தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர் குயிண்டன் டி கொக் ஒருநாள் போட்டிகளிலிருந்து அறிவித்திருந்த ஓய்வை மீள பெற்றுக்கொண்டுள்ளார்.
குயிண்டன் டி கொக் ஒருநாள் ஓய்வை மீள பெற்றதுடன், அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான குழாத்தில் இவர் இடம்பெற்றுள்ளார்.
>>2ஆவது T20 போட்டியிலும் இலங்கை இளையோர் மகளிர் அணிக்கு வெற்றி<<
டி கொக் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து T20I போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவதாக தெரிவித்திருந்தாலும், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தையடுத்து நடைபெற்ற தென்னாபிரிக்கா அணியின் குழாத்தில் இவர் இணைக்கப்படவில்லை.
எனினும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மீண்டும் விளையாடவுள்ளதாக இவர் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள், T20I போட்டிகள் மற்றும் நமீபியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு T20I போட்டிக்கான குழாத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<