ஆஸியை வேகத்தால் கட்டுப்படுத்திய சுரங்க லக்மால்

1096

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் (பகலிரவு) முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை நோக்கி நகர்ந்த அவுஸ்திரேலிய அணியை சுரங்க லக்மால் தனது அபார வேகப்பந்து வீச்சால் கட்டுப்படுத்தியுள்ளார்.

ஆஸியின் வேகத்திற்கு முன் தனியாளாக போராடிய டிக்வெல்ல

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேனின்…

போட்டியின் நேற்றைய ஆட்டநேர நிறைவில் 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த அவுஸ்திரேலிய அணி, ட்ராவிஷ் ஹெட் மற்றும் மெர்னஸ் லெபுச்செங் ஆகியோரின் 166 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 323 ஓட்டங்களை பெற்றதுடன், இலங்கை அணியை விட 179 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

>>Photos: Sri Lanka vs Australia 1st Test – Day 2

இவ்வாறு, 72 ஓட்டங்களுடன் ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி இன்றைய தினம் மேலதிகமாக 10 ஓட்டங்களை பெற்ற நிலையில், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்கஸ் ஹெரிஸ் 45 ஓட்டங்களுடனும், “நைட்வொட்ச்மேனாக” களமிறங்கிய நெதன் லையன் ஒரு ஓட்டத்துடனும் வெளியேறினார்.

எனினும், இதனையடுத்து ஜோடி சேர்ந்த ட்ராவிஷ் ஹெட் மற்றும் மெர்னஸ் லெபுச்செங் இலங்கை அணியின் பந்துவீச்சை சோதித்தனர். நிதானமாக ஓட்டங்களை குவித்த இவர்கள், விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை கடந்ததுடன், மெர்னஸ் லெபுச்செங் தனது கன்னி டெஸ்ட் அரைச் சதத்தை பதிவுசெய்தார். இவரைத் தொடர்ந்து டிக்வெல்லவினால் தவறவிடப்பட்ட பிடியெடுப்பு வாய்ப்பினை பயன்படுத்தி, சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய ட்ராவிஷ் ஹெட் தனது மூன்றாவது அரைச் சதத்தையும், இலங்கை அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் அரைச் சதத்தையும் பெற்றுக்கொண்டார்.

இவர்களின் இணைப்பாட்டம் நீண்டுக் கொண்டிருந்த நிலையில், இலங்கை அணி பல்வேறு பந்துவீச்சு மாற்றங்களை ஏற்படுத்தியது. பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் தனன்ஜய டி சில்வா மற்றும் மித வேகப்பந்து வீச்சாளர் திமுத் கருணாரத்னவும் இதன் போது பயன்படுத்தப்பட்டனர். இதில், தனன்ஜய டி சில்வா நேர்த்தியாக பந்துவீச, லெபுச்செங் துரதிஷ்டவசமான முறையில் 81 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

டிக்வெல்லவின் துடுப்பாட்ட பாணியை நாம் பின்பற்ற வேண்டும் – திமுத்

நிரோஷன் டிக்வெல்லவின் சாதகமான துடுப்பாட்டத்தில் இருந்து தமது அணி அதிகம்…

லெபுச்செங்கின் ஆட்டமிழப்பை தொடர்ந்து, இரண்டாவது புதிய பந்தினை இலங்கை அணி பெற்றுக்கொண்ட நிலையில், சுரங்க லக்மால் தனது ஸ்விங் பந்துவீச்சின் மூலம் ஆஸி. துடுப்பாட்ட வீரர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினார். அணியின் 90வது ஓவரை வீசிய லக்மால் தனது 5 மற்றும் 6வது பந்துகளில் முறையே 84 ஓட்டங்களை பெற்றிருந்த ட்ராவிஷ் ஹெட்டை எல்.பி.டபுள்யூ (LBW)  முறையிலும், அவுஸ்திரேலிய அணித் தலைவர் டிம் பெய்னை வந்த வேகத்திலும் ஆட்டமிழக்கச் செய்தார்.

லக்மாலின் இந்த பந்துவீச்சு பிரதிக்கு பின்னர் இலங்கை அணி, அவுஸ்திரேலிய அணியை தங்களுடைய முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டது. இதன்படி ஆஸி. அணியின் சகலதுறை வீரர் பெட் கம்மின்ஸை 21 பந்துகளுக்கு ஓட்டங்கள் இன்றி களத்தில் கட்டுப்படுத்தியதுடன், துஷ்மந்த சமீர கம்மின்ஸின் விக்கெட்டினை கைப்பற்றினார்.

இதனைத் தொடரந்து பயிற்சிப் போட்டிகளில் இரண்டு சதங்களை கடந்த குர்டிஸ் பெட்டர்சன் (30) கமிறங்கி தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், லக்மால் அவரை ஆட்டமிழக்கச் செய்து தனது ஐந்தவாது விக்கெட்டினை கைப்பற்றினார். இந்த விக்கெட்டானது லக்மாலின் 3வது டெஸ்ட் ஐந்து விக்கெட் குவிப்பாக மாறியதுடன், ஆஸி. அணிக்கு எதிராக பெறப்பட்ட அவரது முதல் 5 விக்கெட் குவிப்பாகவும் பதியப்பட்டது.

இறுதியாக, களத்தில் இருந்த துடுப்பாட்ட வீரர்களில் மிச்சல் ஸ்டார்க் அதிரடியாக 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு களத்தில் நின்றாலும், மறுபக்கம் அறிமுக போட்டியில் விளையாடி வரும் ஜெய் ரிச்சட்சன் ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை திரும்பினார். இதன் அடிப்படையில், அவுஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 323 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. பந்து வீச்சில் சுரங்க லக்மால் 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், டில்ருவான் பெரேரா 2 விக்கெட்டுகளையும், தனன்ஜய டி சில்வா, சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

சிறந்த ஆட்டத்தை தந்தால் மட்டுமே அதிசயத்தை நிகழ்த்த முடியும்: சந்திமால்

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் …

பின்னர், 179 ஓட்டங்கள் பின்னடைவில் இருந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, இன்றைய ஆட்ட நேரத்தின் இறுதிப் பந்தில் விக்கெட்டினை பறிகொடுத்து 17 ஓட்டங்களை பெற்றுள்ளது. திமுத் கருணாரத்ன 3 ஓட்டங்களுடன் பெட் கம்மின்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதேவேளை இந்த போட்டியின் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு இலங்கை அணி 9 விக்கெட்டுகள் கைவசமிருக்க 162 ஓட்டங்களை பெறவேண்டும்.

போட்டி சுருக்கம்