ஜோ ரூட்டிடம் மன்னிப்பு கோரிய ஷெனோன் கேப்ரியல்

351
Image Courtesy - ICC Twitter

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட்டை தன்பாலின உறவை விமர்சிக்கும் வகையில் பேசியதற்காக, அணி வீரர்கள், இங்கிலாந்து வீரர்கள் மற்றும் முக்கியமாக ஜோ ரூட்டிடம் பகிரங்க மன்னிப்பினை கோருவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் தெரிவித்துள்ளார்.

ஜோ ரூட்டை விமர்சித்த ஷனோன் கேப்ரியல் மீது ஐ.சி.சி அதிரடி நடவடிக்கை

மேற்கிந்திய தீவுகளின் சென். லூசியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது, ஷனோன் கேப்ரியல், ஜோ ரூட்டின் விக்கெட்டினை வீழ்த்தும் வகையில் துள்ளியமாக பந்து வீசிக்கொண்டிருந்தார். எனினும் பந்துகளை சிறப்பாக தடுத்தாடிய ரூட், சதமடித்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தார்.

இவரின் இந்த துடுப்பாட்டம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கடும் எரிச்சலை கொடுத்திருந்தது. குறிப்பாக ஷனோன் கேப்ரியலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதன்போது, அவர், ஜோ ரூட்டை தன்பாலின உறவை விமர்சிக்கும் வகையில் திட்டினார். இதனையடுத்து,  கள நடுவர்கள் ஷெனோன் கேப்ரியலை எச்சரித்திருந்தனர். இதன் பிறகு குறித்த விடயம் தொடர்பில் விசாணை மேற்கொள்ளப்பட் நிலையில், நேற்றைய தினம் ஐசிசி கேப்ரியலுக்கு 4 போட்டிகள் மற்றும் போட்டிக் கட்டணத்தில் 75 சதவீத அபாரதம் விதித்தது.

இவ்வாறான நிலையில், இன்றைய தினம் ஷெனோன் கேப்ரியல் அறிக்கையொன்றை வெளியிட்டு அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஷெனோன் கேப்ரியல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“போட்டி மனப்பான்மையுடன் இருந்த போது, தவறான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டதற்காக எனது அணி வீரர்கள், இங்கிலாந்து வீரர்கள் மற்றும் முக்கியமாக இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் ஆகியோரிடம் மன்னிப்பு கோருகின்றேன். நான் தற்செயலாக குறித்த விடயத்தினை பேசினேன். எனினும், நான் பேசியது தவறு என்பதை ஏற்றுக்கொண்டு, அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

போட்டியின் குறித்த தருணத்தில் எமது அணி நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. நான் துள்ளியமாக வீசிய பந்தை ஜோ ரூட் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடியதால் அழுத்தத்திற்கு உள்ளான நான் என்னை மறந்து தவறான வார்த்தையை பேசினேன். டெஸ்ட் போட்டிகளின் போது, துடுப்பாட்ட வீரர்களின் மன வலிமையை இலக்கச் செய்வதற்கு, இவ்வாறு பேசுவதுண்டு, ஆனால் நான் தவறினை ஒப்புக்கொள்கிறேன்.

தொடர் தோல்வியால் டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்துக்கு பாரிய பின்னடைவு

“எனது சொந்த கோபதாபத்தை தனிப்பதற்காகவே, ஜோ ரூட்டை இவ்வாறு பேசியுள்ளேன் என்பதை இப்போது உணர்கிறேன். நான் ஜோ ரூட்டை பார்த்து, “நீ ஏன் என்னை பார்த்து சிரிக்கிறாய்? உனக்கு ஆண்கள் என்றால் பிடிக்குமா?” என கேட்டேன். அதற்கு ஜோ ரூட், “அதனை ஒரு அவதூறான உறவாக பேச வேண்டாம். தன்பாலின உறவில் ஈடுபடுபவராக இருப்பதில் எந்த தவறும் இல்லை” என்று கூறினார்.

அதற்கு நான் “அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், நீ என்னை பார்த்து சிரிப்பதை நிறுத்திக்கொள்” என்று கூறியதாகவும்” தனது அறிக்கையில் ஷெனோன் கேப்ரியல் வெளிப்படுத்தியுள்ளார்.

ஷெனோன் கேப்ரியல் தற்போது மன்னிப்பு கோரியிருந்தாலும், ஐசிசி அவருக்கு நான்கு போட்டிகள் விளையாட தடை விதித்துள்ளதுடன், 75 வீத போட்டிக் கட்டண அபராதமும் விதித்துள்ளது. இதன் காரணமாக கேப்ரியல் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க