சமிந்த வாஸிடமிருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை

1236

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு டி20  தொடர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளின் பங்குபற்றலுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

[rev_slider LOLC]

2012ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு இலங்கையில் நடாத்தப்படுகின்ற மிகப் பெரிய போட்டித் தொடராக இது அமையவுள்ளது. எனினும், இப்போட்டித் தொடரில் இலங்கை அணியுடன் மோதவுள்ள பிரபல இந்திய அணி, இலங்கை அணியை அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அண்மைக்காலமாக வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், சந்திக்க ஹத்துருசிங்கவின் வருகையைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணியுடனான அனைத்து தொடர்களையும் கைப்பற்றியது போல சுதந்திர கிண்ணத்திலும் இலங்கை அணி வெற்றிபெறும் என இலங்கை ரசிகர்கள் மத்தியில் அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும், இலங்கை அணியில் உள்ள பெரும்பாலான வேகப்பந்துவீச்சாளர்கள் தற்போது உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளதால், சுதந்திர கிண்ண முத்தரப்பு தொடரிற்கு முன் குணமடைந்துவிடுவார்களா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் நிலவி வருவதுடன், பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்கவுக்கும் கிரிக்கெட் அணி தொடர்பிலான தனது எதிர்கால வியூகத்தை சிறப்பாக முன்னெடுப்பதில் மிகப் பெரிய தடையாகவும் அது அமைந்துள்ளது.

நெருங்கிவரும் 2019 உலகக் கிண்ணத்தில் திசரவிடம் நம்பிக்கை கொள்ளும் இலங்கை

கடந்த சில வருடங்களாக இலங்கை வீரர்கள், அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர் உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருவது அணியின் செயற்பாடுகளில் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனவே இதற்கு உடனடித் தீர்வாக உபாதையிலிருந்து பூரண குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விஞ்ஞான ரீதியாகப் பயிற்சி நுட்பங்களை வழங்குவதற்கும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், இலங்கை அணிக்காக 350 டெஸ்ட் விக்கெட்டுகளையும், 400 ஒரு நாள் சர்வதேச விக்கெட்டுக்களையும் கைப்பற்றி வேகப்பந்துவீச்சில் அசத்தி சாதனை படைத்த முன்னாள் வீரரான சமிந்த வாஸிடம் இருந்து தற்போது இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். அதுமாத்திரமன்றி, இங்கு அவரது திறமை மட்டுமல்ல, சுமார் 15 வருடங்களாக எந்தவொரு பாரிய உபாதைகளுக்கும் முகங்கொடுக்காமல் எவ்வாறு தனது உடற்கட்டமைப்பை சிறப்பான முறையில் பேணி வேகப்பந்துவீச்சாளராக ஜொலித்தார் என்ற மந்திரத்தையும் இளம் வீரர்கள் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதிலும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில், சமிந்த வாஸ் ஒரேயொரு உபாதைக்கு மாத்திரம் முகங்கொடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 1998ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, டெஸ்ட் வரலாற்றில் முதல் தடவையாக அவ்வணியை வெற்றிகொண்டு புதிய சாதனை படைத்தது. எனினும், குறித்த தொடரில் இடம்பெற்றிருந்த சமிந்த வாஸுக்கு துரதிஷ்டவசமாக முதுகெலும்பில் ஏற்பட்ட உபாதையினால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து நாடு திரும்புவதற்கு நேரிட்டது.

அவர் எப்படி உபாதைகளுக்கு முகங்கொடுக்காமல் இவற்றையெல்லாம் செய்தார்? அவரது வாழ்நாள் இரகசியம் என்ன? அதிலும், 100 டெஸ்ட் மற்றும் 300 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது மாத்திரமல்லாது, இங்கிலாந்தின் நான்கு முக்கிய பிராந்திய கவுண்டி அணிகளான ஹாம்ப்ஷெயர், மிட்ல்செக்ஸ், வோர்கெஸ்டெர்ஷயர் மற்றும் நொர்தம்ப்டன்ஷெயர் ஆகிய அணிகளையும் சமிந்த வாஸ் பிரதிநிதித்துவப்படுத்தி பந்துவீச்சில் தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

Chaminda Vaasஉண்மையில் வாஸ் இலங்கை அணியின் திறமையான பந்துவீச்சளராக இருக்காவிட்டாலும், தொடர்ந்து சிறப்பாக விளையாடுகின்ற ஆற்றலைக் கொண்ட உறுதியான வீரராகத் திகழ்ந்தார். இதனால் அவர் இலங்கை அணியின் ஏனைய பந்துவீச்சாளர்களையும் முந்திக் கொண்டு, கிரிக்கெட் உலகில் தனக்கென தனியொரு இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனவே டெஸ்ட் அரங்கில் 355 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சமிந்த வாஸிற்குப் பிறகு இலங்கை அணியில் உருவாகிய அடுத்த சிறந்த வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் ஆவார். இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லக்மால் 102 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

அதிலும் குறிப்பாக, தனது சொந்த முயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம், சிறந்த வேகப்பந்துவீச்சாளராக ஜொலிக்க முடிந்ததாக வாஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். அத்துடன், உடற்தகுதியை உபாதைகளின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு வழமையான உடற்பயிற்சி வேலைகளைத் தவிர, அதிகளவான நேரங்களை உடற்பயிற்சி நிலையங்களிலும் செலவிடுவதற்கு அவர் வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் அவர் மிகவும் நேசித்த கோல்ட்ஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு உள்ளுர் போட்டியிலும் கூட அவரால் விளையாட முடியாமல் போனது.

