இலங்கை கிரிக்கெட் சபையின் 13 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகள் (SLCSA) இடையிலான டிவிஷன்-III கிரிக்கெட் தொடரில், அக்குறனை அஸ்ஹர் கல்லூரி குருதெனிய மத்திய கல்லூரியுடன் 10 விக்கெட்டுக்களால் அதிரடி வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் விளையாடுமாறு பங்களாதேஷிடம் ICC கோரிக்கை
கடந்த வாரம் அக்குறனை அஸ்ஹர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மைதானச் சொந்தக்காரர்கள் முதலில் குருதெனிய வீரர்களை துடுப்பாடப் பணித்தனர். அதன்படி முதலில் ஆடிய குருதெனிய அணியானது முதல் இன்னிங்ஸில் வெறும் 54 ஓட்டங்களுடன் சுருண்டது.
அக்குறனை அஸ்ஹர் கல்லூரி பந்துவீச்சில் ரிப்கி 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க யூனுஸ் 14 ஓட்டங்களில் 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினர்.
அதன் பின்னர் பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த அஸ்ஹர் கல்லூரி அணியானது 106 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியது. அக்குறனை அணியின் துடுப்பாட்டத்தில் அக்வா அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பின்னர் 52 ஓட்டங்கள் பின்தங்கி இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த குருதெனிய மத்திய கல்லூரி 53 ஓட்டங்களுடன் இம்முறை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அஸ்ஹர் கல்லூரியின் பந்துவீச்சில் மிஸ்பர் மற்றும் ரிப்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஓட்டத்தினை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய அஸ்ஹர் கல்லூரி வெற்றி இலக்கினை விக்கெட் இழப்பின்றி அடைந்தது.
போட்டியின் ஸ்கோர் விபரம்
குருதெனிய மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 54 (35.3) ரிப்கி 18/4, யூனூஸ் 14/3
அஸ்ஹர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 106/6 (31) அக்வா 35, ஹாசம் 30*
குருதெனிய மத்திய கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 52 (33.5) மிஸ்பார் 103, ரிப்கி 193
அஸ்ஹர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 1/0 (0.2)
முடிவு – அக்குறனை அஸ்ஹர் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















