இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் செட்டேஸ்வர் புஜாரா அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திவந்த புஜாரா கடந்த காலங்களில் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து வாய்ப்பை இழந்திருந்தார்.
>>ஆசியக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு<<
செட்டேஸ்வர் புஜாரா இறுதியாக 2023ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தார். அதனை தொடர்ந்து இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை
இந்த நிலையில் அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளதாக செட்டேஸ்வர் புஜாரா நேற்று (24) அறிவித்துள்ளார்.
புஜாரா இந்திய டெஸ்ட் அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 35 அரைச்சதங்கள் அடங்கலாக 43.60 என்ற சராசரியில் 7,195 ஓட்டங்களை குவித்துள்ளார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<