கொஸ்டாவின் அதிஷ்ட கோல் மூலம் ஈரானை வென்ற ஸ்பெயின்

639

ஈரானின் பாதுகாப்பு அரணை மீறி தியாகோ கொஸ்டா பெற்ற அதிஷ்ட கோல் மூலம் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உலகக் கிண்ணத்தின் தமது இரண்டாவது போட்டியில் தீர்க்கமான வெற்றி ஒன்றை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் B குழுவில் போர்த்துக்கல்லுடன் ஸ்பெயின் தலா 4 புள்ளிகளை பெற்று முதலிரு இடங்களில் காணப்படுவதோடு தனது முதல் போட்டியில் மொரோக்கோவை வீழ்த்திய ஈரான் 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே, வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள இந்த குழுவின் கடைசி இரு போட்டிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகளை தீர்மானிப்பதாக இருக்கும்.

எகிப்தை வீழ்த்தி அடுத்த சுற்றை நெருங்கியுள்ள ரஷ்யா

மொஹமது சலாஹ்வின் எகிப்து அணியை வீழ்த்தி போட்டியை…

கசான் அரங்கில் ரஷ்ய நேரப்படி புதன்கிழமை நடைபெற்ற போட்டியின் ஆரம்பம் தொட்டு ஈரான் கடுமையான தற்காப்பு ஆட்டம் ஒன்றையே வெளிப்படுத்தியது. தனது கோல் எல்லையை சுற்றி அரணாக நின்ற ஈரான் வீரர்கள் ஸ்பெயின் தரப்பினர் அதனை முறியடிக்க விடாமல் காத்தனர். இதனால் முதல் பாதி ஆட்டத்தின் 81 வீதமான நேரம் பந்து ஸ்பெயின் வீரர்களின் கால்களில் சுற்றித் திருந்தபோதும் அவர்களால் கோல் புகுத்த முடியாமல்போனது.

முதல் பாதி: ஸ்பெயின் 0 – 0 ஈரான்

எனினும் இரண்டாவது பாதியில் ஈரானின் தற்காப்பு ஆட்டம் பாதகமாக முடிந்தது. 54 ஆவது நிமிடத்தில் அன்ட்ரெஸ் இனியஸ்டா எதிரணி பெனால்டி எல்லைக்குள் கொஸ்டாவை நோக்கி பந்தை பறிமாற்ற ஈரான் பின்கள வீரர் மாஜித் ஹுஸைனி அந்த பந்தை முதலில் பெற்றார். எனினும் கோல் எல்லைக்குள் இருந்து பந்தை வெளியேற்ற அவர் உதைத்தபோது அது கொஸ்டாவின் முழங்காலில் பட்டு எதிர்பாராமல் வலைக்குள் புகுந்தது.

போட்டியின் 63 ஆவது நிமிடத்தில் ஈரான் பந்தை வலைக்குள் செலுத்தி பதில் கோல் புகுத்த நெருங்கியபோது, அது ஓப்சைட் என அறிவிக்கப்பட்டது.

இதனால் போட்டியின் கடைசி விசில் ஊதப்பட்டபோது ஈரானின் பல வீரர்களும் அதிர்ச்சியில் தோய்ந்தனர். அந்த அணி 2010 உலக சம்பியனுக்கு இந்த போட்டியில் கடும் நெருக்கடி கொடுத்தது.

முழு நேரம்: ஸ்பெயின் 1 – 0 ஈரான்

கோல் பெற்றவர்கள்
ஸ்பெயின் – தியாகோ கொஸ்டா 54′

சவூதியை வீழ்த்தி ரஷ்யாவுடன் அடுத்த சுற்றுக்கு நுழைந்த உருகுவே

Image Courtesy – EPA

உருகுவேயிடம் 1-0 என்ற கோல் அடிப்படையில் கௌரவமான தோல்வியை சந்தித்த சவூதி அரேபியா உலகக் கிண்ண போட்டியின் 16 அணிகள் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. சவூதி அரேபியாவின் தோல்வியோடு A குழுவில் விளையாடும் மற்றொரு அரபு நாடான எகிப்தும் முதல் சுற்றுடன் உலகக் கிண்ணத்திற்கு விடைகொடுத்தது.

உலகக் கிண்ண ஆரம்ப போட்டியில் ரஷ்யாவை எதிர்கொண்ட சவூதி அரேபியா மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 கோல்களை விட்டுக்கொடுத்தது. எனினும் ரொஸ்டொல் ஒன் டொன் நகரில் இன்று (20) உருகுவேயை எதிர்கொண்ட அந்த அணி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியது.

எகிப்தை வீழ்த்தி அடுத்த சுற்றை நெருங்கியுள்ள ரஷ்யா

மொஹமது சலாஹ்வின் எகிப்து அணியை வீழ்த்தி போட்டியை நடத்தும் ரஷ்யா….

எனினும் போட்டியின் 23 ஆவது நிமிடத்தில் தனது 100 ஆவது சர்வதேச போட்டியில் விளையாடிய உருகுவே நட்சத்திரம் லுவிஸ் சுவாரெஸ் கோலொன்றை புகுத்தி தனது அணியை ஆரம்பத்திலேயே முன்னிலை பெறச் செய்தார்.  

