BCCI ஒப்பந்தப் பட்டியலில் இருந்து டோனி நீக்கம்

108
AFP

BCCI இன் 2020 ஆம் ஆண்டு வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் டோனி நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தப் பட்டியலை BCCI இன்று (16) வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 2019 முதல் செப்டம்பர் மாதம் 2020 வரையிலான காலகட்டத்திற்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து ரிஷப் பண்ட் விலகல்

தலையில் பந்து தாக்கி மூளையில் சிறிய…..

இதன்படி, A+ பட்டியலில் விராட் கோஹ்லி, துணைத் தலைவர் ரோஹித் சர்மா, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொண்டனர். இவர்கள் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் பெறுவார்கள். 

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும், அனுபவமிக்க வீரருமான மகேந்திர சிங் டோனி பெயர் இடம்பெறவில்லை. 

கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டோனி விளையாடிய பிறகு ஓய்வு அறிவிக்காமலேயே நீண்டகாலம் கிரிக்கெட்டுக்கு ஓய்வளித்து வந்தார்.

இந்த நிலையில், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வருடாந்த வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து மகேந்திர சிங் டோனி முதல் முறையாக நீக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து டோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரப்போவதாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

எனினும், எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி விளையாடவுள்ளார். 

இதில் நன்றாக விளையாடினால் டி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், A பிரிவில் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஷெடெஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், மொஹமட் ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பன்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பெறும் B பிரிவு பட்டியலில் விர்திமான் சஹா, உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால் ஆகிய 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் கடந்த வருடத்தில் காயத்தினால் அதிக போட்டிகளை விளையாட முடியாமல் போன விருத்திமான் சஹா C பிரிவிலிருந்து B பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

C பிரிவு பட்டியலில் கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாகர், மணீஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, ஷர்துல் தாக்கூர், ஸ்ரேயாஸ் அய்யர், வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவார்கள். 

இந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி

தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட்…..

இதேவேளை, இந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் பிரித்வ் ஷாஹ், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் மற்றும் ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு ஆகியோர் இடம்பெறவில்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<