இரட்டை சதத்தின் மூலம் கோஹ்லியை நெருங்கியுள்ள வில்லியம்சன்

188
Image - Getty Image

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்ததன் மூலம் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள விராட் கோஹ்லியை நிருங்கியுள்ளதுடன் குறித்த தொடரில் முதலிடம் பிடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.  

டி20 தொடரை வென்ற ஆஸி. அணிக்கு புதிய தரவரிசையில் மூன்றாமிடம்

சுற்றுலா அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான…..

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹெமில்டனில் நேற்று (03) நிறைவடைந்துள்ளது. குறித்த போட்டியில் பல சிறப்பான சம்பவங்கள் நடைபெற்றிருந்ததன் காரணமாக தொடர் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையிலேயே சர்வதேச கிரிக்கெட் பேரவையானது டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று (04) வெளியிட்டுள்ளது.

குறித்த போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸில் 715 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதில் நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இரட்டை சதமடித்து அசத்தியிருந்தார். மேலும் டெம் லேதம் மற்றும் ஜீட் ராவல் ஆகியோரும் சதமடித்திருந்தனர்.

டு ப்ளெசிஸின் சதத்துடன் தென்னாபிரிக்க அணிக்கு இலகு வெற்றி

இலங்கை அணிக்கு எதிராக ஜொஹன்னெஸ்பேர்க்கில் உள்ள……

முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது இரட்டை சதமடித்து அசத்தியிருந்த கேன் வில்லியம்சன், வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையில் இரண்டாமிடத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றார். இருந்தாலும் அவரினுடைய சிறப்பான துடுப்பாட்ட வெளிப்படுத்தல் காரணமாக தரவரிசை புள்ளிகள் அதிகரித்து வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளாக 915 புள்ளிகளை பெற்றுள்ளார்.

இதன்மூலம் முதலிடத்தில் காணப்படும் விராட் கோஹ்லியை அவர் நெருங்கியுள்ளார். கோஹ்லியை பின்தள்ளி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தவரிசையில் முதலிடம் பிடிப்பதற்கு இன்னும் 7 புள்ளிகள் மாத்திரமே வில்லியம்சனுக்கு தேவைப்படுகின்றது. இதனை இவர் குறித்த தொடர் நிறைவடைவதற்குள் கைப்பற்றுவாரா என்பதை பெறுத்திருந்து அவதானிக்கலாம்.

மேலும், கேன் வில்லியம்சனுக்கு இன்னுமொரு சாதனை இதன் மூலம் கிடைத்திருக்கின்றது. நியூசிலாந்து அணி சார்பாக டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் அதிகூடிய தரவரிசை புள்ளிகளை பெற்ற முதல் வீரராகவும் அவர் மாறியுள்ளார். இதற்கு முன்னர் பந்துவீச்சாளரான சேர். ரிச்சர்ட் ஹெட்லீ 909 புள்ளிகளை பெற்றிருந்தார்.

டொம் லேதம் ஒரு நிலை முன்னேறி 699 புள்ளிகளுடன் 11ஆவது நிலையை அடைந்துள்ள அதேவேளை, வாழ்நாள் அதிகூடிய தவரிசை புள்ளிகளையும் பெற்றுள்ளார். மேலும், 7 அரைச்சதங்களின் பின்னர் கன்னிச் சதமடித்த ஜீட் ராவல் 5 நிலைகள் முன்னேறி 591 புள்ளிகளுடன் 33ஆவது நிலையை அடைந்துள்ளார்.

பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸில் 126 ஓட்டங்களை குவித்து தனி மனிதனாக போராடிய தமீம் இக்பால் 11 நிலைகள் உயர்ந்து 626 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் ஜொனி பெயர்ஸ்டோவுடன் சேரந்து 25ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.

பங்களாதேஷ் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோடியாக இணைந்து அணியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீட்க போராடி, இணைப்பாட்டமாக 235 ஓட்டங்களை குவித்திருந்த மஹ்மதுல்லாஹ் (146) மற்றும் சௌமியா சர்கர் (149) ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஒருநாள் தரவரிசையில் இழந்த இடத்தை மீண்டும் பெற்றது நியூசிலாந்து

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை….

மஹ்மதுல்லாஹ் 12 நிலைகள் முன்னேறி வாழ்நாள் அதிக பட்ச புள்ளிகளாக 562 புள்ளிகளை பெற்று 40ஆவது நிலையை அடைந்துள்ளார். மேலும், சௌமியா சர்கார் 25 நிலைகள் முன்னேறி 449 புள்ளிகளுடன் 67ஆவது நிலையை அடைந்துள்ளார்.  

புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை (முதல் ஐந்து இடங்கள்)

  1. விராத் கோஹ்லி (இந்தியா) – 922 புள்ளிகள்
  2. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) – 915 புள்ளிகள்
  3. சடீஸ்வர் புஜாரா (இந்தியா) – 881 புள்ளிகள்
  4. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) – 857 புள்ளிகள்
  5. ஜோ ரூட் (இங்கிலாந்து) – 763 புள்ளிகள்

இதேவேளை, நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் குறித்த போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தாலும் அவருக்கு புதிய தரவரிசையில் 2 நிலைகள் பின்னடைவு ஏற்பட்டு 8ஆவது நிலைக்கு வந்துள்ளார். மேலும், 6 விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் சௌத்தி 766 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 9ஆவது இடத்தில் நீடிக்கின்றார்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியில் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த நைல் வெக்னர் 3 நிலைகள் உயர்ந்து 745 புள்ளிகளுடன் 11ஆவது நிலையில் காணப்படுகின்றார்.

ஒருநாள் தரவரிசையில் இழந்த இடத்தை மீண்டும் பெற்றது நியூசிலாந்து

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட்…..

புதிய டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசை (முதல் ஐந்து இடங்கள்)

  1. பெட் கம்மின்ஸ் (அவுஸ்திரேலியா) – 878 புள்ளிகள்
  2. ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து) – 862 புள்ளிகள்
  3. ககிஸோ ரபாடா (தென்னாபரிக்கா) – 851 புள்ளிகள்
  4. வேர்னன் பிலாண்டர் (தென்னாபிரிக்கா)  – 813 புள்ளிகள்
  5. ரவீந்திர ஜடேஜா (இந்தியா) – 794 புள்ளிகள்