ஆசியக்கிண்ணத் தொடர் 2025; ஆப்கானிஸ்தான் முதற்கட்ட குழாம் அறிவிப்பு

140
ACB name preliminary squad for Asia Cup

செப்டம்பர் 9 தொடக்கம் 28 வரை நடைபெறவுள்ள ஆசியக்  கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 22 பேர் அடங்கிய ஆப்கானிஸ்தான் முதற்கட்ட வீரர்கள் குழாம் வெளியிடப்பட்டுள்ளது. 

>> உபாதை காரணமாக வெளியேறும் வேகப்பந்துவீச்சாளர்

2025ஆம் ஆண்டின் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுகின்றது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானின் முதற்கட்ட குழாத்தில் அண்மைக்காலமாக மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த நட்சத்திர சுழல்வீரர் ரஷீட் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஆப்கானிஸ்தானின் ஆசியக் கிண்ண முதற்கட்ட குழாத்தில் இருந்து, ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக ஐக்கிய அரபு இராச்சியம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஆப்கானிஸ்தான் பங்கெடுக்கும் முத்தரப்புத் T20 தொடருக்காகவும் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

ஆசியக் கிண்ணத் தொடரிற்கான ஆப்கானிஸ்தான் அணியானது குழு B இல் காணப்படுவதோடு, குழு B இல் ஆப்கானோடு ஹொங்கொங், பங்களாதேஷ் மற்றும் ஆசியக் கிண்ண முன்னாள் சம்பியன் இலங்கை ஆகிய அணிகள் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

ஆசியக் கிண்ண ஆப்கான் முதற்கட்ட குழாம் 

ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடால், வபியுல்லா தராக்கில், இப்ராஹிம் சத்ரான், டார்விஷ் ரசூலி, மொஹமட் இஷாக், ரஷீட் கான் (தலைவர்), மொஹமட் நபி, நங்யல், சரபுத்தின் அஷ்ரப், கரீம் ஜனாட், அஷ்மத்துல்லா ஒமர்சாய், குல்படின் நய்ப், முஜீப் சத்ரான், அல்லா கசான்பார், நூர் அஹ்மட், பசால் ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக், பரீட் மலிக், சலீம் சாபி, அப்துல்லா அஹமட்ஷாய், பசீர் அஹ்மட் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<