சங்கக்காரவின் வரலாற்று சாதனையை நெருங்கும் கோஹ்லி

2167

இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் தனது வாழ்நாள் அதிகூடிய புள்ளிகளுடன் (937) மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை தக்கவைத்துக் கொண்டது இந்தியா

இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்களால் இமாலய வெற்றி ஒன்றை…

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 97 மற்றும் 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்தள்ளி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் போட்டியின் நிறைவில், டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய விராட் கோஹ்லி, இரண்டாவது போட்டியில் மீண்டும் பின்னடைவை சந்தித்தார். எனினும், மூன்றாவது போட்டியில் சிறந்த துடுப்பாட்டத்தை நிரூபித்த கோஹ்லி, மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், தனது வாழ்நாள் அதிகூடிய (937) புள்ளிகளை தொட்டுள்ளார்.

முதலிடத்தை பிடித்துள்ள கோஹ்லி, வரலாற்றில் அதிகூடிய புள்ளிகளை பிடித்துள்ள முதல் 10 வீரர்களுக்குள் நுழைவதற்கு இன்னும் ஒரு புள்ளி மாத்திரமே தேவைப்படுகிறது.

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார டெஸ்ட் தரவரிசையில் 938 புள்ளிகளை பெற்று, வரலாற்றில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 10வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் கோஹ்லி இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி அதிக புள்ளிகளை பெறுவாராயின், 10ஆவது இடத்துக்கு முன்னேறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால் சங்கக்கார முதல் 10 வீரர்களில் இருந்து நீக்கப்படுவார்.

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற்றார் கிராண்ட் எலியட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருந்த நியூசிலாந்து அணியின் முன்னணி சகலதுறை வீரர் கிராண்ட் எலியட், அனைத்து வகையான கிரிக்கெட் …

இதேவேளை, இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைச்சதம் மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா சகலதுறை வீரர்கள் வரிசையில் 27 இடங்கள் முன்னேறி 17ஆவது இடத்தையும், துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 8 இடங்கள் முன்னேறி 51ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். இவருடன் துடுப்பாட்ட வரிசையில் அஜின்கியா ரஹானே 19ஆவது இடத்துக்கும், சிக்கர் தவான் 22 ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். இவர்களுடன் சதம் விளாசிய இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் 22 இடங்கள் முன்னேறி 47 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

அத்துடன் நான்காவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய ஜோ ரூட் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஆகியோர் இரண்டு இடங்கள் பின்னடைவை சந்தித்து முறையே, 5 மற்றும் 11வது இடங்களை பிடித்துள்ளனர்.

ஐசிசியின் புதிய டெஸ்ட் தரவரிசை

டெஸ்ட் அணிகள்

டெஸ்ட்  துடுப்பாட்ட வீரர்கள் வரிசை  

டெஸ்ட்  பந்துவீச்சாளர்கள் வரிசை

டெஸ்ட் சகலதுறை வீரர்கள் வரிசை

 >>கிரிக்கெட் காணொளிகளைப் பார்வையிட<<