பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இரண்டாவது xZahirians புட்சால்

70

மாவனல்லை ஸாஹிரா கல்லூரி, தமது பழைய மாணவர்கள் இடையில் (xZahirians) இரண்டாவது தடவையாக நடாத்தவுள்ள புட்சால் கால்பந்து தொடரின் கிண்ணம் அறிமுகம் செய்யும் நிகழ்வும், ஆரம்ப நிகழ்வும் மாவனல்லை ராலியா ரிஜென்சி ஹோட்டலில் நடைபெற்றது.   

ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலர் வைத்த எண்ணக்கரு ஒன்றின் அடிப்படையில், உருவாக்கப்பட்ட இந்த புட்சால் கால்பந்து தொடர் கடந்த ஆண்டு (2018) முதற்தடவையாக இடம்பெற்றிருந்தது.   

ஹிலாலின் இரட்டை கோலினால் லெபனானிடம் வீழ்ந்த இலங்கை

லெபனானுக்கு எதிரான 2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கை …

முதற்தடவையாக இடம்பெற்ற தொடர் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இரண்டாவது முறையாக இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தொடரினையும் சிறப்பாக நடாத்தி முடிக்க வன்டேஜ் ஆடை (Vantage Shirts) நிறுவனம் ஆடைப்பங்களார்களாக தொடரின் ஏற்பாட்டாளர்களுடன் கைகோர்த்துள்ளது.  

இந்த ஆண்டுக்கான தொடரில் மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களின் 40 அணிகள் வரையில் பங்கெடுக்கவிருக்கின்றன. பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முறைக்கான போட்டிகள் எதிர்வரும் 27ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி முதல் மாவனல்லை ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பறவுள்ளன. 

அதேநேரம், இந்த ஆண்டுக்கான தொடர் நான்கு கிண்ணங்களுக்காக வெவ்வேறு வயதுப்பிரிவுகளில் இடம்பெறவுள்ளன. குறிப்பாக, தொடர் வெற்றிபெறும் அணிகளுக்கு வழங்கப்படும் கிண்ணங்கள், கல்லூரியின் முன்னாள் அதிபர்கள் சிலரை நினைவுபடுத்தும் விதமாக பெயரிடப்பட்டிருக்கின்றன. குறித்த கிண்ணங்களின் விபரம் கீழ்வருமாறு 

  1. டி.எஸ். சாமுவேல் நினைவுக் கிண்ணம்
  2. கே.ஜே. பொன்னையா பிள்ளை சவால் கிண்ணம்
  3. கே.எம். சம்சுதீன் சவால் கிண்ணம்
  4. டி.எல்.எம். ஹனீபா நினைவுக் கிண்ணம்

குறித்த கிண்ண அறிமுக நிகழ்வின்போது, புட்சால் கால்பந்து தொடர் பற்றி கருத்து தெரிவித்த மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவரான Dr. சுல்பி மரிக்கார், இந்த தொடர் ஸாஹிரா கல்லூரியின் பழையின் மாணவர்கள் இடையில் பாரிய எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும், இந்த தொடரில் அதிக பழைய மாணவர்கள் உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்து இங்கு சமுகம் தந்து பங்கேற்கப்பார்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  

மேலும் கருத்து தெரிவித்த மரிக்கார், இந்த கால்பந்து தொடர் மூலம் பழைய மாணவர்களின் நலத்திட்டங்களுக்கு நிதி சேகரிக்க எத்தனித்திருப்பதாக குறிப்பிட்டிருந்ததோடு, கால்பந்து தொடரின் ஏற்பாட்டாளர்களுக்கும் அதன் அனுசரணையாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்திருந்தார். 

இதேநேரம், இந்நிகழ்வில் பேசியிருந்த மற்றுமொரு முக்கியஸ்தரான திரு. நிசாம், புட்சால் கால்பந்து தொடர் ஏற்பாட்டு குழுவில் இடம்பெற்ற மாற்றங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.  

இந்த கால்பந்து தொடரின் ஏற்பாட்டாளர்கள் இந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ள தொடரின் போட்டிகள் அனைத்தினையும் இரசிக்க இரசிகர்களை அழைக்கின்றனர்.  

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…