இலங்கை அணியை இந்தியாவுடன் பிரதி செய்ய முடியாது: திமுத்

3118
Dimuth Karunaratne

திமுத் கருணாரத்னவிற்கு இந்த ஆண்டு மிகவும் சுவாரஷ்யமாக அமைந்திருக்கின்றது. இந்த ஆண்டில் தற்செயலாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக மாற்றப்பட்ட அவர், இலங்கை அணியினை தென்னாபிரிக்க அணிக்கு எதிராக வரலாற்று டெஸ்ட் தொடர் ஒன்றை வெற்றி பெறுவதற்காக வழிநடாத்தியிருந்தார்.   

உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்?

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்…

இதனால், கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராக செயற்படும் வாய்ப்பு 2015ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்காத கருணாரத்னவிற்கு கிடைத்திருக்கின்றது.

அந்தவகையில் சடுதியாக நடந்த மாற்றங்கள் பற்றியும், இலங்கை அணியின் தலைவராக மாறியது தொடர்பிலும், உலகக் கிண்ணத் தயார்படுத்தல்கள் பற்றியும் திமுத் கருணாரத்னவிடம் espncricinfo இணையத்தளம் நேர்காணல் ஒன்றை நடாத்தியிருந்தது.

இந்த நேர்காணலில், இலங்கை அணியின் தலைவராக டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மாறியதன் பின்னர் கிடைத்த அனுபவம் பற்றி திமுத் கருணாரத்னவிடம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அவர் இவ்வாறு பதில் தந்தார்.

இது ஒரு பெரிய சவால் என்பதை நான் இந்த (அணித்தலைவர்) பொறுப்பினை எடுத்த போதே அறிந்து கொண்டேன். நான் நான்கு வருடங்கள் (ஒருநாள் போட்டிகளில்) விளையாடாத காரணத்தினால் எனது நிலையினை அணியில் தக்கவைக்க தனி ஆளாக நான் திறமையினை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியும். அழுத்தங்களும் இருக்கின்றன. ஆனால், நீங்கள் சிறப்பாக செயற்பட ஏதாவது ஒரு அழுத்தம் உங்களை தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும். நான் முதலில் துடுப்பாட்ட வீரராக எனது பொறுப்பினை பார்க்கின்றேன். அதனால், அணித்தலைவராக இருப்பது எனக்கு சிறிது இலகுவாக இருக்கின்றது.”

உலகக் கிண்ணத்தில் 23 வருட பதிவை மாற்றுமா இலங்கை – ஆஸி மோதல்?

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய…

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக நான் நல்ல முறையில் துடுப்பாடியதில் மகிழ்ச்சி. அதோடு உலகக் கிண்ண பயிற்சி போட்டிகளிலும் நன்றாக ஆயிருந்தேன். நான் (இலங்கையிலும்) உள்ளூர் லிஸ்ட் – A போட்டிகளில் தொடர்ந்து ஆடி வருகின்றேன். இந்த உள்ளூர் போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்திய முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகவும் நான் இருந்தேன். இதனால், எனக்கு ஒருநாள் போட்டிகளில் ஆட முடியாது என்பது இல்லை. உண்மையில் சர்வதேச (ஒருநாள்) போட்டிகளுக்கும், உள்ளூர் போட்டிகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்கும். ஆனால், என்னால் அதிகமாக (ஒருநாள் போட்டிகள்) விளையாடப்படும் போது என்னை அதிகம் பழக்கப்படுத்திக் கொள்ள முடியும்.” என்றார்.

திமுத்திடம் நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது தொடர்பிலும் வினவப்பட்டிருந்தது. அதற்கு பதில் தந்த அவர் அப்போது இருந்த நிலைமைகளும், இப்போது உள்ள நிலைமைகளும் வேறு வேறாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

நான் 2015ஆம் ஆண்டில் இருந்த திமுத் போன்று இப்போது இல்லை. எனக்கு அதிகமான அனுபவம் கிடைத்திருக்கின்றது. எனக்கு கிரிக்கெட் பற்றிய அறிவும் இருக்கின்றது. நான் என்னை அதிகம் முன்னேற்றி இருப்பதாக நம்புகின்றேன். அணித்தலைவர் பொறுப்பினையும் எனக்கு (சிறப்பாக) செய்ய முடியும் என்று நம்பிக்கை இருக்கின்றது.”

