ரியெல் மெட்ரிட்டுக்கு வெற்றிகள் தேடிக்கொடுத்த சிடான் திடீர் ராஜினாமா

854
Zinedine Zidane has won the Champions League four times at Real Madrid - three times as manager and once as a player

ரியெல் மெட்ரிட் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற நிலையில் அதன் முகாமையாளர் சினேடின் சிடான் தனது பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

அனைத்தும் மாறிவிட்டன, அதனாலேயே நான் இந்த முடிவை எடுத்தேன்என்று ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் உள்ள ரியெல் மெட்ரிட் அணியின் சொந்த மைதானமான சன்டியாகோ பெர்னியுவில் வைத்து இன்று (31) செய்தியாளர்களை சந்தித்த சிடான் தெரிவித்தார்.

ரியெல் மிட்ரிட்டுக்கு ஹட்ரிக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம்

க்ரேத் பேல் அடித்த அபார கோல்கள் மற்றும் பென்சமாவின் அதிஷ்ட கோல் மூலம் லிவர்பூல்..

2016 ஜனவரி மாதத்தில் ஸ்பெயினின் பலம்மிக்க கழகத்தின் முகாமையாளராக பொறுப்பேற்றபின் சிடானின் வழிநடத்தலில் ரியெல் மெட்ரிட் அணி அடுத்தடுத்து மூன்று சம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்றது மட்டுமன்றி ஒரு லா லிகா கிண்ணத்தையும் கைப்பற்றியது.

இந்த கழகத்தை நான் விரும்புகிறேன்என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த அணி தொடர்ந்து வெற்றிகளை பெற வேண்டி இருப்பதோடு வித்தியாசமான குரல், மற்றுமொரு உத்தியை கொண்ட மாற்றம் ஒன்று தேவைப்படுவதாக நான் நினைக்கிறேன். அதனாலேயே நான் இந்த முடிவை எடுத்தேன்என்று சிடான் கூறினார்.

சபாயெல் பனிடஸ் பதவி நீக்கப்பட்ட பின் ரியெல் மெட்ரிட் முகாமையாளராக பொறுப்பேற்ற 45 வயதுடைய பிரான்ஸ் முன்னாள் வீரர் சிடான் 149 போட்டிகளுக்கு அந்த அணிக்கு பொறுப்பாக இருந்துள்ளார். இதில் 104 வெற்றிகள் மற்றும் 29 சமநிலைகளுடன் 69.8 என்ற வெற்றி விகிதத்தை பதிவு செய்துள்ளார். அவரது காலத்தில் ரியெல் மெட்ரிட் அணி ஒன்பது கிண்ணங்களை வென்றுள்ளது.

கொடுப்பதற்கு இன்னும் எதுவும் இல்லை என்று நினைத்தால் நான் வெளியேறி விடுவேன்என்று கடந்த பெப்ரவரியில் அவர் கூறியிருந்தார்.

மெஸ்ஸியின் ஹெட்ரிக் கோல் மூலம் நம்பிக்கையோடு உலகக் கிண்ணம் செல்லும் ஆர்ஜன்டீனா

பிஃபா உலகக் கிண்ண போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பயிற்சிப்….

எனினும் லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி ரியெல் மெட்ரிட் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை தக்கவைத்துக் கொண்டு ஒருசில தினங்களில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டது எதிர்பாராத ஒன்றாகவே கருதப்படுகிறது.

விசித்திரமான தருணத்தில் இதனை அறிவிப்பது எனக்கு தெரியும். ஆனால் இது ஒரு முக்கியமான நேரமும் கூட. எல்லோருக்காகவுமே இதனை நான் செய்கிறேன்என்று சிடான் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த கழகம் 13 ஐரோப்பிய கிண்ணங்களை வென்றுள்ளது. நானும் அதில் ஓர் அங்கமாக இருப்பதை இட்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன்என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்படி ரியெல் மெட்ரிட் அணி ஐந்து ஆண்டுகளுக்குள் நான்காவது முகாமையாளரை தேட வேண்டி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ரியெல் மெட்ரிட் நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் க்ரேத் பேல் இருவரும் அந்த கழகத்துடனான தமது எதிர்காலம் பற்றிய முடிவை வெளியிடப்போவதாக அறிவித்திருக்கும் நிலையிலேயே ஸ்பெயின் கழகத்திற்கு இந்த அதிர்ச்சி அறிவிப்பு கிடைத்துள்ளது.  

வேல்ஸைச் சேர்ந்த முன்கள வீரர் பேல், லிவர்பூல் அணியுடனான இறுதிப் போட்டியில் மேலதிக வீரராக நிறுத்தப்பட்டமை குறித்து அதிருப்தி அடைந்துள்ளார். அதேபோன்று தனது எதிர்காலம் பற்றி விரைவில் அறிவிப்பை வெளியிடப்போவதாக ரொனால்டோ கூறியுள்ளார்.  

ரொனால்டோவின் முடிவு பற்றி சிடானிடம் கேட்டபோதும்தெரியாதுஎன்று அவர் பதில் அளித்தார்.