பானுக்க ராஜபக்ஷவின் ஓய்வினை உறுதி செய்த இலங்கை கிரிக்கெட் சபை

1121

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறுவதனை உறுதி செய்திருக்கின்றது.

>> ராஜபக்ஷ ஓய்வு பெறுவதனை மறுபரிசீலிக்கவும் – லசித் மாலிங்க

பானுக்க ராஜபக்ஷ ஓய்வு பெறுவதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றினை இலங்கை கிரிக்கெட் சபை சற்று முன்னர் வெளியிட்டிருக்கின்றது.

குறித்த ஊடக அறிக்கையில் பானுக்க ராஜபக்ஷ தனது குடும்ப விடயங்களினைக் கருத்திற் கொண்டு, தனது ஓய்வுக்கான கடிதத்தினை இலங்கை கிரிக்கெட் சபையிடம் வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான T20I போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிய 30 வயதான பானுக்க ராஜபக்ஷ இலங்கை அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 18 T20I போட்டிகளி குறிப்பிட்ட போட்டிகளில் 400 இற்கு அதிகமான ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<