தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் அனுசரணை வழங்கும் டயலொக்

27

சிரேஷ்ட வீராங்கனைகளுக்காக ஒழுங்கு செய்யப்படவுள்ள தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் பிரதான அனுசரணையாளர்களாக இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா (Dialog Axiata PLC) செயற்படவுள்ளது.

ஜப்னா அணிக்காக 2ஆவது அரைச் சதமடித்த ரொன் சந்திரகுப்த

அந்தவகையில் டயலொக் ஆசியாட்டா நிறுவனம் இந்த ஆண்டு நான்காவது முறையாக தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கு தொடர்ச்சியாக அனுசரணை வழங்குகின்றது.

சிரேஷ்ட வீராங்கனைகள் பங்குபெறும் இந்தப் பருவத்திற்கான தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில் கொழும்பு டொரிங்டன் அரங்கில் நடைபெறவுள்ளதோடு தொடரின் இறுதிப் போட்டி மிகவும் கோலகலமாக 13ஆம் திகதி மாலை கொழும்பு சுகததாஸ உள்ளரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இம்முறை நாடு பூராகவும் இருந்து 35 அணிகள் தேசிய சம்பியன் மகுடக் கனவுடன் களமிறங்குகின்றன.

அதேநேரம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரும் தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் இடம்பெறவிருப்பதன் காரணமாக, உலகக் கிண்ணத்திற்கான திறமைகளை இனங்காண்பதற்கும் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் உபயோகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இலங்கை தேசிய வலைப்பந்து அணியே தற்போது ஆசிய வலைப்பந்து நடப்புச் சம்பியன்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் என்பன அனைத்தும் ThePapare.com வாயிலாகவும், Dialog VIU செயலி மற்றும் Dialog TV Channel 140 வாயிலாகவும் நேரடி அஞ்சல் செய்யப்படவிருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

தேசிய வலைப்பந்து தொடரின் நடப்புச் சம்பியன்களாக வர்த்தக வலைப்பந்து சம்மேளனத்தினை பிரதிநிதித்துவம் செய்த HNB அணி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>>மேலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க<<