பந்து வீச்சை பொருத்தவரை, 18 வயதுடைய பாடசாலை வீரரான மஹீஷ் தீக்ஷன 9 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன், தேசிய அணி வீரரான தரிந்து கௌஷால் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















