இந்தியா செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

Sri Lanka Women’s Tour of India 2024

79
Sri Lanka Women’s Tour of India 2024

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (டிசம்பர்) 21ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் சபை நேற்று (28) அறிவித்தது.

இதன்படி இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் இடையிலான முதலாவது (டிச.21), 2ஆவது T20I போட்டி (டிச.23) விசாகப்பட்டினத்திலும், 3ஆவது (டிச.26), 4ஆவது (டிச.28), 5ஆவது மற்றும் கடைசி T20I போட்டி (டிச.30) திருவனந்தபுரத்திலும் நடைபெறவுள்ளது.

2016ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி T20I தொடரில் விளையாட இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

அதேபோல, இந்தியாவில் அண்மையில் நிறைவடைந்த ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்குப் பிறகு இரண்டு அணிகளும் பங்கேற்கும் முதல் சர்வதேசப் போட்டித் தொடர் இதுவாகும். ஏற்கனவே இந்தக் காலப்பகுதியில் நடைபெறவிருந்த பங்காளதேஷ் மகளிர் அணியின் சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால், அதற்கு மாற்றாக இலங்கைக்கு எதிரான தொடர் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<