சீன தாய்ப்பேயிடம் போராடி வீழ்ந்த இலங்கை இளையோர் 

138

இலங்கையின் இளம் கரப்பந்தாட்ட வீரர்கள் பங்கேற்றிருக்கும் 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியின் சுப்பர் 8 சுற்றின் தமது இரண்டாவது ஆட்டத்திலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. சீன தாய்ப்பே அணிக்கு எதிராக இன்று (08) நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் இலங்கை தோல்வியடைந்தது. 

சுப்பர் 8 இல் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை இளையோர் கரப்பந்து அணி

மியன்மாரில் நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய….

மியன்மாரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று (07) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 3-1 என்ற செட்களால் போராடி தோல்வியை சந்தித்தது

இன்றைய போட்டியின் ஆரம்ப செட்டில் இரு அணிகளும் வெற்றித் தாகத்துடன் போட்டியிட்டதோடு இரு அணிகளின் வீரர்களும் மிகவும் உற்சாகத்தோடு நேருக்கு நேர் போட்டியிட்டதை பார்க்க முடிந்தது. இதன்படி கடும் போட்டிக்குப் பின்னர் 26-24 என்ற புள்ளிகளால் சீன தாய்ப்பே வெற்றியீட்டியது

இரு அணிகளும் எதிரணியின் ஆட்ட பாணியை புறிந்துகொண்டு இரண்டாவது செட்டில் நுழைந்த நிலையில் அவதானத்துடன் ஆடியதோடு அந்த செட்டிலும் முன்னிலை பெறுவதற்கு சீன தாய்ப்பே வீரர்களால் முடியுமானது. எனினும், கடைசி வரை கடும் போட்டி நிலவிய இந்த செட்டில் இலங்கை நூலிழையில் (23-25) வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.   

முதலாவது மற்றும் இரண்டாவது செட்கள் இரண்டிலும் குறுகிய இடைவெளியில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் மூன்றாவது சுற்றில் கடும் தீவிரத்துடனேயே இலங்கை களமிறங்கியது.

டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து தொடர் அடுத்த மாதம் ஆரம்பம்

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான….

எவ்வாறாயினும் இந்த செட்டும் மிகவும் போட்டி கொண்ட ஆட்டமாக மாறியதோடு இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்று சரிசமமாக போட்டியிட்டன. இதனால் கடைசி வரை விறு விறுப்பு நிலை நீடித்தது. எவ்வாறாயினும் முதல் இரண்டு செட்கள் போன்றே மூன்றாவது செட்டிலும் இலங்கை அணி கடைசி வரை துரத்தி ஆடிய நிலையில் மீண்டும் ஒரு முறை இரண்டு புள்ளிகளால் அந்த சுற்றையும் இழந்தது. இதில் 26-24 என சீன தாய்ப்பே வெற்றி பெற்றது.  

இதன்மூலம் 3-0 என தோல்வியை சந்தித்த இலங்கை அணி நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. இலங்கை வீரர்கள் நாளை (09) தனது முதல் காலிறுதி போட்டியில் ஆடவுள்ளது.  

மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க