வடக்கின் சமர் 110வது அத்தியாயம் நாளை வியாழக்கிழமை ஆரம்பம்

1160

இலங்கையில் உள்ள பாடசாலைகள் பாரம்பரிய கிரிக்கட் போட்டிகளில் சந்தித்து விளையாடும் காலம் இது.

அதன் அடிப்படையில் யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான ‘வடக்கின் சமர்’ என்றழைக்கப்படும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியின் 110ஆவது அத்தியாயம் நாளை வியாழக்கிழமை 10ஆம் திகதி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பிப்பதற்கான  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வருடம் தனது 200ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் யாழ். மத்திய கல்லூரி, கடந்த வருட தோல்வியை நிவர்த்தி செய்யும் வகையில் வெற்றிக்கான குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளது.

யாழ். மத்திய கல்லூரி அணி

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் மூன்றாம் பிரிவு குழு ஒன்றில் விளையாடும் மத்திய கல்லூரியின் இவ் வருட பெறுபேறுகள் சிறப்பாக அமைந்துள்ளது. இப்பருவத்தில் மொத்தமாக 11 போட்டிகளில் விளையாடி உள்ள யாழ். மத்திய கல்லூரி அணி கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ் புனித பெட்ரிக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி, ஸ்கந்தவரோதயக் கல்லூரி சுண்ணாகம் மற்றும் மாலபே ஆண்கள் பாடசாலை அணிகளோடு வெற்றிபெற்றுள்ளதோடு மத்திய கல்லூரி அனுராதபுரம் மற்றும் புனித பீட்டர்ஸ் கல்லூரி நீர்கொழும்பு ஆகிய அணிகளோடு தோல்வியுற்றுள்ளது.

யாழ். மத்திய கல்லூரி அணியில் சகலதுறை வீரரும் அணித் தலைவருமான எஸ். அலன்ராஜ், வை. கிருபாகரன், யூ. பிரியலக்ஷன் ஆகியோர் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் மூவருடன் அணியின் உப தலைவர் எஸ். கோமேதகன், எஸ். ஜெரோஷன் ஆகியோர் சதம் குவித்த வீரர்களாவர். பந்து வீச்சில் அலன்ராஜ், சகலதுறை வீரர் கிருபாகரன், எஸ். தசோபன், கே. தீபன்ராஜ் ஆகியோர் 30 விக்கெட்களுக்கும் மேல் கைப்பற்றியுள்ளனர்.

யாழ். மத்திய கல்லூரி அணி

எஸ். சுரேஷ் மோஹன் (பயிற்சியாளர்)
எஸ்.அலன்ராஜ் (தலைவர்)
எஸ். கோமேதகன்
டி. செல்வராஜ்
எஸ். கார்த்தீபன்
எஸ். கௌதமன்
கே. தீபன்ராஜ்
எஸ். மதுசன்
வை. கிருபாகரன்
வி.தினொஜன்
எஸ். தஸோபன்
யூ. பிரியலக்ஷன்
வி. திசொத்
எ. அனஸ்ராஜ்
எஸ். மதியலகன்
கே. குகஸ்துஸ்
கே. நிக்ஸன்
எஸ். ஜரொசன்

யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி

இவ்வருடம் இரண்டாம் பிரிவில் விளையாடிவரும் யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணியை பொருத்த வரையில் இப்பருவத்தில் 17 போட்டிகளில் விளையாடி உள்ளது. அவற்றில் திரித்துவ கல்லூரி, கேரி கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை கல்லூரி ஆகிய அணிகளோடு வெற்றி பெற்றுள்ளதோடு அம்பலங்கொட பி.டி குலரத்ன கல்லூரி மற்றும் கேகாலை புனித மேரிஸ் கல்லூரி அணிகளோடு தோல்வியுற்றுள்ளது. இப்பருவத்தில் ஜோன்ஸ் கல்லூரி அணி பெற்ற வெற்றிகளில் கண்டி திரித்துவ கல்லூரி அணிக்கெதிரான போட்டியில் ஈட்டிய இன்னிங்ஸ் வெற்றி அவ்வணியின் சிறந்த வெற்றியாக கருதப்படுகின்றது.

புனித ஜோன்ஸ் கல்லூரி அணியின்  துடுப்பாட்டத்தில் உதவி அணித் தலைவர் எஸ்.ஜெனிப் ளெமிங் மாத்திரமே 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளார். ஜெனி, சந்திரமோகன் தேவபிரசாந்த், மகாலிங்கம் நிலோஜன், அருளானந்தம் கானாமிர்தம் ஆகியோர் சதம் குவித்துள்ளனர்.

இவர்களில் நிலோஜன் 3 சதங்கள் குவித்துள்ளமை விசேட அம்சமாகும். பந்துவீச்சில் அணித் தலைவரும் சுழற் பந்து வீச்சாளருமான அருளானந்தம் கானாமிர்தன், மற்றொரு சுழற் பந்து வீச்சாளர் வசந்தன் யதூசன் ஆகிய இருவர் மாத்திரமே 30 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தியவர்களாவர்.

இது வரை இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் நடந்து முடிந்துள்ள போட்டிகளில் 35 போட்டிகளில் யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரியும் 27 போட்டிகளில் யாழ். மத்திய கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளதோடு 39 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளது.

யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி

பி. லவேந்திர (பயிற்சியாளர்)
எ. கானாமிர்தன் (தலைவர்)
எஸ். ஜெனி பிளெமின்
எ. ஹிரோல்ட் லஸ்கி
எஸ். தினொஜன்
வி. ஜதூசன்
ஜே. கிருஷாந்தூஜன்
கே. கபில்ராஜ்
எம். நிலோஜன்
சி. தேவபிரஷாந்த்
சுபீத்சன்
எம். அபினாஷ்
எஸ். அஜெய்
பி, நிரோஷன்
பி. சொமஸ்கரன்
ஜே. ஸ்டலோன்
எம். சௌமியன்
எஸ். கருனயன்

கடந்த வருடம் நடைபெற்ற போட்டியின் பெறுபேறு

யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி 300/7 மற்றும் 136/7
யாழ். மத்திய கல்லூரி 164/10 மற்றும் 188/10

யாழ் புனித  ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு 84 ஓட்டங்களால் வெற்றி

மார்ச் மாதம் 10ஆம், 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில்  நடைபெறும் இந்த வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கட் போட்டி இலங்கையின் முதல்தர விளையாட்டு மையமான www.thepapare.com  மூலம் உலகம் முழுவதிற்கும் நேரடியாக  ஒளிபரப்பு  செய்யபடவுள்ளமை மிக முக்கிய அம்சமாகும்.  கடந்த இரண்டு வருடங்களாக புனித ஜோன்ஸ் கல்லூரி அணியே வெற்றியை பெற்றுள்ள நிலையில் இவ்வருடம் போட்டி விறு விறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ். மத்திய கல்லூரி அணி

0
« 1 of 18 »

யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி

0
« 1 of 14 »