அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து அணித்தலைவி சமரி அதபத்து விலகியுள்ளார்.
மகளிருக்கான தி ஹண்ட்ரட் தொடரில் ஓவல் இன்விசிபல் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சமரி அதபத்து, T20I தொடருக்கான அணியிலிருந்து விலகியுள்ளார்.
>>மே.தீவுகள் அணியில் மீண்டும் இணையும் கெமார் ரோச்<<
எவ்வாறாயினும் T20I தொடரையடுத்து நடைபெறவுள்ள மகளிர் சம்பியன்ஷிப்புக்கான ஒருநாள் தொடரில் அணியுடன் இணைந்துக்கொள்வார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமரி அதபத்து விலகியுள்ளமை அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தாலும், இளம் வீராங்கனைகளுக்கு தங்களுடைய திறமையை வெளிக்காட்ட சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
சமரி அதபத்து அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், உப தலைவியாக பெயரிடப்பட்டுள்ள ஹர்சிதா சமரவிக்ரம அணியின் தலைவியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் சமரி அதபத்துவுக்கு பதிலாக கௌஷானி நுத்யங்கனா அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரையில் T20I போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<