2019 கிரிக்கெட் உலகம் குறித்த ஓர் அலசல்

1426

கடந்த காலங்களைக் காட்டிலும் 2019 ஆண்டானது கிரக்கெட் உலகில் பல்வேறு முக்கிய போட்டித் தொடர்கள் இடம்பெறவுள்ளதால் பரபரப்பும், போட்டித் தன்மையும் கொண்ட வருடமாக அமையவுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அணியின் வீழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற வீரர்கள் காரணமில்லை ; மாலிங்க

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி கடந்த மூன்று வருடங்களாக அடைந்து வரும்…

இம்முறை உலகக் கிண்ணத்தில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதற்காக 7 மில்லியன் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. அதிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான பெரும்பாலான டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதேபோன்று 2.9 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மூன்று முறை சம்பியனான மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் நாடுகள் தகுதிச் சுற்றில் விளையாடி உலகக் கிண்ணத்துக்கு தகுதியினைப் பெற்றுக் கொண்டன.

10 நகரங்களில் உள்ள 11 மைதானங்களிவ் போட்டிகள் நடைபெறவுள்ளன. நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலியா பட்டத்தை தக்கவைக்குமா? ஒருநாள் தவரிசையில் முதலிடத்தில் உள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 3 ஆவது தடவையாகவும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றுமா? அல்லது போட்டிகளை நடத்துகின்ற கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டோனி, மாலிங்க உள்ளிட்டவர்களின் ஓய்வு

2019 உலகக் கிண்ணப் போட்டியோடு இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரபி மொர்டசா, தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான ஹஷிம் அம்லா, பாப் டு பிளெசிஸ், இம்ரான் தாஹிர், டேல் ஸ்டெய்ன், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான சொயிப் மலிக் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரரான மார்லன் சாமுவேல்ஸ் ஆகிய முன்னணி நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மித், வோர்னரின் மீள்வருகை

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒரு வருட போட்டித் தடைக்குள்ளாகிய அவுஸ்திரேலிய அணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் மீண்டும் அவுஸ்திரேலிய அணிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இம்முறை உலகக் கிண்ணத்தில் அவுஸதிரேலிய அணிக்கு பலம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு எப்படி இருந்தது?

அடிக்கடி மாறிய அணித்தலைவர்கள், மிகவும் மோசமான துடுப்பாட்டம், முக்கிய வீரர்களது…

எனினும், தற்பேது இடம்பெற்று வருகின்ற வெளிநாட்டு டி-20 லீக் தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்தினால் மாத்திரமே இவ்விரு வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல் எங்கு நடைபெறும்?

2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியும், இந்திய பாராளுமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் வருவதால் இந்தியாவில் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2009, 2014 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டி நடைபெற்றபோது பாராளுமன்றத் தேர்தலும் நடந்ததால், போதுமான அளவுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனால், குறிப்பிட்ட சில போட்டிகள் மட்டும் தென்னாபிரிக்காவிலும், ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற்றது.

அதேபோன்று இந்தமுறை 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடக்கும் நேரத்தில், ஐ.பி.எல் போட்டியும் நடத்தப்படவுள்ளது. இதனால், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐ.பி.எல் வட்டாரத்திலோ தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்திலோ நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்துவதற்காகக் கடந்த சில வாரங்களாக BCCI அதிகாரிகள் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசுடனும் பேச்சு நடத்தி வருகின்றனர். இது தொடர்பான எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ஆஷஸ் கிண்ண கிரிக்கெட்

உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இறுதியாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் கிண்ண டெஸ்ட் தொடரை 4-0 என அவுஸ்திரேலிய அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த நிலையில், தமது சொந்த மண்ணில் பெற்ற  கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவுஸ்திரேலிய அணி இம்முறை ஆஷஸ் கிண்ணத்தில் சமபலத்துடன் விளையாடவுள்ளது.

குறிப்பாக பந்தை சேதப்படுத்தி மீண்டும் அவுஸ்திரேலிய அணிக்குள் இடம்பெறவுள்ள ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னரின் மீள்வருகையானது இங்கிலாந்து ரசிகர்களினால் கேலிக்கு உள்ளாக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன், ஆஷஸ் டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி இனால் இலங்கை வீரர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம்

கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை…

ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்

இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவுக்கு வந்தவுடன், ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரும் எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பமாகவுள்ளது. டெஸ்ட் தரவரிசையில் முன்னணியில் உள்ள ஒன்பது அணிகள் இடம்பெறும் இப்போட்டிகள் எதிர்வரும் 2 வருடங்களுக்கு 27 தொடர்களாக நடைபெறவுள்ளது. இதன் மூலம் இருதரப்பு தொடர்களும் அடுத்த இரு வருடங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொள்வதுடன், உள்ளூர் மற்றும் அயல் நாடுகளில் நடைபெறும் போட்டிகளும் இதில் அடங்கும். எல்லைப் பிரச்சினை மற்றும் அரசியல் முரண்பாடுகள் காரணமாக இந்தியாவும், பாகிஸ்தானும் ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேபோன்று ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் டெஸ்ட் அந்தஸ்த்து பெற்று முதல் தடவையாக டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவுள்ளன. இதில் 2023 வரையான காலப்பகுதி வரை ஆப்கானிஸ்தான் 11 டெஸ்ட் போட்டிகளிலும், அயர்லாந்து அணி 12 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதன்படி, ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் இந்தியாவும் – மேற்கிந்திய தீவுகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

2020 நோக்கிய பயணம்

மகளிர் கிரிக்கெட் கட்டமைப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் 2020 ஆம் ஆண்டு மீண்டும் மகளிருக்கான டி-20 உலகக் கிண்ணப் போட்டிகள் புதிய மாற்றங்களுடன் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதேபோன்று ஆண்களுக்கான டி-20 போட்டிகள் சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக்கிண்ணப்  போட்டியில் சுப்பர் 12 சுற்றில் நேரடியாகப் பங்குபெறும் தகுதியை முன்னாள் சம்பியனான இலங்கையும், பங்களாதேஷ் அணியும் இழந்துவிட்டன என ஐ.சி.சி அறிவித்துள்ளது. இந்த இரு அணிகளும் தகுதிச்சுற்றுகளில் விளையாடி, உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<