வெலிசர கடற்படை கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற, 2016/17ஆம் ஆண்டுக்கான மகளிர் கால்பந்து பிரிமியர் லீக், டிவிசன் l க்கான சம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில், பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை 2-0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டிய கடற்படை விளையாட்டுக் கழகம் இரண்டாவது முறையாகவும் சம்பியனாக முடிசூடியுள்ளது.

ராணுவ மகளிர் அணியின் சம்பியன் கனவுகளை சிதறடித்த விமானப்டை

ஏகல விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற டிவிஷன் 1 பிரீமியர் லீக் மகளிர் பிரிவுக்கான தீர்மானம் மிக்க போட்டியில்…

இறுதியாக இடம்பெற்ற போட்டியில் வலிமைமிக்க ராணுவப்படை அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் விமானப்படை அணி வெற்றி பெற்றமை, கடற்படை அணிக்கு பெரிதும் சாதகமாக அமைந்தது.  

அதனடிப்படையில் ராணுவப்படை அணி 11 புள்ளிகளுடனும், கடற்படை அணி ஒரு போட்டி எஞ்சிய நிலையில் 9 புள்ளிகளுடனும் தரவரிசையில் காணப்பட்டன.

இதன் காரணமாக கடற்படை மகளிர் அணி தொடரின் சம்பியனாவதற்கு, புள்ளிகள் அடிப்படையில் கீழிருந்த பொலிஸ் அணியை வெற்றி கொள்ளவேண்டிய கட்டாய நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியிருந்தது.

போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களில், பொலிஸ் அணியின் கோல் காப்பாளரினால் விடப்பட்ட தவறினை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இலங்கை கடற்படை அணி முதலாவது கோலை பதிவு செய்துகொண்டது.  

திலினி ஜயசிங்க கோலுக்குள் அடித்த பந்தினை பொலிஸ் அணியின் கோல் காப்பாளர் துலிக்கா சமலி சரியாக கைப்பற்றிக்கொள்ளாமையினால் முன்சென்ற பந்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கடற்படை அணித் தலைவி நிலுக்க அழுத்கே எவ்விதமான தடங்கலுமின்றி   அற்புதமாக கோலாக மாற்றினார்.  

மீண்டும் இரண்டாவது கோலினை பெற்றுக்கொள்வதற்கு தனது பங்களிப்பை வழங்கிய திலினி ஜயசிங்க கோல் கம்பத்துக்கு குறுக்காக உள்ளனுப்பிய பந்தினை துஷானி மதுஷிக்கா ஹெடர் மூலமாக கோலாக மாற்றினார்.

முதல் பாதி: கடற்படை விளையாட்டுக் கழகம் 2-0 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி நேரம் ஆரம்பித்து 10 நிமிடங்கள் கழிந்த நிலையில்  கோல் கம்பத்திலிருந்து சற்று தூரத்திலிருந்து மதுஷிக்கா மீண்டும் முயற்சி செய்தாலும் பந்து கோல் கம்பத்திலிருந்து விலகிச் சென்றது.

இலங்கை நடுவர்களின் தீர்ப்புகளின் எதிர்காலம் கேள்விக்குறியில் – ரூமி

தற்பொழுது நடைபெற்று வரும் FA கிண்ணத்தின் 64 அணிகள் மோதும் சுற்றில் இலங்கை..

மீண்டும் கோல்களை பெற்றுக்கொள்ள மடுஷிக்கா, அழுத்கே ஜயசிங்க மற்றும் பிரவீன பெரேரா ஆகியோர் கடுமையாக முயற்சி செய்த போதிலும், வலிமைமிக்க பொலிஸ் அணியின் களத்தடுப்பினை ஊடறுத்து செல்ல முடியாமல் இருந்தது.  

மறுமுனையில் பொலிஸ் வீராங்கனைகளுக்கு எதிரணியை முகம்கொடுப்பதில் பாரிய சவால் காணப்பட்டது.

முழு நேரம் : கடற்படை விளையாட்டுக் கழகம் 2-0 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

ThePapare.comஇன் போட்டிக்கான சிறந்த ஆட்டக்காரர்: திலினி ஜயசிங்க

கோல் பெற்றவர்கள்  

கடற்படை விளையாட்டுக் கழகம்நிலுக்க அழுத்கே 14’’ துஷானி மதுஷிக்கா 29’’