நான் செய்தது தவறு, ஆனால் வருத்தப்படமாட்டேன் – குமார் தர்மசேன

2369
Image Courtesy : Getty

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ஓட்டகள் வழங்கி தவறு செய்துவிட்டேன். ஆனால், அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று இலங்கையைச் சேர்ந்த ஐ.சி.சி போட்டி நடுவர் குமார் தர்மசேன தெரிவித்துள்ளார்.  

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது

நடுவரிடம் பௌண்டரி வேண்டாம் என்ற பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் லோர்ட்ஸ்……

கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு தேவைப்பட்டது. டிரண்ட் போல்ட் பந்துவீச களத்தில் ஸ்டோக்ஸ், ஆதில் ரஷித் இருவரும் இருந்தனர். ஸ்டோக்ஸ் தான் சந்தித்த 2 பந்துகளில் ஓட்டம் ஏதும் பெறவில்லை. 3ஆவது பந்தில் ஸ்டோக்ஸ் காலை மடக்கிக்கொண்டு மிட்விக்கெட் திசையினால் அபாரமான சிக்ஸரை அடித்தார். 4ஆவது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்கள் ஓட முயற்சிக்கும்போது, கப்டில் களத்தடுப்பு செய்து விக்கெட் காப்பாளருக்கு எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், பாய்ந்தபோது அவரின் துடுப்பு மட்டையில் பந்து பட்டு ஓவர் த்ரோவாக பௌண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ஓட்டங்கள் கிடைத்தது.

இந்த ஓவர் த்ரோதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 2ஆவது ஓட்டத்தை முழுமையாக ஓடி முடிக்காத காரணத்தால், 5 ஓட்டங்கள் மட்டுமே நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், நடுவர் குமார் தர்மசேன 6 ஓட்டங்கள் வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதனால், கடைசியில் ஆட்டம் சமநிலையில் முடியும் நிலை ஏற்பட்டது.  

அப்போது களத்தில் நடுவராக இருந்த குமார் தர்மசேன, தனது சக நடுவர் மராயஸ் எராஸ்மஸுடன் மற்றும் போட்டி நடுவர்களுடன் பேசியபின்புதான் ஓவர் த்ரோவுக்கு 6 ஓட்டங்கள் வழங்கினார்

ஆனால், சிறிது நேரத்துக்குப்பின் டி.வி ரீப்ளேயில் பார்த்தபின்புதான் ஸ்டோக்ஸ் 2ஆவது ஓட்டத்தை முழுமை செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டது. அதனால் 6 ஓட்டங்கள் வழங்கியது தவறு எனத் தெரிந்தது.

உலகக் கிண்ணத்தை அலங்கரித்த வீரர்கள், அணிகளின் சாதனைகள்

கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய திருவிழாவான 12ஆவது உலகக்…….

அதன்பின் சுப்பர் ஓவருக்கு போட்டி சென்று அதிலும் போட்டி சமநிலை ஆனபின், அதிகமான பௌண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி சம்பியனாக அறிவிக்கப்பட்டது.

இதில் நடுவர் குமார் தர்மசேன 6 ஓட்டங்கள் வழங்கியமை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முன்னாள், இன்னாள் வீரர்கள் பலரும், முன்னாள் நடுவர்களும் விமர்சித்திருந்தனர்

ஓவர் த்ரோவுக்கு 6 ஓட்டங்கள் வழங்கியது தவறான முடிவு, 5 ஓட்டங்கள் தான் வழங்கி ருக்க வேண்டும் என்று .சி.சியின் முன்னாள் நடுவர் சைமன் டோபல் விமர்சித்திருந்தமை பலராலும் பேசப்பட்டது

இந்த நிலையில், குமார் தர்மசேன இலங்கையின் பிரதான ஆங்கில நாளிதழான சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

டி.வி. ரீப்ளேயில் காட்சிகளை பார்த்துக்கொண்டு அனைத்துக்கும் கருத்துக்கள் சொல்வது சிலருக்கு எளிதானதாகத்தான் இருக்கும். உலகக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் ஓவர் த்ரோவுக்கு இங்கிலாந்து அணிக்கு 6 ஓட்டங்கள் வழங்கிய எனது முடிவு தவறானதுதான் என்பதை நான் தொலைக்காட்சி ரீப்ளேவை பார்த்தபோது ஒப்புக்கொண்டேன்.

BPL தொடரில் முதன்முறையாக விளையாடவுள்ள பிரபல வீரர்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் மோர்கன் மற்றும்…..

ஆனால், மைதானத்தில் நான் நடுவர் பணி செய்யும்போது, பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. உடனுக்குடனேயே டிவியில் அதனை எங்களால் பார்க்க முடியாது. துடுப்பாட்ட வீரர் அடித்தவுடன் பந்து எங்கே செல்கிறது? எப்படி களத்தடுப்பு செய்கிறார்கள்? அதற்குள் துடுப்பாட்ட வீரர்கள் எவ்வளவு ஓட்டம் எடுக்கிறார்கள்? என அனைத்தையும் கணிக்க வேண்டும். எந்த வசதியும் எனக்கு இல்லையே. நான் தவறு செய்துவிட்டேன் இல்லை எனச் சொல்லவில்லை, ஆனால், அந்த தவறுக்காக நான் வருத்தப்படமாட்டேன். ஏனென்றால், நான் அந்த நேரத்தில் அளித்த முடிவுக்கு .சி.சி என்னை அழைத்துப் பாராட்டியது.

அதுமட்டுமல்லாமல் அதுபோன்ற சிக்கலான நேரத்தில் மூன்றாவது நடுவரை அழைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என எந்தவிதமான .சி.சி விதிமுறையிலும் இல்லை. நான் களத்தில் இருந்த சக நடுவருடன் வோக்கி டோக்கியில் பேசினேன், என்னுடைய உரையாடலை அனைத்து நடுவர்களும் கேட்டார்கள். அப்போது டிவி ரீப்ளேயை பார்த்து சொல்ல முடியாத நிலையில், ஸ்டோக்ஸ் 2ஆவது ஓட்டத்தை முழுமை செய்துவிட்டார் என்று நினைத்துதான் 6 ஓட்டங்கள் வழங்கினோம் எனத் தெரிவித்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 2ஆவது தடவையாகவும் இறுதிப் போட்டியில் நடுவராகக் கடமையாற்றிய குமார் தர்மசேன, கடந்த வருடம் .சி.சியின் சிறந்த நடுவருக்கான விருதையும் தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<