ஐசிசி தொடர்களை இலங்கையில் ஒளிபரப்பு செய்வதற்கான ஊடக உரிமையை இலங்கையின் முதற்தர வலையமைப்பு மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான டயலொக் ஆசியாட்டா நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.
டயலொக் தொலைக்காட்சி மற்றும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) ஆகியவற்றுக்கிடையிலான ஒப்பந்தத்தின்படி எதிர்வரும் 2028ஆம் ஆண்டுவரை ஐசிசியின் போட்டி தொடர்களை இலங்கையில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை டயலொக் ஆசியாட்டா நிறுவனம் பெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரிலிருந்து விலகும் டேரைல் மிச்செல்
டயலொக் நிறுவனமானது ஐசிசி தொடர்களை தங்களுடைய சொந்த அலைவரிசைகளில் ஒளிபரப்பு செய்யும் என்பதுடன், இணைய ஒளிபரப்பு தளங்கள் மற்றும் இலவச சேவை ஒளிபரப்பு (Free-to-Air) மூலம் இலங்கையின் மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளது.
இலங்கையின் முதற்தர கட்டண தொலைக்காட்சியாக செயற்பட்டுவரும் டயலொக் தொலைக்காட்சியானது உள்ளூர் மற்றும் சர்வதேச அலைவரிசைகளை ஒளிபரப்பு செய்துவருகின்றது. இதில் செய்தி, விளையாட்டு, திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளை சர்வதேச தரத்தில் வழங்கிவருகின்றது.
தற்போது ஐசிசி உடன் இணைந்திருக்கும் டயலொக் தொலைக்காட்சியானது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணம் உட்பட எட்டு தொடர்களின் உரிமையை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை A அணிக்கு ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கிண்ணத் தொடரில் முதல் வெற்றி
இந்த ஊடக உரிமையை பெற்றுக்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, “இலங்கை முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த மதிப்புமிக்க தொடர்களை வழங்குவதற்காக ஐசிசியுடன் இணைந்திருப்பதில் டயலாக் தொலைக்காட்சி பெருமை கொள்கிறது.
கிரிக்கெட்டானது தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கு ஊக்கமளிக்கிறது மற்றும் ஒன்றிணைக்கிறது. ரசிகர்கள் தாங்கள் விரும்பும் விளையாட்டுடன் நெருக்கமாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில், எங்கள் ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் உயர்தர அனுபவங்களை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.
டயலொக் தொலைக்காட்சி ஊடக உரிமையை பெற்றுக்கொண்ட தொடர்கள்
ஆடவர் தொடர்கள்
- ஐசிசி T20 உலகக்கிண்ணம் 2026 (இந்தியா மற்றும் இலங்கை)
- ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2027 இறுதிப்போட்டி (இங்கிலாந்து)
- ஐசிசி உலகக்கிண்ணம் 2027 (தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாப்வே)
- ஐசிசி இளையோர் உலகக்கிண்ணம் 2026 (சிம்பாப்வே மற்றும் நமீபியா)
- ஐசிசி இளையோர் உலகக்கிண்ணம் 2028
மகளிர் தொடர்கள்
- ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணம் 2026 (இங்கிலாந்து)
- ஐசிசி மகளிரி T20 சம்பியன்ஷ் கிண்ணம் 2027 (இலங்கை)
- ஐசிசி மகளிர் இளையோர் T20 உலகக்கிண்ணம் 2027 (பங்களாதேஷ் மற்றும் நேபாளம்)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















