சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் யுவ்ராஜ் சிங்

243
Yuvraj Singh

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான யுவ்ராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்திருக்கின்றார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த 19 வருடங்களாக தனக்கென ஒரு இடத்தினை பிடித்து வைத்திருந்த யுவ்ராஜ் சிங், இதுவரையில் 40 டெஸ்ட் போட்டிகளிலும், 304 ஒருநாள் போட்டிகளிலும், 58 T20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடி இருக்கும் நிலையிலேயே, தற்பொழுது தனது ஓய்வினை அறிவித்திருக்கின்றார்.

இங்கிலாந்து மண்ணில் பங்களாதேஷை வீழ்த்துமா இலங்கை?

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு..

யுவ்ராஜ் சிங், 2017ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் ஆடியதே இந்திய அணிக்காக அவர் விளையாடிய கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

கடந்த 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டி ஒன்றில் இங்கிலாந்து அணி வீரரான ஸ்டுவார்ட் ப்ரோட்டின் ஓவரில் ஆறு பந்துகளுக்கும் ஆறு சிக்ஸர்கள் விளாசிய யுவ்ராஜ் சிங், அப்போது T20 சர்வதேச போட்டிகள் வரலாற்றில் குறைந்த பந்துகளில் (12) அரைச்சதம் பெற்ற வீரராக உலக சாதனை படைத்தார். இதேநேரம், 2007ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரினை இந்திய அணி வெல்வதற்கும் முக்கிய பங்களிப்பினை யுவ்ராஜ் சிங் வழங்கியிருந்தார்.

இதன் பின்னர் 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரினை இந்திய அணி வெல்வதற்கும் யுவ்ராஜ் சிங் பிரதான காரணமாக இருந்தார். குறித்த ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் யுவ்ராஜ் சிங் 362 ஓட்டங்களை குவித்ததோடு, 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தொடர் நாயகன் விருதினையும் வென்றார். அந்த உலகக் கிண்ணத் தொடரை வெல்ல உதவிய காரணத்தினால் யுவ்ராஜ் சிங், இந்திய கிரிக்கெட் இரசிகர்களின் ஹீரோவாக இன்றும் பார்க்கப்பட்டு வருகிறார்.

இலங்கை அணியின் முக்கிய வீரருக்கு உபாதை

வேகப் பந்துவீச்சாளரான நுவன் பிரதீப் விரல் உபாதை…

அந்த உலகக் கிண்ணத்தை தொடர்ந்து புற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகிய யுவ்ராஜ் சிங், சர்வதேச போட்டிகளில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றிருந்தார்.

யுவ்ராஜ் சிங், புற்று நோய் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாட மாட்டார் என அனைவரும் நினைத்த தருணத்தில், மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட வந்து அவர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 போட்டி ஒன்றில் வெறும் 35 பந்துகளுக்கு 77 ஓட்டங்கள் பெற்று தன்னால் சாதிக்க முடியும் என காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், குறித்த போட்டிக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்காத யுவ்ராஜ் சிங், தற்போது ஐ.பி.எல். T20 போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றார்.

>> இரசிகர்களுக்கு பதிலாக ஸ்மித்திடம் மன்னிப்புக் கோரிய கோஹ்லி

அந்த வகையில் தனது அடிப்படை விலையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள யுவ்ராஜ் சிங், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

தனது 37ஆவது அகவையினை கடக்கும் யுவ்ராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரையில் 11,778 ஓட்டங்களை குவித்திருப்பதோடு 148 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<