இந்திய மண்ணில் வெல்ல வேண்டும் என்பதுதான் எனது கனவு: ஹேரத்

465

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வது தான் என்னுடைய கனவு என இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 T-20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி நாளை (08) இந்தியா நோக்கி பயணமாகவுள்ளது.

மெண்டிஸ் நீக்கப்பட்டதை நியாயப்படுத்தும் லெப்ரோய்

இம்மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள இந்தியாவுக்கு எதிரான மூன்று..

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அணிக்கெதிராக சொந்த மண்ணில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 ஆகிய தொடர்களை இழந்த இலங்கை அணி, 8 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரொன்றில் விளையாடுவதற்காக அங்கு செல்லவுள்ளது. அதேவேளை, முதற்தடவையாக அதன் சொந்த மண்ணில் வெற்றி கொள்ளக் காத்துக் கொண்டிருக்கின்றது.  

இந்நிலையில், இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், இந்தியாவின் க்ரிக் பாஸ் இணைத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில், நாங்கள் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் தென்னாபிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியிருந்தோம். ஆனால் நாங்கள் இதுவரை இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய மண்ணில் எந்தவொரு டெஸ்ட் போட்டியையும் வெற்றி கொள்ளவில்லை. எனவே, இந்தியாவுடனான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவதே எனது கனவாகும்.

பாகிஸ்தான் அணியுடன் அண்மையில் நிறைவுக்கு வந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள இத்தருணத்தில், வீரர்களின் தன்னம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. எனவே, நிச்சயம் இந்திய தொடரை வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வெற்றி என்ற மனநிலை மிகவும் முக்கியமானது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அதே உத்வேகத்துடன் விளையாடினால் இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற முடியும்” என்றார்.

இந்தியாவின் முதல்தர கிரிக்கெட்டில் உள்ள கட்டமைப்பே இவ்வாறு உலக கிரிக்கெட்டில் அண்மைக்காலமாக இந்திய அணி வெற்றிகளைப் பெற்றுவருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாடிய நிறைய அனுபவங்கள் அவர்களுக்கு உள்ளனு. இந்த விடயத்தையும் ஹேரத் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாம் இதுதான்

இந்திய அணிக்கு எதிராக நவம்பர் மாதம் 16 ஆம் திகதி…

”ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரை நீங்கள் எடுத்துக் கொண்டால், பெரிய இன்னிங்ஸை விளையாடுவதற்கு அவர்களது வீரர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக அப்போட்டிகளுக்காக தயார்படுத்துகின்ற ஆடுகளங்கள் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக அமைக்கப்படுவதால் பந்து வீச்சாளர்களை மிகவும் சிந்திக்க வைக்கின்றது. ஆனால், அவ்வாறான ஆடுகளங்கள் இலங்கையில் நடைபெறுகின்ற உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்துவதில்லை.

எனினும், இலங்கை அணி வீரர்கள் மாத்திரம் அவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் இலங்கையின் முதல்தர கிரிக்கெட் மற்றும் பிரீமியர் லீக் போட்டிகள் மூன்று நாட்களுக்கு மேல் நடைபெறுகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான வீரர்கள் முதல் தர கிரிக்கெட்டுக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்” என்றும் ஹேரத் குறிப்பிட்டார்.

டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரராக புதிய சாதனை படைத்த ஹேரத், சமீபத்தில் நிறைவடைந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எனினும் அண்மையில் நிறைவடைந்த இந்திய அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின்போது நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் ஹேரத் 5 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்றியிருந்தார்.

இது குறித்து தெரிவித்த அவர், ”இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் எனக்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்ற முடியாமல் போனது. இத்தொடரில் எமது வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. இந்திய வீரர்களின் இணைப்பாட்டத்தையும் எம்மால் முறியடிக்க முடியாமல் போனது. அத்துடன் நாங்கள் ஒரு சில பிடியெடுப்புக்களையும் தவறவிட்டோம். இந்திய அணியின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட வேண்டும் எனத் தெரிவித்தார்.