பிஃபா மகளிர் உலகக் கிண்ண தொடருக்கான குழு நிலை அறிவிப்பு

164
Image Courtesy - Fifa official Facebook

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா) சார்பில் நடத்தப்படுகின்ற மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடர் பிரான்ஸ் நாட்டில் அடுத்த ஆண்டு ஜூன் 7ஆம் திகதி முதல் ஜூலை 7ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதில் நடப்புச் சம்பியனான அமெரிக்கா எப் குழுவில் இடம்பெற்றுள்ளதுடன், அண்டை நாடுகளுடனான இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

ரொனால்டோ, மெஸ்ஸி ஆதிக்கத்தை வீழ்த்தி பலோன் டி’ஓர் விருதை வென்றார் மொட்ரிக்

ரியல் மெட்ரிட் மற்றும் குரோஷிய கால்பந்து ….

8ஆவது மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் பங்கேற்கும் 24 அணிகளுக்கான குழுக்கள் மற்றும் அட்டவணையை தீர்மானிப்பதற்கான குலுக்கல், பிரான்ஸின் பொலோஞ் பிலான்கோர்ட் நகரில் கடந்த சனிக்கிழமை (08) இரவு நடைபெற்றது.

தொடரின் தொடக்க போட்டியில், குழுவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ்தென் கொரிய அணிகள் மோதுகின்றன. அக்குழுவில் நோர்வே, நைஜீரியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

குழு பி இல் ஜேர்மனி, சீனா, ஸ்பெயின், தென்னாபிரிக்கா ஆகியன இடம்பெற்றுள்ளதுடன், குழு சி இல் அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரேசில், ஐமைக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

குழு டீ இல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, ஆர்ஜென்டீனா, ஐப்பான் ஆகிய பிரபல நாடுகள் இடம்பெற்றுள்ளன. இறுதியாக 2015ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற மகளிருக்கான கால்பந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அமெரிக்காவிடம் 5-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய ஜப்பான் அணி இம்முறை போட்டித் தொடரில் பலத்த போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அட்லடிகோ – பார்சிலோனா மோதல் சமநிலையில்; ரியல் மெட்ரிடுக்கு அதிர்ச்சித் தோல்வி

சர்வதேச போட்டிகளுக்காக வழங்கப்பட்ட ….

அதேபோல, ஜூன் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள இக்குழுவுக்கான முதல் போட்டியில் அண்டை நாடுகளான இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதவுள்ளன. இவ்விரு அணிகளும் ஏற்கனவே 2017இல் நடைபெற்ற யூரோ கிண்ண கால்பந்து போட்டித் தொடரிலும் முதல் ஆட்டத்தில் போட்டியிருந்தன. அதில் 6-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றமை சிறப்பம்சமாகும்.

இதுஇவ்வாறிருக்க, குழு யில் கனடா, கெமரூன், நியூசிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக 2015இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்துடனான காலிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய வரவேற்பு நாடான கனடா மற்றும் 2017 யூரோ சம்பியன் பட்டத்தை வென்ற நெதர்லாந்து அணியும் இக்குழுவில் பிரபல அணிகளாக விளங்குகின்றன.  

சோண்டர்ஸை வீழ்த்தி தொடர்ந்து 3ஆவது முறை ஏப்.ஏ கிண்ண சம்பியனான இராணுவப்படை

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற மிகவும்…

குழு எப் இல் நடப்புச் சம்பியனான அமெரிக்கா, தாய்லாந்து, சிலி, சுவீடன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இக்குழுவில் அமெரிக்கா பிரபல அணியாக விளங்கினாலும், 2016 றியோ ஒலிம்பிக்கில் சுவீடன் அணியுடனான காலிறுதிப் போட்டியில் அமெரிக்கா தோல்வியைத் தழுவியது.

இதில், சிலி அணி முதற்தடவையாக மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் களமிறங்கவுள்ளதுடன், தாய்லாந்து அணி, இறுதியாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் தலைநகர் பரிஸ் உள்ளிட்ட 9 முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ள மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் முதலாவது போட்டி ஜூன் 7ஆம் திகதி பார்க் டெஸ் பிரின்ஸஸ் நகரிலும், இறுதிப் போட்டி ஜூலை 7ஆம் திகதி லியோன் நகரிலும் நடைபெறவுள்ளது.

 >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<