பாகிஸ்தானை எதிர்கொள்வதில் அச்சமடையும் விராத் கோஹ்லி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக எதிர்வரும்…

இதேநேரம், திமுத் கருணாரத்னவிடம் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயற்பட என்ன செய்ய போகின்றீர்கள் எனவும் கேட்கப்பட்டது அதற்கு அவர், பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதால் ஒருநாள் போட்டிகளில் எனது ஆட்டத்தினை பொறுத்தவரையில் சந்தேகங்கள் இருந்தன. நாம் உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராக ஆடுகின்றோம். இவ்வகை (ஒருநாள்) போட்டிகள் பொழுதுபோக்கை மையமாக கொண்டிருக்கின்றன. அதோடு, இவை விரைவாக முன்னேறும் போட்டிகள். இதற்கு என்னை பொருந்திக்கொள்ள முடியுமா என எண்ணியிருக்கின்றேன். ஆனால், எனக்கு இங்கே இருப்பவர்களும், சக அணி வீரர்களும் மிகவும் ஆதரவாக இருக்கின்றனர்.” என்றார்.

இதேவேளை, திமுத் கருணாரத்ன அணித்தலைவராக இந்த உலகக் கிண்ணத்தில் சக வீரர்களுடன் எப்படி நடந்து கொள்கின்றார், அணி வீரர்களை ஒன்றிணைக்க என்ன செய்கின்றார் என்பது பற்றியும் கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

ஒரு விடயம், நான் எல்லோரிடமும் நெருக்கமாக இருக்கின்றேன். நான் எல்லோரையும் சமமான முறையில் நடத்துகின்றேன். அவர் சிரேஷ்ட வீரரோ அல்லது இளம் வீரரோ அது பற்றி எனக்கு கரிசனை இல்லை. நான் யாருக்கும் சார்பாக இருப்பதே இல்லை. யாராவது ஒருவர் அணிக்கு புதியதாக வந்தால் அவரை நான் (சிரேஷ்ட வீரரான) மாலிங்கவை பார்ப்பது போலே பார்க்கின்றேன். நான் எல்லோரிடமும் உங்களது பிரச்சினைகள் என்னவோ அதனை முன்வைக்க கூறியிருக்கின்றேன். அந்த பிரச்சினைகளை எனது சொந்த பிரச்சினையாக கருதி அதற்கான தீர்வுகளை பெற முயற்சி செய்கின்றேன். நான் எல்லோரிடமும் நண்பனாக இருக்க முயற்சி செய்வதோடு, ஒரு பிணைப்பையும் உருவாக்க முயல்கின்றேன். நான் சரியோ பிழையோ எனது கருத்துக்களை அவர்கள் மதிக்கின்றார்கள். நான் பிழையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் என்னிடம், நீங்கள் இது பற்றி யோசித்தீரா? என கேட்பார்கள். எனக்கு அது விருப்பமான ஒன்று. ஏனெனில், இப்படியான கருத்து பரிமாறல்கள் ஆரோக்கியமானவை. இறுதியில் அவர்கள் (நான் சொல்வதை) கேட்கின்றார்கள்.”

உலகக் கிண்ணத்தில் 23 வருட பதிவை மாற்றுமா இலங்கை – ஆஸி மோதல்?

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய…

இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் படி இலங்கை அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் இரண்டு கைவிடப்பட்ட போட்டி முடிவுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று தரப்படுத்தலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. எனினும், அடுத்த சுற்றுக்கு இலங்கை அணி செல்ல வேண்டும் என்றால் குறைந்தது இன்னும் 3 போட்டிகளில் இலங்கை அணிக்கு கட்டாய வெற்றி தேவையாக உள்ளது.

