முத்தரப்பு T-20 தொடருக்கு இந்திய அணியில் பல மாற்றங்கள் இடம்பெறலாம்

1444

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள “சுதந்திர கிண்ண” T-20 முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அணித்தலைவர் விராட் கோஹ்லி, அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஜெஸ்பிரிட் பும்ராஹ் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்க தேர்வாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.  

[rev_slider LOLC]

இலங்கை அணியில் களமிறங்குவதற்கு தயாராகும் அஞ்செலோ மெதிவ்ஸ்

தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலியினால் பங்களாதேஷ்…

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடரில் இலங்கையுடன் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழு இந்த வார இறுதியில் கூடவுள்ளது.

இதன்போது இந்திய அணியின் எதிர்வரும் வேலைப்பளு கொண்ட போட்டி அட்டவணை பற்றி அதிகம் கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்திய அணி எதிர்வரும் காலங்களில் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு கடினமான சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவிருக்கின்றது. அதோடு தொடர்ந்து அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக் கிண்ண போட்டியிலும் ஆடவுள்ளது. இந்நிலையில் முக்கிய வீரர்களை காயங்கள் இன்றி பாதுகாத்துக் கொள்வது குறித்து தேர்வுக் குழுவினர் கவனம் செலுத்தியுள்ளனர்.   

இதன்படி தற்போதைய தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற சில வீரர்களுக்கு சுதந்திர கிண்ணத்தில் ஓய்வு அளிப்பதற்கு இந்திய நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.

இதில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜெஸ்பிரிட் பும்ராஹ்வுக்கு முத்தரப்பு T-20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு முஹமது சிராஜ், பசில் தம்ப்பி, ஜய்தேவ் உனத்கத் அல்லது ஷர்துல் தகுர் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர் அணிக்கு அழைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு நெருங்கிய வட்டாரம் மூலம் தெரியவருகின்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

உங்களது சொந்த இன்னல்களில் திசரவை பாருங்கள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தனது எடை பற்றி பிரித்தானிய பத்திரிகைகள் நையாண்டியாக …

குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த யோக்கர் பந்து வீசுவதில் சிறப்பு வீரரான தம்ப்பி, சொந்த மண்ணில் நடத்த இலங்கைக்கு எதிரான T-20 தொடரில் மேலதிக வீரராக அழைக்கப்பட்ட நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் அவர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  

அணித்தலைவர் விராட் கோஹ்லி தென்னாபிரிக்காவில் அனைத்துப் போட்டிகளிலும் ஆடிய நிலையில் அவர் இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்ற முடிவை எடுப்பதற்கான தேர்வு அவரிடமே வழங்கப்பட்டுள்ளது.  

இந்திய கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் இந்தியாவின் PTI செய்தி முகாமைக்கு கூறியதாவது, “விராட்டுக்கு ஓய்வு தேவைப்பட்டால் அதனை அவர் பெற முடியும். விராட்டை பொறுத்தவரை இத்தொடரில் தான் விலகுவதா, இல்லையா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும். இந்த பருவத்தின் கடைசி T-20 தொடர் என்பதால் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது எமக்கு தெரியவில்லை. இந்த தொடர் முடிந்ததும் இரண்டு வாரங்களில் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு தயாராக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.    

விராட் கோஹ்லி ஓய்வு எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் ரோஹித் ஷர்மா அல்லது அஜிங்கியா ரஹானே அணியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஷெஹான் மதுஷங்க சுதந்திர கிண்ணத்தில் விளையாடுவது சந்தேகம்

பங்களாதேஷுக்கு எதிரான முதல் T20 இல் தனது கன்னி T20 போட்டியில் ஆடிய மதுஷங்க …

“(சுதந்திர கிண்ணத்தில்) சிரேஷ்ட வீரர்களுக்கு ஓய்வு அளிப்பது குறித்து தேர்வாளர்களின் மனதில் உள்ளது. மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் உள்ள, தொடர்ச்சியாக ஆடுபவர்களுக்கு வேலைப்பளுவை குறைக்க ஓய்வு வழங்குவதற்கான சாத்தியம் பற்றியே அவர்கள் நம்புகின்றனர். தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் அவர்களின் உடலுக்கு கடினமாக இருந்தது. இலங்கை சுற்றுப்பயணமே சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்க தகுந்ததாக உள்ளது” என்று இந்திய கிரிக்கெட் சபை அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பமாகும் சுதந்திர கிண்ண தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.

லீக் மட்ட போட்டிகளில் ஒரு அணி ஏனைய அணிகளுடன் இரு தடவைகள் மோதவுள்ளன. இதில் முதலிரு இடங்களை பிடிக்கும் அணிகள் 18ஆம் திகதி நடக்கும் இறுதிப் போட்டியில் மோதும்.