இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் 25 வயதுடைய ஆஸி வீரர் இணைப்பு

193
Image - Fox Sports

இலங்கை கிரிக்கெட் அணியுடனான பயிற்சிப் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு சதமடித்த இளம் வீரர் கேர்டிஸ் பெட்டர்சன் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக அவுஸ்திரேலிய அணியில் அடுத்த அறிமுக வீரராக அழைக்கப்பட்டுள்ளார்.  

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆஸி அணியில் 20 வயது வீரர்

இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள்…

அவுஸ்திரேலியாவுக்கு குறுகிய கால கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு ஆஸி. அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளது. இதற்காக இலங்கை அணி மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் ஆஸி. கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் விளையாடியது.

இந்த மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியானது கடந்த வியாழக்கிழமை (17) தொடக்கம் சனிக்கிழமை (19) வரை ஹோர்பட்டில் நடைபெற்றிருந்தது. இந்தப் போட்டியானது வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுக்கு வந்திருந்தது.  

இந்த போட்டியில் ஆஸி. கிரிக்கெட் சபை பதினொருவர் அணி சார்பாக விளையாடிய 25 வயதுடைய கேர்டிஸ் பெட்டர்சன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடி (157, 102) ஆட்டமிழக்காது இரண்டு சதங்களை பெற்றிருந்தார். இதனால் அவர் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவாகியிருந்தார்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து நுவன் பிரதீப் நீக்கம்

இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை …

இதன்மூலம் இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஸி. அணி குழாத்தில் நியூ சவுத் வேல்ஸ் அணியின் வீரரான கேர்டிஸ் பெட்டர்சன் இணைக்கப்பட்டுள்ளார். இதுவரையில் எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத கேர்டிஸ் பெட்டர்சன் முதன் முறையாக இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமாகவுள்ளார்.

இந்த செய்தியை ஆஸி. கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவரான ட்ரேவர் ஹொன்ஸ் இன்று (21) உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு வெஸ்டன் அவுஸ்திரேலியா அணியுடனான போட்டியின்மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்பத்தை தனது 18ஆவது வயதில் பெற்றுக் கொண்ட இவர் இதுவரையில் 58 முதல்தர டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3813 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதுவரையில் ஆஸி. இளையோர் அணி, நியூ சவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ், சிட்னி தன்டர் போன்ற அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.

ஒரு நாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை A அணி

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவற்றுக்கு…..

அத்துடன் ஆஸி. டெஸ்ட் அணியின் உபதலைவராக இருந்த ஜொஸ் ஹெசஸ்வூட் உபாதை காரணமாக அணியிலிருந்து விலகியதனால் அதற்கு பதிலாக மற்றுமொரு அறிமுக வீரராக ஜை றிச்சட்சன் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மாற்றங்களின் பின்னரான அவுஸ்திரேலிய குழாம்  

டிம் பெய்ன் (அணித்தலைவர்), ஜொய் ப்ரூன்ஸ், பெட் கம்மின்ஸ், மார்கஸ் ஹாரிஸ், ட்ரெவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஸ்சக்னே, நைதன் லயன், வில் புகௌஸ்கி, மெட் ரென்ஸொவ், மிட்சல் ஸ்டாக், பீட்டர் சிடில், ஜை றிச்சட்சன், கேர்டிஸ் பெட்டர்சன்

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (23) பிரிஸ்பேர்னில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆரம்பமாகவுள்ளது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<