இலங்கையை சொந்த மண்ணில் மோதவுள்ள மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம் அறிவிப்பு

58

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் 15 பேர் கொண்ட இன்று (03) மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் ரோஜர் ஹார்ப்பரினால் வெளியிடப்பட்டுள்ளது. 

இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச ஆகிய இரு தொடர்களில் இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்த்தாடவுள்ளது.

T20I தரவரிசையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்ட ராஹுல்

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய T20I வீரர்கள் தரவரிசையின் படி, இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராஹுல் தனது வாழ்நாள்….

இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது  தொடரான ஒருநாள் தொடருக்கான குழாத்தினை பல அதிரடி மாற்றங்களுடன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள குழாத்தின் அடிப்படையில் ஒருநாள் அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படும் வகையில் சகலதுறை வீரர் கிரண் பொல்லார்ட் பெயரிடப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் 100 இற்கும் மேற்பட்ட ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டெரன் ப்ராவோ ஆறு மாதங்களின் பின்னர் மீண்டும் குழாமுக்கு திரும்பியுள்ளார். இவர் அண்மையில் நிறைவுக்குவந்த மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் தொடரான ‘சுப்பர்50’ தொடரில் 96.20 சராசரியுடன் 481 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இறுதியாக 2018 டிசம்பரில் ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியதன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் வாய்ப்பை இழந்து வந்த சகலதுறை வீரர் ரொவ்மன் பவல் ‘சுப்பர்50’ தொடரில் 160.93 என்ற அதிரடி துடுப்பாட்ட வீதத்தில் 412 ஓட்டங்களை குவித்ததன் அடிப்படையில் மீண்டும் ஒருநாள் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் மேற்கிந்திய தீவுகளில் வைத்து இந்திய அணியுடன் நடைபெற்ற போட்டியில் முழங்கால் உபாதைக்கு முகங்கொடுத்த 24 வயதுடைய இளம் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் பெபியன் அலன் உபாதையிலிருந்து திரும்பி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவ்வாறு பல வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ள நிலையில் எதிர்பார்க்கப்பட்ட இரு வீரர்கள் இலங்கை அணியுடன் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

நுவான் குலசேகரவின் டி20 உலக சாதனையை முறியடித்த பும்ரா

டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டமற்ற ஓவர்களை வீசிய வீரர்கள் வரிசையில் இலங்கை கிரிக்கெட் அணியின்…

கடந்த வருட இறுதியில் இந்திய சுற்றுப்பயணத்தின் போது அதிரடி துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய 23 வயதுடைய மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் சிம்ரொன் ஹெட்மெயர் இறுதியாக அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச தொடர்களில் அதிக போட்டிகளில் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.

இதன் காரணமாக இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான குழாமிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதேவேளை இறுதியாக நடைபெற்ற அயர்லாந்து அணியுடனான தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் முக்கிய பங்குவகித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எவின் லுவிஸ் இலங்கை அணியுடன் தொடரில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.

அவர் குறித்த இலங்கை அணியுடனான தொடருக்கான குழாம் தெரிவிற்காக உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததன் காரணமாகவே ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என மேற்கிந்திய கிரிக்கெட் சபையின் அணி தேர்வுக்குழு தலைவர் ரோஜர் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருட இறுதியில் (2019) ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஒருநாள் சர்வதேச பெற்று இதுவரையில் 4 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள துடுப்பாட்ட வீரர் ப்ரெண்டன் கிங், அதே தொடரில் ஒருநாள் அறிமுகம் பெற்று 5 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள வேகப்பந்துவீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தொடர்ந்தும் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

குறித்த ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்கும் கிரண் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம் எதிர்வரும் சனிக்கிழமை (08) இலங்கையை வந்தடையவுள்ளது. ஒருநாள் சர்வதேச தொடருக்கு முன்னராக சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி இரு பயிற்சிப்போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம்

கிரண் பொல்லார்ட் (அணித்தலைவர்), பெபியன் அலன், சுனில் அம்பிரிஸ், டெரன் ப்ராவோ, ரொஸ்டன் சேஷ், ஷெல்டன் கொட்ரல், ஜெசன் ஹோல்டர், ஷை ஹோப், அல்சாரி ஜோசப், ப்ரெண்டன் கிங், கீமோ போல், நிக்கொலஸ் பூரண், ரொவ்மன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹெய்டன் வோல்ஸ்

U19 ப்ளேட் சம்பியனாக முடிசூடிய இங்கிலாந்து!

ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் ப்ளேட் சுற்றுக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து…

ஒருநாள் தொடர் அட்டவணை

22 பெப்ரவரி – முதலாவது ஒருநாள் சர்வதேச பேட்டி (பகல்) – கொழும்பு SSC

26 பெப்ரவரி – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி (பகலிரவு) – ஹம்பாந்தோட்டை MRICS

 மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க