மோர்க்கல், அம்லா சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார்களா?

868

தென்ஆபிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான மோர்னி மோர்க்கல் மற்றும் ஹசிம் அம்லா ஆகியோரை இங்கிலாந்தின் உள்ளூர் (county) கிரிக்கெட் கழகங்கள் தமது கழகங்களில்கொல்பாக்திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ள அனுகியதாக ESPN செய்தி நிறுவனம் கடந்த வாரம் தகவல் வெளியிட்டிருந்தது.

மோர்னி மோக்கலைவோர்க்சயர்கழகமும் அம்லாவை வேறு சில கழகங்களும் அனுகியதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.

மொயின் அலியின் சகலதுறை ஆட்டத்தால் இங்கிலாந்துக்கு தொடர் வெற்றி

மொயின் அலியின் சிறந்த சகலதுறை ஆட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவுடனான நான்காவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் 177 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் 3-1 என கைப்பற்றியது.

தென் ஆபிரிக்காவின் பல வீரர்கள்கொல்பாக்திட்டத்தின் கீழ் இங்கிலாந்தின் உள்ளூர் கழகங்களுக்காக விளையாடச் சென்றுள்ளமை அவ்வணிக்கு பல திறமையான வீரர்களின் இழப்புக்கு காரணமாக அமைந்தது. முக்கியமாக சர்வதேச அரங்கில் தென் ஆபிரிக்க அணிக்காக பல போட்டிகளில் விளையாடிய கெய்ல் அப்போட் மற்றும் வில்லி ருசோவ் ஆகியோர் இங்கிலாந்தின் கழகங்களுக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொல்பாக்திட்டம் என்பது சுலோவாக்கியாவின் கைப்பந்து வீரர்மரோஸ் கொல்பாக்இனால் 2003ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்ததனால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். இதுவே, இப்பெயர் வரக் காரணம்.

அதாவது, இத்திட்டத்தின் சாராம்சம் என்னவென்றால் இங்கிலாந்தின் உள்ளூர் கழகங்களுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்படும் வெளிநாட்டு வீரர், உள்ளூர் வீரராகவே கருதப்பட்டு சகல உரிமைகளும் வழங்கப்படும் என்பதுடன், ஒப்பந்தக் காலத்தில் அவர் தனது சொந்த நாட்டு அணிக்காக எந்தவிதமான சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள முடியாது என்பதாகும்.

இங்கிலாந்தின் உள்ளூர் கழகங்களுக்காக விளையாடும் வீரருக்கு தென் ஆபிரிக்காவின் உள்ளூர் கழகங்களுக்காக விளையாடும் வீரரை விட அதிக சம்பளம் வழங்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

எப்படியிருப்பினும் இவ்விடயம் குறித்து ஹசிம் அம்லா இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்காவிட்டாலும் மோர்னி மோக்கல் ஏற்கனவே தனது ஓய்வு குறித்து ஒரு சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தமையால் அவர் இங்கிலாந்து செல்ல வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகின்றது.

இது குறித்து மோர்னி மோக்கல் கருத்துத் தெரிவிக்கையில் நான் தென் ஆபிரிக்க அணிக்காக ஒரு தசாப்தத்திற்கு மேலாக விளையாடி விட்டேன். தென் ஆபிரிக்க அணிக்காக விளையாடுவதையே விரும்புகின்றேன். எனினும் 2019 உலகக் கிண்ணம் வரை என்னால் சிறப்பாக விளையாட முடியுமா என்பது சந்தேகத்திற்குறிய விடயமாகும். எனவே புதிய வீரர்களுக்கு இடமளிப்பது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன் என தெரிவித்திருந்தார்.

ஒருநாள் அரங்கில் மற்றுமொரு சாதனை படைக்கவுள்ள மாலிங்க

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க மற்றுமொரு சாதனையை நிகழ்த்தவுள்ளார்.

மோர்க்கல் தென் ஆபிரிக்க அணிக்காக 76 டெஸ்ட் மற்றும் 150க்கும் மேற்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள வீரர். அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை 3-1 என தென் ஆபிரிக்க அணி இழந்திருந்ததுடன் அவ்வணி வீரர்கள் யாரும் குறித்த தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை.

இங்கிலாந்துடனான போட்டிகளில் ஹசிம் அம்லா பெரிதாக சோபிக்காவிட்டாலும் தென் ஆபிரிக்க அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்தவர் என்பது நிதர்சன உண்மையாகும். குறிப்பாக இந்திய அணியின் விராட் கோலி படைத்த பல சாதனைகளை தகர்த்து கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக வலம் வரும் அம்லா, இன்றும் தனது துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்காவுக்கு முக்கிய பலம் சேர்க்கும் ஒருவராக உள்ளார்.

அவர் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறும் பட்சத்தில் அது தென் ஆபிரிக்க அணிக்கு பேரிழப்பாக மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வளர்களை அதிர்ச்சியில் உறையச் செய்யும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.