“ஸ்மித், வோர்னர் இல்லையென்பது நகைப்புக்குறிய விடயம்” – லாங்கர்

397
Image Courtesy - Cricket Australia

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் தடைக்கு முகங்கொடுத்துள்ள ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் இணைக்கப்பட மாட்டார்கள் என்பது நகைப்புக்குறிய விடயமாகும் என அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்திய அணிக்கெதிரான ஆஸி. குழாம் அறிவிப்பு

இந்திய அணியுடான இரு தொடர்களுக்குமான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் குழாம் இன்று (07) அந்நாட்டு

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் ஒருவருட போட்டித் தடைக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த தடையானது எதிர்வரும் மார்ச் மாத இறுதிப் பகுதியில் நிறைவடையவுள்ள நிலையில், அவர்கள் இருவரும் உலகக் கிண்ண குழாத்தில் இணைக்கப்படுவார்களா? இல்லையா? என்பது தொடர்பில் ஜஸ்டின் லாங்கர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் உலகக் கிண்ண குழாத்தில், இணையும் தருணம் நெருங்கி வருகின்றது.  எனினும், அவர்கள் அணிக் குழாத்துடன் இணைவது, உபாதை எவ்வளவு விரைவில் குணமாகும் என்பதிலேயே தங்கியுள்ளது என சுட்டிக்காட்டினார்.

அவுஸ்திரேலிய அணி அடுத்ததாக இந்தியா சென்று, மட்டுப்படுத்த ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் செல்லவுள்ளது.  இந்த தொடரில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகபட்சமாக உள்ளது. மார்ச் 29ம் திகதியுடன் ஸ்மித் மற்றும் வோர்னரின் தடை நிடைறடையவுள்ளதுடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே விளையாட இருவருக்கும் வாய்ப்புள்ளது.

எனினும், இவர்கள் இருவரில் டேவிட் வோர்னர் மாத்திரமே பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் எனவும், ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் ஜஸ்டின் லாங்கர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய டெஸ்ட் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) இன்று (05) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில், இலங்கை அணிக்கு

“ஸ்மித் மற்றும் வோர்னருக்கு கடந்த சில மாதங்கள் கடினமான காலப்பகுதியாக அமைந்துவிட்டன. இது அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் கடினமான காலம் தான். நாம் இப்பொழுது அவர்களின் முழங்கை உபாதை குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம். உபாதை சீக்கிரமாக குணமாக வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக சிகிச்சையளித்து வருகிறோம்.  தடை முடிவடைந்த பின்னர் வோர்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்புள்ளது. எனினும், ஸ்டீவ் ஸ்மித்தின் உபாதை சற்று அபாயகரமாக உள்ளதால், அவர் விளையாடுவது உறுதி செய்யப்படவில்லை.

நாம் இப்போது பேசிக்கொண்டிருப்பது நல்ல கிரிக்கெட் வீரர்கள் (வோர்னர், ஸ்மித்) தொடர்பில் அல்ல. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்கள் தொடர்பில் பேசிக்கொண்டு உள்ளோம். அவர்கள் உலகக் கிண்ண குழாத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற வதந்தி பரவி வருகின்றது. ஆனால், உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களை எமது வசம் வைத்துக்கொண்டு, அவர்களை உலகக் கிண்ண குழாத்தில் இணைக்க மாட்டோம் என்பது நகைப்புக்குறிய விடயமாகும்.

எமது எதிர்பார்ப்பு ஸ்மித் மற்றும் வோர்னர் உலகக் கிண்ணத்துக்கு முன்னர் அதிக போட்டிகளில் விளையாடி, துடுப்பாட்ட பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பது தான். உலகக் கிண்ண அணிக்குழாம் தேர்வுக்கு முன்னர், பாகிஸ்தான் தொடர் மாத்திரமே உள்ளது. எவ்வாறாயினும், ஐ.பி.எல். தொடரில் அவர்கள் விளையாடி திறமையை வெளிப்படுத்துவார்களாயின், நிச்சயமாக உலகக் கிண்ண குழாத்தில் இணைக்கப்படுவார்கள்” என்றார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க