2018 உலகக் கிண்ணம்: போர்த்துக்கல் அணியின் முன்னோட்டம்

810

போர்த்துக்கல் அணி 2016இல் ஐரோப்பிய கிண்ணத்தை வென்று உலகுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பரிவாரம் அதிக எதிர்பார்ப்புடனேயே பிஃபா உலகக் கிண்ணத்திற்காக ரஷ்யா செல்கிறது.

உலகக் கிண்ண வரலாறு

போர்த்துக்கல் இதுவரை ஆறு தடவைகள் உலகக் கிண்ண தொடரில் பங்கேற்றிருப்பதோடு 1966 இல் அரையிறுதியில் தோற்றபின் சோவியட் ஒன்றியத்தை வீழ்த்தி (2-1) மூன்றாவது இடத்தை பிடித்ததே அந்த அணி கிண்ணத்தை வெல்லும் முயற்சியில் அதிகம் நெருங்கி வந்த சந்தர்ப்பமாகும்.

2018 உலகக் கிண்ணம்: ஸ்பெயின் அணியின் முன்னோட்டம்

பிஃபா உலகத் தரவரிசையில் 6 ஆவது…

1966 ஆம் ஆண்டு தொடரே போர்த்துக்கல் அணி உலகக் கிண்ணத்தில் முதல் முறை பங்கேற்றது குறிப்படத்தக்கதாகும். துரதிருஷ்டவசமாக அந்த அணி அடுத்து நான்கு (1970-1982) உலகக் கிண்ண போட்டிகளில் தகுதிபெற தவறியதோடு 1986இல் குழுநிலையோடே வெளியேறியது. அடுத்த மூன்று உலகக் கிண்ணங்களிலும் (1990-1998) போர்த்துக்கலால் தகுதி பெற முடியாமல்போனது.

அண்மைக்காலத்தை பார்க்கும்போது போர்த்துக்கல் அணியானது தென் கொரியா மற்றும் ஜப்பானில் 2002 இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் குழு நிலைப் போட்டிகளுடன் (அமெரிக்காவிடம் 4-0 என தோல்வி, போலந்திடம் 1-0 என வெற்றி மற்றும் தென் கொரியாவிடம் 1-0 என தோல்வி) வெளியேறியது.    

1966 ஆம் ஆண்டு போர்த்துக்கல் அணி

2006 இல் போர்த்துக்கல் தோல்வியுறாத அணியாக 16 அணிகள் பங்கு கொள்ளும் சுற்றில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்துடனான காலிறுதி சமநிலையானதை அடுத்து பெனால்டி (3-1) மூலம் வெற்றி பெற்றது. எனினும், அந்த அணி அரையிறுதியில் பிரான்சிடம் (1-0) தோல்வியை சந்தித்ததோடு மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜெர்மனியிடம் தோற்ற போர்த்துக்கல் தொடரில் 4ஆவது இடத்தை பிடித்தது.

2010 ஆம் ஆண்டு தொடரில் போர்த்துக்கல் அணி 16 அணிகள் சுற்றில் அந்த தொடரில் சம்பியனான ஸ்பெயினிடம் தோற்று வெளியேறியது. 2014இல் ஜெர்மனியிடம் 4-0 என தோல்வி அடைந்து அமெரிக்காவிடம் 2-2 என சமநிலை பெற்று கானாவுக்கு எதிராக 2-1 என வெற்றிபெற்ற நிலையில் குழுநிலையுடன் வெளியேறியது.  

உலகக் கிண்ணத்தை கண்ணீரோடு மெருகேற்றும் இத்தாலி

ரஷ்யாவில் அடுத்த மாதம்…

இம்முறை எவ்வாறு தகுதி பெற்றது?

உலக தரவரிசையில் தற்போது 4 ஆவது இடத்தில் இருக்கும் போர்த்துக்கல், 2016 ஐரோப்பிய சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், போட்டியை நடத்தும் பிரான்ஸை 109 ஆவது நிமிடத்தில் எடர் அடித்த கோலின் மூலம் வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

Credits: Reuters

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் குழு B இல் இடம்பிடித்த போர்த்துக்கல் ஐரோப்பிய சம்பியனான புத்தம்புதிதில் பாசெலில் வைத்து சுவிட்சர்லாந்திடம் தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து 2016 ஒக்டோபரில் அன்ட்ரே சில்வாவின் ஹட்ரிக் கோல் மூலம் பரோ தீவுகளை 6-0 என்ற கோல்களால் வென்றது. 2017 பிஃபா ஒருங்கிணைப்பு (கொன்படரேசன்) கிண்ணத்திலும் போர்த்துக்கல் மூன்றாவது இடத்தை பிடித்தது.

