உலகக் கிண்ண மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆலோசகராக ராம்னரேஷ் சர்வான்

201
AFP

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ராம்னரேஷ் சர்வான், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியினை தயார்படுத்தும் விதமாக அந்நாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் 12ஆவது கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது. மிகவும் எதிர்பார்ப்புடன் காணப்படும் இத்தொடரில் பங்கெடுக்கும் அணிகள் யாவும் மிக மும்முரமான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே மேற்கிந்திய தீவுகள் அணியும் அதன் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சர்வானின் ஆலோசனைகளை பெற்று வருகின்றது.

கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான, 15 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் குழாம், இன்று…

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரையில், 181 ஒருநாள் போட்டிகள் மற்றும் 87 டெஸ்ட் போட்டிகள் வரையில் ஆடியுள்ள சர்வான் இரண்டு வகைப் போட்டிகளிலும் மொத்தமாக 11,944 ஓட்டங்களை குவித்துள்ளார். இப்படியாக சர்வதேச போட்டிகளில் பரந்த அனுபவத்தினை கொண்டிருக்கும் சர்வான் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ணத் தொடரிலும், அதற்கு முன்னர் அயர்லாந்தில் நடைபெறவுள்ள முக்கோண ஒருநாள் தொடரிலும் பல நல்ல விடயங்களை பெற்றுக்கொள்ள காத்திருக்கின்றது.

சர்வான் தனது ஆலோசனைகளின் போது மேற்கிந்திய தீவுகள் அணி, விக்கெட்டுக்கள் இடையில் ஓட்டங்கள் பெறும் விடயத்தையும், போட்டிகளின் முக்கிய தருணங்களின் போது எப்படி செயற்பட வேண்டும் என்பதையும் இலக்காக கொண்டு செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

“இங்கே வீரர்களுக்கு ஒரு ஆலோசகர் போன்று நான் செயற்பட வந்திருக்கின்றேன். நான் என்னால் முடியுமான சிறந்த பங்களிப்பினை வழங்கி, நுட்ப ரீதியில் எமது வீரர்கள் சில திருத்தங்களை மேற்கொள்ள உதவ வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அதோடு, மேற்கிந்திய தீவுகளின் தலைமை பயிற்சியாளரான ப்ளொய்ட் ரேபரிற்கும் அவரது துணைப் பயிற்சியாளர்களுக்கும் முடியுமான உதவிகளை வழங்குவேன்“ என மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆலோசகராக செயற்படுவது தொடர்பில் சர்வான் குறிப்பிட்டிருந்தார்.

ThePapare.com இன் உலகக் கிண்ண உத்தேச இலங்கை அணி

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி…

“ எமது துடுப்பாட்ட வீரர்கள் கடந்த காலங்களின் போது துடுப்பாட்ட பரிமாற்றங்களை மேற்கொள்வதில் சில இடர்களை சந்தித்திருந்தனர். எனவே, குறித்த விடயத்தில் எம்மால் எப்படியான ஒரு முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும். இது ஒரு நாளில் மாற்றக் கூடிய விடயம் இல்லை என்ற போதிலும், இது பற்றிய யோசனைகள் வழங்குவது அத்தியாவசியமான ஒன்று, எனவே அவர்கள் இந்த யோசனைகள் மூலம் ஏதாவது ஒன்றினை உருவாக்கி கொள்வார்கள். “ என சர்வான் மேலும் பேசியிருந்தார்.

இதேநேரம், சர்வான் போன்ற ஒரு முன்னணி வீரரின் ஆலோசனை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பலம் சேர்க்கும் மிக முக்கியமான விடயமாக இருக்கும் என அதன் பயிற்சியாளரான ப்ளொய்ட் ரேபரும் தெரிவித்துள்ளார்.

சர்வானின் மூலம் நெறிப்படுத்தப்படும் மேற்கிந்திய தீவுகள் அணி, மே மாதம் 05ஆம் திகதி அயர்லாந்து, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடரில் பங்கேற்றதன் பின்னர், உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் மே மாதம் 31ஆம் திகதி பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<