குசல் மெண்டிஸின் அபார சதத்தின் உதவியோடும், அசித பெர்னாண்டோ மற்றும் துஷ்மன்த சமீரவின் ஆகியோரது பந்துவீச்சு அபாரத்தோடும், இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை 99 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>>ILT20 தொடரில் களமிறங்கும் எட்டு இலங்கை வீரர்கள்<<
இந்த வெற்றி இலங்கை அணிக்கு, பங்களாதேஷ் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை 2-1 எனக் கைப்பற்றவும் உதவியிருக்கின்றது.
பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியினை அடுத்து இரண்டு அணிகளும் 1-1 என தொடரில் சமநிலை அடைந்திருக்க தீர்மானம் கொண்ட தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி செவ்வாய்க்கிழமை (08) கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலன்க துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். பின்னர் துடுப்பாடத் தொடங்கிய இலங்கை அணிக்கு மூன்றாவது போட்டியிலும் சிறந்த ஆரம்பம் அமையவில்லை. நிஷான் மதுஷ்க ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை செல்ல சற்று நம்பிக்கை வழங்கிய பெதும் நிஸ்ஸங்க 35 ஓட்டங்கள் எடுத்து சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை வழங்காமல் ஏமாற்றினார்.
மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக காணப்படாது போயினும் குசல் மெண்டிஸ் துரித கதியில் ஓட்டங்கள் குவிக்க, அவருக்கு உறுதுணையாக இருந்த இலங்கை அணியின் தலைவர் சரித் அசலன்க நிதானமாக ஓட்டங்கள் சேர்த்தார். இரண்டு வீரர்களும் இலங்கையின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 124 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இலங்கையின் நான்காம் விக்கெட்டாக சரித் அசலன்க ஓய்வறை சென்ற போதும் சதம் விளாசிய குசல் மெண்டிஸ் இலங்கைத் தரப்பிற்கு பெறுமதி வழங்கி இந்தப் போட்டியில் தன்னுடைய ஆறாவது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்தார்.
மெண்டிஸ் உம் ஆட்டமிழக்க இலங்கை அணி இறுதியில் 7 விக்கெட்டுக்களை இழந்து 50 ஓவர்களுக்கு 285 ஓட்டங்கள் பெற்றது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் மெண்டிஸ் 18 பௌண்டரிகள் அடங்கலாக 114 பந்துகளில் 124 ஓட்டங்கள் பெற்றார். சரித் அசலன்க 58 ஓட்டங்களை 9 பௌண்டரிகள் அடங்கலாகப் பெற்றார்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மட் மற்றும் மெஹிதி ஹஸன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 286 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய பங்களாதேஷ் தரப்பானது குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக தவ்ஹீத் ரிதோய் 51 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, துனித் வெல்லாலகே மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைச் சுருட்டி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் குசல் மெண்டிஸ் தெரிவானார்.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen
R
B
4s
6s
SR
Pathum Nissanka
c Parvez Hossain Emon b Tanvir Islam
35
47
4
0
74.47
Nishan Madushka
c Najmul Hossain Shanto b Tanzim Hasan Sakib
1
6
0
0
16.67
Kusal Mendis
c & b Shamim Hossain
124
114
18
0
108.77
Kamindu Mendis
lbw b Mehidy Hasan Miraz
16
20
3
0
80.00
Charith Asalanka
c Mehidy Hasan Miraz b Taskin Ahamed
58
68
9
0
85.29
Janith Liyanage
hit-wicket b Mehidy Hasan Miraz
12
16
0
0
75.00
Dunith Wellalage
c Shamim Hossain b Taskin Ahamed
6
6
1
0
100.00
Wanindu Hasaranga
not out
18
14
2
0
128.57
Dushmantha Chameera
not out
10
8
1
0
125.00
Extras
5 (b 0 , lb 2 , nb 0, w 3, pen 0)
Total
285/7 (50 Overs, RR: 5.7)
Bowling
O
M
R
W
Econ
Taskin Ahamed
10
0
51
2
5.10
Tanzim Hasan Sakib
6
0
41
1
6.83
Tanvir Islam
10
0
61
1
6.10
Mustafizur Rahman
10
0
52
0
5.20
Mehidy Hasan Miraz
10
0
48
2
4.80
Shamim Hossain
4
0
30
1
7.50
Batsmen
R
B
4s
6s
SR
Parvez Hossain Emon
c Nishan Madushka b Dunith Wellalage
28
44
4
0
63.64
Tanzid Hasan
b Asitha Fernando
17
13
3
0
130.77
Najmul Hossain Shanto
b Dushmantha Chameera
0
3
0
0
0.00
Towhid Hridoy
b Dushmantha Chameera
51
78
3
1
65.38
Mehidy Hasan Miraz
c Janith Liyanage b Dunith Wellalage
28
25
4
1
112.00
Shamim Hossain
st Kusal Mendis b Wanindu Hasaranga
12
18
1
0
66.67
Jaker Ali
b Asitha Fernando
27
35
2
1
77.14
Tanzim Hasan Sakib
c Kusal Mendis b Dushmantha Chameera
5
8
0
0
62.50
Taskin Ahamed
b Asitha Fernando
1
3
0
0
33.33
Tanvir Islam
c Nishan Madushka b Wanindu Hasaranga
8
10
2
0
80.00
Mustafizur Rahman
not out
0
1
0
0
0.00
Extras
9 (b 0 , lb 2 , nb 0, w 7, pen 0)
Total
186/10 (39.4 Overs, RR: 4.69)
Bowling
O
M
R
W
Econ
Asitha Fernando
7
0
33
3
4.71
Dushmantha Chameera
8
1
51
3
6.38
Maheesh Theekshana
6
1
18
0
3.00
Dunith Wellalage
8
0
33
2
4.12
Wanindu Hasaranga
8.4
1
35
2
4.17
Kamindu Mendis
2
0
14
0
7.00
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