2017 செப்டெம்பரில் ஹங்கேரியிடம் நூழிலையில் தோல்வியை சந்தித்ததால் தமது குழுவில் வெற்றி அணியை தீர்மானிக்கும் போட்டியில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. பின்னர் லிஸ்போனில் நடைபெற்ற போட்டியில் சுவிஸை 2-0 என இலகுவாக வென்று உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது.

உலகக் கிண்ணத்திற்கான பயிற்சி ஆட்டத்தில் எகிப்து, நெதர்லாந்து அணிகளை எதிர்கொண்ட போர்த்துக்கல் அவற்றில் முறையே 2-1 எனவும் 3-0 எனவும் தோல்வியை சந்தித்தது.

உலகக் கிண்ணத்திற்கான ரொனால்டோவின் போர்த்துக்கல் குழாம் அறிவிப்பு

உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு…

முகாமையாளர் மற்றும் ஆட்ட பாணி

அணியின் மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து போலோ பென்டோ பதவி நீக்கப்பட்டதை அடுத்து 2014இல் அணியின் முகாமையாளராக பெர்னாண்டோ சான்டோ நியமிக்கப்பட்டார்.

பெரும் மூளையாக செயற்படும் 63 வயது பெர்னாண்டோ சான்டோ 2016 ஐரோப்பிய கிண்ண சம்பியன் மற்றும் 2017 பிஃபா கொன்படரேசன் கிண்ணத்தில் மூன்றாவது இடம் என்று போர்த்துக்கல் கால்பந்து வரலாற்றில் சிறந்த முகாமையாளர் என்று பெயர் பெற்றுள்ளார்.

பெர்னாண்டோ சான்டோ
Credits: beINsports.com

வீரராக தனது கால்பந்து வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற விரைவில் போர்டோ கால்பந்து கழகத்திற்கு பயிற்சியாளரென முகாமையாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார். AEK ஏதன்ஸ் கால்பந்து கழகம், ஸ்பொர்டிங் லெஸ்போன், எஸ்.எல். பெனிபிகா மற்றும் போக் கால்பந்து கழகங்களுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய அவர் தொடர்ந்து கிரேக்க தேசிய கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார். அவரது பயிற்சியில் கிரேக்க அணி 2014 உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் கிரேக்க கால்பந்து வரலாற்றில் சிறந்த பெறுபேற்றை அவர் பெற்றுக் கொடுத்தார்.

போர்த்துக்கல் கால்பந்து அணியில் பொறுப்பை ஏற்றபின் டென்மார்க் அணிக்கு எதிராக 1-0 என்ற வெற்றியுடன் தனது பணியை ஆரம்பித்ததோடு அந்த அணி 2018 உலகக் கிண்ணத்திற்கு நெருக்கடி இன்றி முன்னேறவும் வழி நடத்தினார். அவர் பின்பற்றும் 4-4-1-1 அமைப்பு கடந்த பல போட்டிகளில் போர்த்துக்கல் அணிக்கு பலன் தருவதாக உள்ளது.

>>காணொளிகளைப் பார்வையிட<<

பலமும் பலவீனமும்

கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியில் இருப்பது மிகப்பெரும் பலம் என்பதோடு, அது ரஷ்யாவில் போர்த்துக்கல் வெற்றி காண்பதிலும் தீர்க்கமானதாக இருக்கும். 5 தடவை பல்லோன் டிஓர் விருதை வென்றிருக்கும் அவர் 2016 ஐரோப்பிய கிண்ணத்தை வெல்வதற்கு போர்த்துக்கல் அணிக்கு பக்கபலமாக இருந்தார். அவரது உற்சாகம் மற்றும் உறுதி உலகக் கிண்ணத்தில் போர்த்துக்கல் அணியில் அதிகம் செல்வாக்கு செலுத்துவதாக இருக்கும்.  