கார்லொஸ் சசேஸ் கோனர் கிக் மூலம் பறக்கவிட்ட பந்து சவூதி கோல்காப்பாளர் முஹமது அல் ஒவைசியிடம் இருந்து தவறி சரியாக சுவாரஸை நோக்கி செல்ல அவர் பந்தை இலகுவாக வலைக்குள் புகுத்தினார்.

முதல் பாதி: உருகுவே 1 – 0 சவூதி அரேபியா

மேலும் கோல்கள் இன்றி நீடித்த போட்டியில் சவூதி அணிக்கு சில வாய்ப்புகள் கிடைத்தபோதும் அதனை கோலாக மாற்றும் அளவுக்கு அந்த அணியின் திறமை போதுமாக இருக்கவில்லை. மறுபுறம் போட்டியின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற உருகுவே கோல் பெறுவதில் அவசரம் காட்டவில்லை.

இதனால் இரண்டாவது பாதி ஆட்டம் கோலின்றியே முடிவுற்றது.

இதன்படி A குழுவில் இருந்து உருகுவே மற்றும் ரஷ்ய அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. சவூதி மற்றும் எகிப்தை வீழ்த்திய இந்த இரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. இந்நிலையில் தனது குழுவில் முதலிடத்தை தீர்மானிக்க உருகுவே மற்றும் ரஷ்ய அணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (25) மோதவுள்ளன.

மறுபுறம் எகிப்து மற்றும் சவூதி அரேபிய அணிகள் தனது கடைசி உலகக் கிண்ண போட்டியில் அன்றைய தினம் ஒன்றை ஒன்று எதிர்கொள்ளவுள்ளது.

முழு நேரம்: உருகுவே 1 – 0 சவூதி அரேபியா

கோல் பெற்றவர்கள்
உருகுவே – லுவிஸ் சுவாரெஸ் 23′

ரொனால்டோவின் கோலால் மொரோக்கோ வெளியேற்றம்

Getty Images

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மற்றொரு கண்கவர் கோல் மூலம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் அணி இம்முறை உலகக் கிண்ண போட்டியின் ஆரம்ப சுற்றுடன் மொரோக்கோ அணியை வெளியேற்றியது.

ஈரானுடனான ஆரம்ப போட்டியில் துரதிஷ்டவசமான தோல்வி ஒன்றை சந்தித்த மொரோக்கோ போர்த்துக்கல்லுக்கு எதிராக ஆக்ரோஷமாக, தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் கோல் பெறத் தவறியதோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் தகுதியை இழந்தது.

காயத்தால் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறிய நெய்மார்

வலது கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக நெய்மார் செவ்வாய்க்கிழமை..

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் லுஸ்னிக்கி அரங்கில் B குழுவுக்காக இன்று (20) நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐரோப்பிய சம்பியனான போர்த்துக்கல் மொத்தம் நான்கு புள்ளிகளுடன் அந்த குழுவில் முதலிடத்தில் உள்ளது. போட்டி ஆரம்பித்து வெறுமனே நான்காவது நிமிடத்தில் ரொனால்டோவால் போர்த்துக்கல்லை முன்னிலைபெறச் செய்ய முடிந்தது.

ஜோவாவோ மௌடின்ஹோ அடித்த கோனர் கிக்கை கோல் கம்பத்திற்கு அருகில் இருந்து தலையால் முட்டி ரொனால்டோ அந்த கோலை பெற்றார். ஸ்பெயினுடனான முதல் போட்டியில் ஹெட்ரிக் கோல் போட்ட ரொனால்டோ மொத்தம் 4 கோல்களுடன் உலகக் கிண்ணத்தில் தங்கப் பாதணிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.

அத்துடன் ரொனால்டோவின் இந்த கோலானது அவர் சர்வதேச போட்டிகளில் பெறும் 85 ஆவது கோலாகும். இதன் மூலம் அவர் ஐரோப்பாவில் அதிக கோல் போட்டவராக சாதனை படைத்துள்ளார். ஹங்கேரி அணியின் முன்னாள் வீரர் பிரன்க் பஸ்காஸின் (84) சாதனையையே அவர் முறியடித்தார்.      

முதல் பாதி: போர்த்துக்கல் 1 – 0 மொரோக்கோ

20 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் ஆடும் மொரோக்கோ பதில் கோல் ஒன்றை புகுத்த கடுமையாக போராடியபோதும், போர்த்துக்கல் அணி இரண்டாவது கோலுக்கு முயற்சி செய்தது. குறிப்பாக ரொனால்டோ பல ப்ரீ கிக்குகளை உதைத்தபோதும் எதுவும் வலைக்குள் நுழையவில்லை.   

மொரோக்கோ கோலை நோக்கி 16 உதைகளை உதைத்ததோடு அதில் 10 இலக்கை நோக்கியதாக இருந்தது. அதேபோன்று அந்த அணி போர்த்துக்கல்லை விடவும் அதிக கோனர் கிக் வாய்ப்புகளையும் பெற்றது.

எனினும் இராண்டாவது பாதி ஆட்டத்தில் ஒரு கோல் கூட புகுத்தப்படவில்லை.

முழு நேரம்: போர்த்துக்கல் 1 – 0 மொரோக்கோ

கொல் பெற்றவர்கள்
போர்த்துக்கல் – ரொனால்டோ 4′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<