எனவே தற்போதுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர்களின் பயிற்சி முறைகளை மீண்டும் மீண்டும் ஆராய வேண்டிய அவசியம் உள்ளது. அதுவும் தற்போது ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து பயிற்சியளித்தால், மூன்றாவது நாள் ஓய்வு நாளாக இருக்கும். ஏனெனில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பந்துவீசினால் உபாதைகளுக்கு அவர்கள் முகங்கொடுக்க நேரிடும் என கருதி முன்னெச்சரிக்கையாக 3ஆவது நாளில் ஓய்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த முறைதான் தற்போது பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. எனவே இதன் மூலம் அவர்களுக்கு குறைந்தளவு பயிற்சிகளே வழங்கப்படுவதால் வேகப்பந்து வீச்சாளர்களின் வீழ்ச்சிக்கும், தொடர் பின்னடைவுக்கு இதுவும் முக்கிய காரணமாக மாறிவிட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களுக்கான நுட்பங்களை பின்பற்றுவதை ஒருபுறம் ஒதுக்கிவைத்து விட்டு, இலங்கை வீரர்களுக்கு சமிந்த வாஸ் போன்ற மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளரின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நேரம் இதுவேயன்றி வேறில்லை. நீங்கள் உபாதையில்லாமல் விளையாடினால் மாத்திரம்தான் உங்களுக்கு இன்னும் இன்னும் சிறப்பாக பந்துவீசி வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இலங்கை உள்ளூர் T20 போட்டிகள் ஆரம்பம்

இதேவேளை, வேகப் பந்துவீச்சாளர்களின் பற்றாக்குறைக்கும், உபாதைகளுக்கும் மற்றொரு முக்கிய காரணமாக வீரர்களுக்கான தவறான நோயறிதல் மற்றும் மறுவாழ்வு செயல்முறை கருதப்படுகின்றது.

இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடிய மற்றுமொரு நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான தம்மிக பிரசாத் விடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணிக்காக விளையாடிய ஒரு சிறந்த வீரராக பிரசாத் விளங்கினார். 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவ்வணிக்கு எதிராக ஹெட்டிங்லியில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் டெஸ்ட் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அதிலும், 2015இல் உலகின் தலைசிறந்த முதல் 10 டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் இடம்பெற்ற தம்மிக பிரசாத், அந்த ஆண்டின் பிற்பகுதியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சத்திர சிகிச்சை செய்து கொண்டார். இதனால், அவருக்கு இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

முதலில் சிறியதொரு உபாதைக்கு உள்ளாகியிருந்த பிரசாத், தவறான வைத்திய ஆலோசனை மற்றும் வழிநடத்தலால் உபாதையிலிருந்து மீள்வதற்கான உரிய புனர்வாழ்வு பெறும் முயற்சியை கைவிட்டுதான் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இறுதியில் சத்திர சிகிச்சை செய்யும் நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டது மாத்திரமல்லாது கிரிக்கெட் அரங்கிலிருந்தும் ஒதுங்கியிருப்பதற்கு நேரிட்டது.

அதிலும், அவரது மறுவாழ்வு பணியின் ஒரு பகுதியாக, மருத்துவகள் அவரை டம்பல் பயிற்சிகளை செய்யும்படி கட்டாயப்படுத்தினர். அதையும் செய்ய தவறியதால் அவரது வலது தோள்பட்டை மீண்டும் ஒருமுறை உபாதைக்குள்ளாகியது. பின்னர், அவர் மூன்றாவது தடவையாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

எனவே சமிந்த வாஸ் போன்று, கடுமையாகப் போராடி விக்கெட்டுக்களை வீழ்த்துகின்ற திறமை தம்மிக பிரசாதிடமும் உண்டு. எனினும் உபாதைக்குப் பிறகு தற்போது உள்ளுர் கழக மட்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரசாத் மீண்டும் களமிறங்கி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

எனவே இலங்கை அணியின் அடுத்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் மே மாதம் இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுடனான 3 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தம்மிக பிரசாத் இலங்கை அணியில் மீண்டும் இடம்பெற்று, தனது அதிரடி தாக்குதலைத் தொடர முடியும் என்ற நல்ல செய்தியும் இலங்கை ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

இறுதியாக, எதிர்காலத்தில் இலங்கை அணிக்கு சமிந்த வாஸ் மற்றும் தம்மிக பிரசாத் போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் தேவை என்பதை இந்த கட்டுரை உணர்த்தி நிற்கின்றது.