வீரர்களை கடுமையாக சாடிய டு ப்ளெசிஸ்

547
©Getty

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணி செய்த மிகப்பெரிய தவறாக ஓர் அணியாக எந்தவொரு வீரரும் நியாயமாக விளையாடவில்லை என தென்னாபிரிக்க அணியின் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

லண்டனின் லோர்ட்ஸில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்காவை 49 ஓட்டங்களால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம், நடப்பு உலகக் கிண்ணத்தில் 5ஆவது தோல்வியைத் தழுவிய தென்னாபிக்கா தொடரின் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 30……

ஒவ்வொரு உலகக் கிண்ணத்திலும் வலுவான ஒரு அணியாக பங்கேற்பதும், பிறகு முக்கியமான கட்டத்தில் கோட்டை விடுவதும் தென்னாபிரிக்காவுக்கு வழமையான ஒரு விடயமாக மாறிவிட்டது. அந்த சோகம் இம்முறை உலகக் கிணணத்திலும் தொடருகிறது.  

அத்துடன், 2003 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக லீக் சுற்றுடன் அந்த அணி வெளியேறியமை முக்கிய விடயமாக பேசப்படுகின்றது.

”நாங்கள் சிறந்த கிரிக்கெட் ஒன்றை விளையாடவில்லை. இந்தப் போட்டித் தொடர் முழுவதும் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம், ஆனால், இன்று நாங்கள் அவர்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தோம். ஆனால் அவர்களுக்கு (300க்கும் அதிகமான ஓட்டங்களை) 20 ஓட்டங்கள் மேலதிகமாக கொடுத்தோம். இது எமக்கு நெக்கடியைக் கொடுத்ததுஎன்று தோல்விக்குப் பிறகு தென்னாபிரிக்க அணித் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் கருத்து வெளியிட்டார்.

பலமான பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகியவற்றைக் கொண்டிருந்த போதும், இரு துறைகளிலும் சிறந்த ஆரம்பம் இல்லாமை அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்று டு ப்ளெஸிஸ் சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக, சுழல் பந்துவீச்சு பெரிதாக தாக்கம் செலுத்தவில்லை. ககிசோ ரபாடா மற்றும் லுங்கி என்கிடி ஆகிய இருவரும் மோசமாக பந்துவீசியிருந்தனர். நீங்கள் துடுப்பாடுகின்ற போது ஒரு நல்ல ஆரம்பத்தைக் கொடுக்க வேண்டும். நாங்கள் எப்போதுமே ஆரம்பத்திலே ஒரு விக்கெட்டை விரைவாக இழந்து வருகிறோம். பின்னர் நாங்கள் இணைப்பாட்டங்களை மேற்கொள்ளும் போது விக்கெட்டுகளை இழக்கிறோம். அதுதான் போட்டியின் இயல்பாகும்.

ஹரிஸ் சொஹைலின் இன்னிங்ஸே பாகிஸ்தான் வெற்றியின் திருப்புமுனை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லோர்ட்ஸ் ……….

எமது துடுப்பாட்ட வரிசையில் நம்பிக்கையுடன் விளையாடுவதற்கு சற்று தடுமாறி வருகிறோம். இதனால் 30 அல்லது 40 ஓட்டங்களை இழக்க வேண்டி ஏற்படுகிறது. எனவே, அதற்காக நாங்கள் முயற்சி செய்ய வேண்டும். நாங்கள் வலைப் பயிற்சிகளின் போது அதை செய்கிறோம். அதற்காக நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் விளையாட்டில் நம்பிக்கை என்பது ஒரு ஆச்சரியமான விடயம்” என்றார்.

அணியின் சிரேஷ்ட வீரர் இம்ரான் தாஹிர் குறித்து குறிப்பிடுகையில், பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் அபாரமாக செயல்பட்டார். அவர் விதிவிலக்கானவர். அவர் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடினார். அவர் எங்கள் பந்துவீச்சு தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். ஆனால் இம்ரான் போன்ற போதியளவு எமது வீரர்கள் எழுந்து நிற்கவில்லை.

நாங்கள் மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்கிறோம் என்று நினைக்கிறேன். எங்கள் பந்துவீச்சு இந்த போட்டித் தொடர் முழுவதும் சிறப்பாக இருந்தது. ஆனால் இன்று, மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்டபட்டது” என்றார்.

”என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய தவறு என்னவென்றால், நாங்கள் ஓர் அணியாக எமக்காக நியாயமாக விளையாடவில்லை. நாங்கள் சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடுகின்றோம். ஆனால் உடைமாற்றும் அறையில் இருக்கும் திறமையைக் கருத்தில் கொண்டு நாங்கள் நம்மைத் தாழ்த்திக் கொள்கிறோம்” என ஆதங்கத்துடன் டு ப்ளெஸிஸ் கூறினார்.

நிச்சயமாக இது மிகவும் குறைந்த புள்ளிகளாகும். தென்னாபிரிக்க அணிக்காக விளையாட கிடைத்தமை தொடர்பில் ஓரு வீரராகவும், தலைவராகவும் மிகவும் பெருமைப்படுகிறேன்.

மேலும், இந்த நேரத்தில் நாங்கள் வெளிப்படுத்திய திறமையினால் பெற்றுக்கொண்ட முடிவுகள் உங்களுக்குத் தெரியும், இது உண்மையில் மிகவும் கடினமானது. இது கொஞ்சம் சங்கடமாகவும் இருக்கிறது. நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், அது போதுமானதாக இல்லை. வெளிப்படையாக நான் ஒரு மனிதனாக இருக்கிறேன். எனவே அது எனக்கும் தடையாக இருக்கும்.

எனவே இந்த சவால்களைத் தாண்டி முன்னோக்கிச் செல்ல என்னுடன் பயிற்சியாளர், சிரேஷ் வீரர்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதைத்தான் உங்களது வீரர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே இப்போது முதல் மற்ற வீரர்களுக்காக நான் இருக்கப் போகிறேன்” என தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, தென்னாபிரிக்க அணி, தமது அடுத்த லீக் போட்டியில் இலங்கை அணியை 28ஆம் திகதி சந்திக்கவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<