இந்நிலையில், இந்த உலகக் கிண்ணத் தொடரில் நொக்அவுட் சுற்றுக்கு தெரிவாக இலங்கை அணி, என்ன திட்டங்கள் வைத்திருக்கின்ற என்பது தொடர்பிலும் திமுத் கருணாரத்னவிடம் கேட்கப்பட்டது. அதற்கு கருணாரத்ரன இவ்வாறு விளக்கியிருந்தார்.

நாங்கள் மட்டுப்படுத்தப்பட்ட திறமைகளை வைத்திருக்கும் ஒரு அணி. எங்களை நீங்கள் ஏனைய அணிகளுடன் ஒப்பிட்டால் எங்களிடம் வளங்கள் குறைவு. உதாரணமாக, இந்திய அணியினை பார்த்தால் அவர்களிடம் ஒவ்வொரு போட்டிகளிலும் சதங்கள் விளாசக்கூடிய வீரர்கள் இருக்கின்றனர். ஆனால், எமது அணியினை எடுத்து பார்த்தால் (சென்ற) அனைத்து வருடங்களிலும் ஒன்று அல்லது இரண்டு சதங்கள் பெற்றவர்களே இருக்கின்றனர். அவர்களிடம் (இந்திய அணியிடம்) தேவையான போது நீண்ட துடுப்பாட்ட பிரயோகங்களை காட்டக்கூடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருக்கின்றனர்.

அவர்களால் எதிரணிகளை வேண்டிய தருணத்தில் கட்டுப்படுத்த முடியும். பத்து ஓவர்களுக்கு மேலே அவர்களுக்கு 70 அல்லது 80 ஓட்டங்களை பெற வேண்டும் என்றால், அவர்களுக்கு அதனை பெற முடியும். நிலைமைகள் கடினமாக இருக்கும் என்றால், பத்து ஓவர்களுக்கு பின்னர் அவர்களால் 30 அல்லது 40 ஓட்டங்களை விக்கெட்டுகளை பறிகொடுக்காமலே பெற முடியும். அவர்களுக்கு எந்த பந்துவீச்சாளரை முகம் கொடுக்க வேண்டுமோ அவர்களை சர்வதேச போட்டிகளிலோ அல்லது .பி.எல். போட்டிகளிலோ அவர்கள் ஏற்கனவே முகம் கொடுத்து விட்டனர்.  

யுவ்ராஜ் சிங்கை பயப்பட வைத்த முத்தையா முரளிதரன்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தான் சந்தித்த…

எனவே, அவர்களிடம் எல்லா அறிவும் அனுபவமும் இருக்கின்றது. அவர்களிடம் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர்களும் உள்ளனர். எங்களிடம் அப்படியான வசதி இல்லை. நாம் 130-135 கிலோ மீட்டர்களுக்குள் வீசக்கூடியவர்களையே கொண்டிருக்கின்றோம். அவர்களின் பந்துவீச்சாளர்களுக்கும் துடுப்பாட முடியும். ஆனால், எம்மவர்களுக்கு அது முடியாது, ஆனால் இந்திய அணியினை எங்களுக்கு பிரதி (Copy) செய்ய முடியாது. எங்களுக்கு என ஒரு தனிப்பாங்குடனான திட்டம் இருக்கின்றது. நாம் 300 ஓட்டங்கள் பெறுவது அவர்கள் பெறும் விதத்தில் கிடையாது. ஆனால், எங்களுக்கு சமார்த்தியமாக விளையாட முடியும் என்றால் எந்த அணியினையும் தோற்கடிக்க முடியும்.” என்றார்.

திமுத் கருணாரத்னவினால் வழிநடாத்தப்படும் இலங்கை அணி, தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் அவுஸ்திரேலிய அணியினை சனிக்கிழமை (15) லண்டன் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<