தொடரைத் தீர்மானிக்கும் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி!

309
Shoaib Malik
@cricbuzz

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், மூத்த வீரர் சொஹைப் மலிக் மற்றும் மொஹமட் ஹபீசின் சிறந்த இணைப்பாட்டதினால் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி, தொடரைக் கைப்பற்றியுள்ளது.

அழுத்தங்கள், மாற்றங்களுடன் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரை…

பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான இந்த தொடரில், ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்திருந்தது. இந்நிலையில் குறித்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் இரு அணிகளும் களமிறங்கின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, தமது இன்னிங்சிற்காக 9 விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதும் பாகிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சினால் அவர்களால் நிலைத்தாட முடியவில்லை.

ஒரு கட்டத்தில், அவ்வணி 68 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. எனினும் ஷை ஹோப் மற்றும் ஜேசன் முஹம்மத் ஆகியோர் தங்களுக்கிடையே 101 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். எனினும், இறுதி 10 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அதேநேரம், எதிரணிக்கு ஓட்டங்களை பெற முடியாமல் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்திருந்த ஜுனைட் கான், மொஹமட் ஆமிர் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். மறுமுனையில் சுழல் பந்தினால் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்டங்களைக் கட்டுப்படுத்திய இமாத் வசிம் 10 ஓவர்கள் பந்து வீசி ஒரு விக்கெட் உள்ளடங்கலாக வெறும் 24 ஓட்டங்களை மாத்திரமே வழங்கியிருந்தார்.

அதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணி, வெறும் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி  பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சியளித்ததோடு, தமது அணி வெற்றியீட்டும் வகையில் விளையாடியது.

எனினும், அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் மூத்த வீரர்களும் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 430 ஒருநாள் போட்டிகளில் இணைந்தாடிய அனுபவ துடுப்பாட்ட வீரர்களுமான மொஹமட் ஹபீஸ் மற்றும் சொஹைப் மலிக் ஆகியோர் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 113 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

கபுகெதர, ஷானகவின் சதங்களின் உதவியுடன் கண்டி மற்றும் காலி அணிகள் வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் மாகாண ரீதியிலான ஒருநாள் போட்டித் தொடரின்…

சிறப்பாக துடுப்பாடிய மொஹமட் ஹபீஸ் 2 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 81 ஓட்டங்களையும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய சொஹைப் மலிக் 2 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 101 ஓட்டங்களையும் விளாசினர்.

அந்த வகையில் 43.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்த பாகிஸ்தான் அணி,  குறித்த ஒருநாள் போட்டித் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

போட்டியின் சுருக்கம்  

மேற்கிந்திய தீவுகள் அணி: 233/9 (50) – ஷை ஹோப் 71, ஜேசன் முஹம்மத் 59, கிரன் பவல் 23, மொஹமட் ஆமிர் 41/2, ஜுனைட் கான் 60/2, சதாப் கான் 57/2

பாகிஸ்தான் அணி: 236/4 (43.1) – சொஹைப் மலிக் 101, மொகமட் ஹபீஸ்,  சர்ப்ராஸ் அகமட் 24, ஷன்னன் கப்ரியல் 60/2, ஜேசன் ஹோல்டர் 37/1, அஷ்லி நர்ஸ் 49/1