பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளது.
இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் முத்தரப்பு T20I தொடரில் விளையாடியிருந்தது.
>>IPL ஏலத்துக்கு விண்ணப்பித்துள்ள 1355 வீரர்கள்
தற்போது பாகிஸ்தான் அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 7, 9 மற்றும் 11ஆம் திகதிகளில் மூன்று போட்டிகளும் நடைபெறவுள்ளன.
குறித்த இந்த மூன்று போட்டிகளும் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
போட்டி அட்டவணை
- முதல் T20I – ஜனவரி 7 (தம்புள்ள)
- இரண்டாவது T20I – ஜனவரி 9 (தம்புள்ள)
- மூன்றாவது T20I – ஜனவரி 11 (தம்புள்ள)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