வயதான பின்கள வீரர்களே அந்த அணியின் பலவீனமாக தெரிகிறது. பெபே வயது 35, ப்ரூனோ அல்வேஸ் 36 மற்றும் ஜோஸ் பொன்டே வயது 34 ஆகியோரே ஆரம்ப வரிசை பின்கள வீரர்களாக உள்ளனர். நீண்ட போட்டிகளில் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

முக்கிய வீரர்கள்

பெர்னார்டோ சில்வா

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்திறன் 2014 உலகக் கிண்ணம் தொடக்கம் இன்னும் குறையவில்லை. உண்மையில் கடந்த 4 ஆண்டுகளில் அவரது திறமை மேலும் அதிகரித்துள்ளது. இந்த கோல் இயந்திரம் 17/18 பருவத்தில் ஸ்பெயினின் பலம்மிக்க அணியான ரியெல் மெட்ரிட்டுக்காக அனைத்து போட்டிகளிலும் மொத்தம் 43 கோல்களை பெற்றிருக்கும் நிலையில் ரஷ்யாவில் போர்த்துக்கல் அணிக்கு அவரது ஆட்டம் திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

மற்றொரு வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமான பெர்னார்டோ சில்வா தனது ஆட்டத்தில் வேகம் காட்டி வருவதோடு மன்செஸ்டரின் எடிஹாட் அரங்கில் அவரது ஆட்ட பாணியை பார்க்கலாம். 2016 ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற போர்த்துக்கல் அணியில் காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என்றபோதும் அவர் இழந்த காலத்தில் உலகக் கிண்ணத்தில் ஆட தயார்படுத்திக் கொண்டிருப்பார் என்று நம்பலாம்.        

பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பிரகாசிக்க போகும் இளம் நட்சத்திரங்கள்

எதிர்வரும் 14 ஆம் திகதி ரஷ்யாவில்…

பார்க்க வேண்டியது

போர்த்துக்கல் அணி கோல்கள் பெறும் மத்திய முன்களத்தில் வீரர் ஒருவரை நிலைநிறுத்துவதில் தடுமாறி வருகிறது. ரொனால்டோ மற்றும் நானி ஐரோப்பிய கிண்ணத்தில் இந்த இடத்தை பகிர்ந்துகொண்டனர். ஆனால் தகுதிகாண் போட்டிகளில் அன்ட்ரே சில்வா நம்பிக்கைக்குரிய வீரராக உருவாகியுள்ளார்.

அன்ட்ரே சில்வா

22 வயதுடைய சில்வா போர்டோ அணிக்காக தனது இருபது வயதில் தொழில்சார் கால்பந்து போட்டிகளை ஆரம்பித்ததோடு பின்னர் 2017 ஜுனில் .சி. மிலான் அணியில் இணைந்துகொண்டார். எனினும் அவர் கழக மட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்துவதற்கு போராடுகிறார். ஆனால், அவர் தனது நாட்டுக்காக சிறப்பாக ஆடி ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக ஒரு கோல் புகுத்தும் நிலையில் மிலானுக்காக 24 போட்டிகளில் இரண்டு கோல்களையே பெற்றுள்ளார்.

இறுதிக் குழாம்

கோல்காப்பாளர்கள்: அன்தோனியோ லோபஸ், பெடோ, ருயி பெட்ரிசியோ

பின்கள வீரர்கள்: ப்ருனோ அல்வேஸ், செட்ரிக் சோரஸ், ஜோஸ் பொன்டே, மிரியோ ரூய், பெபே, ரபாயேல் குரைரோ, ரிகார்டோ பெரைரா, ருபன் டயஸ்

மத்தியகள வீரர்கள்: அன்ட்ரியன் சில்வா, ப்ருனோ பெர்னாண்டோ, ஜோ மரியோ, ஜோ மௌடின்ஹோ, மனுவெல் பெர்னாண்டஸ், வில்லியம் கர்வல்ஹோ, அன்ட்ரே சில்வா, பெர்னார்டோ சில்வா

முன்கள வீரர்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோ, கெல்சோ மார்டின்ஸ், கொன்கலோகுடஸ், ரிகார்டோ குவரஸ்மா

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<