இரண்டு சாதனைகளை நிலைநாட்டிய கோஹ்லிக்கு ஒரு மோசமான பதிவு

975
aus.remonews.com

இந்திய அணித்தலைவரும், முன்னணித் துடுப்பாட்ட வீரருமான விராத் கோஹ்லி அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டில் ஒரே இன்னிங்ஸில் தனிப்பட்ட இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ள அதேவேளை, மோசமான சாதனையொன்றையும் பதிவு செய்துள்ளார்.  

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பணயம் ஒன்றினை மேற்கொண்டு மூவகையான போட்டிகளிலும் விளையாடி வருகின்றது. முதலில் நடைபெற்ற இருபதுக்கு இருபது தொடரானது, ஒரு போட்டி மழையால் தடைப்பட தொடர் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

ஒரு வருடத்தில் இரு மடங்காக அதிகரித்த விராட் கோஹ்லியின் வருமானம்

அடுத்ததாக டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வியாழக்கிழமை (06) அடலெய்டில் ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 250 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆஸி.அணி 235 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மொத்தமாக 307 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்நிலையில் ஆஸி.அணிக்கு வெற்றியிலக்காக 323 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டு, இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி.அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்திய அணியின் தலைவரான விராத் கோஹ்லிரன் மெஸின்எனும் புனைப்பெயரில் கிரிக்கெட் உலகில் தொடர்ச்சியாக பலவிதமான புதிய  துடுப்பாட்ட சாதனைகளை நிகழ்த்தி வருகின்றார்.

போட்டியில் வீரர் ஒருவர் ஆட்டமிழப்பது என்பது சாதாரண விடயமாகும். அதிலும், ஒரு போட்டியில் கோஹ்லியை ஆட்டமிழக்க செய்வது என்பது எதிரணியின் முக்கிய குறிக்கோளாக இருக்கும். காரணம் கோஹ்லி ஆடுகளத்தில் இருந்தால் அணிக்கு ஓட்டங்கள் குவிந்து கொண்டே இருக்கும் என்பது வழமையான விடயம்.

வெளிநாட்டு வீரர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கவுள்ள ஐ.பி.எல் ஏலம்

அவ்வாறு டெஸ்ட் போட்டிகளில் விராத் கோஹ்லியை ஆட்டமிழக்க செய்வது என்பது மிக இலகுவான விடயமல்ல. வெளிநாட்டு மண்ணில், அதாவது இந்தியாவில் அல்லாமல் பிற நாடுகளில் வைத்து விராத் கோஹ்லியை டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் ஆட்டமிழக்க செய்த சாதனையொன்றை அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நைதன் லெயன் நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 57ஆவது ஓவரில் நைதன் லெயன் வீசிய முதல் பந்தில் சோர்ட் லெக் திசையில் எரோன் பின்சிடம் இலகுவான பிடியெடுப்பு ஒன்றின் மூலம் 34 ஓட்டங்களுடன் கோஹ்லி ஆட்டமிழந்ததை தொடர்ந்து நைதன் லெயன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் கோஹ்லியை 6 தடவைகள் ஆட்டமிழக்க செய்துள்ளார்.

இதற்கு முன்னராக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் 5 தடவைகள் கோஹ்லியை ஆட்டமிழக்க செய்திருந்தார். மேலும், ஸ்டுவர்ட் ப்ரோட் (இங்கிலாந்து), பீட்டர் சிடில் (அவுஸ்திரேலியா), அல்பி மோர்கல் (தென்னாபிரிக்கா), ஆதில் ரஷீட் (இங்கிலாந்து) ஆகியோர் 4 தடவைகள் விராத் கோஹ்லியை வெளிநாட்டு மண்ணில் வைத்து ஆட்டமிழக்க செய்துள்ளனர்.

உலகக் கிண்ணத்துக்காக இந்திய வீரர்களினால் விடுக்கப்பட்ட விசித்திர கோரிக்கை

31 வயதாகும் நைதன் லெயன் அவுஸ்திரேலிய அணிக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 326 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு போட்டியில் 2 தடவைகள் பத்து விக்கெட்டுக்களையும், ஒரு இன்னிங்ஸில் 13 தடவைகள் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த போட்டியில் விராத் கோஹ்லி தனக்கான சில சாதனைகளையும் புரிந்திருந்தார். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 5 ஓட்டங்களை பெற்ற வேளையில் அவுஸ்திரேலிய மண்ணில் 1000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த 4ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டார்.

மேலும், 10 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் வெளிநாட்டு மண்ணில் 2000 ஓட்டங்களை கடந்த அணித்தலைவர் ஒருவராகவும் மாறியிருந்தார்.

30 வயதுடைய விராத் கோஹ்லி இதுவரையில் 74 டெஸ்ட் போட்டிகளில் 124 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தமாக 6368 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 24 சதங்களும், 19 அரைச்சதங்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க