பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்த கொல்கத்தா

337
IPL Roundup SRHvKKR

பத்தாவது பருவகாலத்திற்கான .பி.எல் தொடரின் வெளியேற்றுதல் சுற்றுப் போட்டியில் (எலிமினேட்டர்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

நேற்றைய தினம் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இடம்பெற்ற லீக் போட்டிகளின் நிறைவில் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், 4ஆவது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

20 மில்லியன் மக்களின் கனவுகளை சுமந்து இங்கிலாந்து பயணிக்கும் இலங்கை அணி

2017ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடவிருக்கும்..

கொல்கத்தா அணியில் மனிஷ் பாண்டே காயம் காரணமாக இடம்பெறவில்லை. அத்துடன் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவ், நாதன் கவுல்டர் நிலே, பியுஷ் சாவ்லா, இஷாங் ஜக்கி ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

ஐதராபாத் அணியில் ஹென்ரிக்ஸ், முகமது நபி, முகமது சிராஜ் ஆகியோருக்குப் பதிலாக யுவராஜ் சிங், வில்லியம்சன், கிறிஸ் ஜோர்டான், பிபுல் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் தலைவர் கம்பீர் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். இதன்படி ஐதராபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டேவிட் வோர்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர்.  

அணியின் ஓட்ட எண்ணிக்கை 4.2 ஓவர்களில் 25 ஓட்டங்களாக இருந்த போது ஷிகர் தவான் 11 ஓட்டங்களுடன் (13 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து வில்லியம்சன், டேவிட் வோர்னருடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் துடுப்பெடுத்தாடினர். இதன் காரணமாக அந்த அணி பவர்பிளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ஓட்டங்களை சேர்த்தது.

இந்நிலையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 12 ஓவர்களில் 75 ஓட்டங்களை எட்டுகையில், வில்லியம்சன் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டேவிட் வோர்னர் 37 ஓட்டங்களைப் பெற்று பியுஷ் சாவ்லாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.  

முன்னதாக டேவிட் வொர்னர் 23 ஓட்டங்களை பெற்றிருந்த போது .பி.எல். போட்டி வரலாற்றில் 4 ஆயிரம் ஓட்டங்களை (114ஆவது ஆட்டத்தில்) கடந்த 5ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஏற்கனவே சுரேஷ் ரெய்னா (சென்னை, குஜராத்), விராட் கோலி (பெங்களூர்), ரோகித் சர்மா (டெக்கான், மும்பை), கம்பீர் (டெல்லி, கொல்கத்தா) ஆகியோர் 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளனர்.

அத்துடன், .பி.எல் வரலாற்றில் 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

பஞ்சாப்பை பந்தாடி பிளேஓஃப் சுற்றுக்கு முன்னேறியது புனே

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின்..

முதல் இன்னிங்ஸ் நிறைவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.   

கொல்கத்தா அணி சார்பில் நாதன் கவுல்டர் நிலே 3 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், டிரென்ட் பவுல்ட், பியுஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி துடுப்பெடுத்தாட்டத்தை நிறைவு செய்த நேரத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் போட்டி பாதிக்கப்பட்டது.

மைதானத்தின் தன்மையையும், மழையையும் கருத்தில் கொண்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 ஓவர்களில் 48 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என அறிவிக்கப்பட்டது.

இதன்படி துடுப்பெடுத்தாடக் களம் இறங்கிய அவ்வணி 5.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 48 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. வெளியேற்றல் சுற்றில் வெற்றி பெற்றதையடுத்து கொல்கத்தா அணி இரண்டாவது தெரிவுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

இதில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் புனே அணியுடன் களம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க <<