இந்தியாவில் நடைபெறவிருக்கும் பங்களாதேஷ் அணியின் T20 உலகக் கிண்ணப் போட்டிகளை இடமாற்றம் செய்யக் கோரி சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (ICC) பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) வேண்டுகோள் விடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>அதிரடி நிறைந்த கிரிக்கெட் ஆண்டில் தடம்பதித்துள்ள இலங்கை<<
இந்த ஆண்டுக்கான IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மானை, கொல்கத்தா அணியினால் இருந்து நீக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு முஸ்பிகுர் ரஹ்மானை நீக்கும் அதிரடி முடிவை BCCI எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்
தங்கள் நாட்டின் முன்னணி வீரர் ஒருவருக்கு இந்தியாவில் விளையாட அனுமதி மறுக்கப்படும் நிலையில், ஒட்டுமொத்த வங்கதேச அணியும் அங்கு விளையாடுவது பாதுகாப்பானதாக இருக்காது என பங்களாதேஷ் அரசு கவலை தெரிவித்துள்ளது.
>>முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்க BCCI உத்தரவு<<
இது குறித்து கருத்து தெரிவித்த பங்களாதேஷ் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், ஒரு வீரருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில், முழு அணிக்கும் எவ்வாறு பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதன் காரணமாகவே இந்தியாவில் பங்களாதேஷ் அணி T20 உலகக் கிண்ணத்திற்காக கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் ஆடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐ.சி.சி. இடம் வலியுறுத்த பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
பெப்ரவரி 7ஆம் திகதி தொடங்கவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில், பங்களாதேஷ் தனது முதல் மூன்று போட்டிகளை கொல்கத்தாவிலும், ஒரு போட்டியை மும்பையிலும் விளையாட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















