தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியின்போது, ஐசிசி நடத்தை விதிமுறைகளின் முதல்நிலை மீறலுக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவுக்கு ஐசிசியினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் குறித்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸின் விக்கெட்டை ஹர்ஷித் ரானா கைப்பற்றியதுடன், அதனை கொண்டாடும் விதமாக, பெவிலின் நோக்கி சென்று கொண்டிருந்த பிரேவிஸை நோக்கி சில வார்த்தைகளை கூறினார்.
இதனையடுத்து ஐசிசி நடத்தை விதிகள் 2.5-ன் படி ஒரு சர்வதேச போட்டியின் போது ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தவுடன் அவரை இழிவுபடுத்தும் அல்லது ஆக்ரோஷமான மற்றும் மோசமான வார்த்தைகள், செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்துதல் குற்றமாகும். அந்த வகையில் தற்சமயம் ஹர்ஷித் ரானா நடத்தை விதியை மீறியதாக, அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியை ஐசிசி அபராதமாக வழங்கியுள்ளது.
- இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்
- இந்தியா செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
- IPL ஏலத்துக்கு விண்ணப்பித்துள்ள 1355 வீரர்கள்
மேலும் கடந்த 24 மாதங்களில் ஹர்ஷித் ரானாவின் முதல் விதிமீறல் இது என்பதால், அவருக்கு கூடுதல் அபராதங்கள் ஏதும் விதிக்கப்படவில்லை. மேலும் ஹர்ஷித் ரானா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்பதையும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுவாக முதல்நிலை குற்றங்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரபூர்வ எச்சரிக்கை வழங்கப்படும். அதிகபட்சமாக போட்டி கட்டணத்தில் 50% அபராதமும், ஒன்று அல்லது இரண்டு குற்ற புள்ளிகளும் விதிக்கப்படலாம்.
அதேபோல, 24 மாத காலத்தில் ஒரு வீரர் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி இழப்பு புள்ளிகளை சேகரித்தால், அவை இடைநீக்க புள்ளிகளாக மாற்றப்பட்டு, குறித்த வீரர் தடை செய்யப்படுவார். இரண்டு இடைநீக்க புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகள் அல்லது இரண்டு T20I போட்டிகளில் இருந்து தடை செய்யப்படுவதற்கு சமம் – வீரருக்கு எந்தப் போட்டி முதலில் வருகிறதோ அது அமலாகும்.
இதேவேளை, ஹர்ஷித் ரானா இப்படி விக்கெட் கொண்டாட்டத்தில் வரம்பு மீறுவது இது முதல் முறையல்ல. கடந்த 2024 ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் மயங்க் அகர்வாலை வீழ்த்திய பிறகு அவருக்கு ‘பிளையிங் கிஸ்’ கொடுத்து வழியனுப்பினார். அதற்காக அவருக்கு அபராதமும், ஒரு போட்டியில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















