கசுனின் ஹெட்ரிக் கோலுடன் எவரெடியை இலகுவாக வீழ்த்திய சௌண்டர்ஸ்

214

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றில் எவரெடி விளையாட்டுக் கழகத்தை 6-2 என்ற கோல் கணக்கில் இலகுவாக வீழ்த்திய சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஏற்கனவே நேற்று இரண்டு போட்டிகள் இடம்பெற்ற சுகததாஸ அரங்கில் இன்றைய இந்த ஆட்டமும் இடம்பெற்றது.

சௌண்டர்ஸ் முதல் பதினொருவர்

ஷானுக எரங்க (அணித் தலைவர்), இந்த்ரீவ் உதார, சந்திரசேகர, கிறிஷாந்த அபேசேகர, பிரியதர்ஷன, ஷமோத் டில்ஷான், கசுன் ஜயசூரிய, ரங்கன, சாலித திலக்சிறி, சுந்தராஜ் நிரேஷ், மொஹமட் நலீம்

எவரெடி முதல் பதினொருவர்

ஆருமுகம் அர்ஜுன, சந்திரசேகரன், ரமேஷ் குமார (அணித் தலைவர்), லக்ஷான், ஷெஹான் செல்வராஜா (கோல் காப்பாளர்), ஸ்ரீகாந்த், விஷாகன், அஷ்வின் டயஸ், அனோஜ் குமுார், கசுன் மதுரங்க, தியாகராஜா ரொட்னி

இறுதி நேர கோல்களால் பொலிஸ் அணி காலிறுதிக்கு தகுதி

சுகததாஸ விளையாட்டரங்கில்…

ஆட்டம் ஆரம்பமாகி 5 நிமிடங்கள் கடந்த நிலையில் சௌண்டர்ஸ் வீரர்களுக்கு எதிரணியின் கோல் திசையில், பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் இடது புறத்தில் ப்ரீ கிக் ஒன்றுக்கான வாய்ப்பு கிடைத்தது. இதன்போது கிறிஷாந்த அபேசேகர உள்ளனுப்பிய பந்திற்கு நலீம் ஹெடர் செய்ய, கம்பங்களைவிட சற்று உயர்ந்த விதத்தில் அது வெளியே சென்றது.

15ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்தை ஷமோத் டில்ஷான் பெற்று பெனால்டி எல்லைக்குள் செல்லும்போது எவரெடி கோல் காப்பாளர் ஷெஹான் பந்தை திசை மாற்றினார்.

அடுத்த நிமிடம் சுந்தராஜ் நிரேஷ் எதிரணியின் கோல் எல்லையின் ஒரு பக்கத்தில் இருந்து கோலுக்குள் செலுத்திய பந்து இடது பக்க கம்பத்தில் பட்டு வெளியேறியது.

20 ஆவது நிமிடம் எவரெடி வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது மைதானத்தின் மத்தியில் இருந்து ரமேஷ் குமார செலுத்திய பந்தை, சௌண்டர்ஸ் கோல் காப்பாளர் கம்பங்களுக்கு மிகவும் அண்மையில் இருந்து பிடித்தார்.

25 நிமிடங்கள் கடந்த நிலையில், கிறிஷாந்த அபேசேகர மத்திய களத்தில் இருந்து பந்தை கசுன் ஜயசூரியவுக்கு கொடுத்துவிட்டு பெனால்டி எல்லைக்குள் செல்ல, மீண்டும் கசுன் அதனை பல வீரர்களுக்கு ஊடாக வேகமாக அபேசேகரவுக்கு பரிமாற்றம் செய்தார். அபேசேகர அதனை கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் சௌண்டர்ஸ் கோல் எல்லையில் வைத்து எவரெடி வீரர் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை அணித் தலைவர் ரமேஷ் குமார கோலாக்கி ஆட்டத்தை 2 நிமிடங்களுக்குள் சமப்படுத்தினார்.

விமானப்படைக்கு எதிராக வித்தை காண்பித்த இளம் ரினௌன் காலிறுதியில்

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து…

சில நிமிடங்களில் பெனால்டி எல்லையில் இருந்து நிரேஷ் வேகமாக கோல் நோக்கி உதைந்த பந்தை கோல் காப்பாளர் ஷெஹான் சிறப்பாக பாய்ந்து தடுத்தார்.

போட்டியில் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் நிரேஷ் பெனால்டி எல்லையில் இருந்து வேகமாக கோல் நோக்கி உதைந்த பந்து ஷெஹானின் கைகளுக்கே சென்றது.

45 நிமிடங்கள் கடந்த நிலையில் எவரெடியின் பெனால்டி எல்லையில் பந்துப் பரிமாற்றம் செய்துகொண்டிருந்த கசுன் ஜயசூரிய முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, சௌண்டர்ஸ் வீரர்களுக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை நிரேஷ் கோலாக்கினார்.

இறுதித் தருவாயில் பெற்ற பெனால்டி கோலுடன் முதல் பாதியை சௌண்டர்ஸ் வீரர்கள் தமது முன்னிலையுடன் நிறைவு செய்தனர்.

முதல் பாதி: சௌண்டர்ஸ் வி. 2 – 1 எவரெடி வி.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்களுக்குள் சௌண்டர்ஸ் அணிக்கு மூன்றாவது கோல் கிடைத்தது. பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து பந்தைப் பெற்ற கசுன் வேகமாக கோல் நோக்கி பந்தை உதைய எந்தத் தடையும் இன்றி அது கம்பங்களுக்குள் சென்றது.

பின்னர் அடுத்தடுத்து கிடைத்த இரண்டு வாய்ப்புக்களை ஷமோத் டில்ஷான் சிறப்பாக நிறைவு செய்யத் தவறினார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக சௌண்டர்ஸ் வீரர்கள் பல வாய்ப்புக்களை பெற்ற போதும், அவற்றின் நிறைவுகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை.

ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் எவரெடியின் இடது புறத்தில் இருந்து சௌண்டர்ஸ் வீரர் உள்ளனுப்பிய பந்தை கசுன் ஜயசூரிய ஹெடர் மூலம் கோலாக்கினார்.

Photos: Air Force SC vs Renown SC | Round of 16 | Vantage FA Cup 2018

ThePapare.com | Viraj Kothalawala | 04/11/2018 Editing and re-using images without permission of ThePapare.com

மேலும் 2 நிமிடங்களில் மீண்டும் எவரெடி வீரர் ஒருவர் எதிரணியின் பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, இரண்டாவது பெனால்டி வாய்ப்பையும் ரமேஷ் கோலாக்கினார்.

மீண்டும் 83ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து நிரேஷ் வேகமாக கோல் நோக்கி உதைந்த பந்து மேல் கம்பத்தில் பட்டு மைதானத்திற்கு திரும்பியது.

சௌண்டர்ஸ் அணிக்காக மாற்று வீரராக வந்த தேசிய அணியின் முன்னாள் வீரர் சனோஜ் சமீர 85 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து பந்தை நேரே கம்பங்களுக்குள் செலுத்தி அணிக்கான ஐந்தாவது கோலை பதிவு செய்தார்.

தொடர்ந்தும் அபாரமாக ஆடிய சிரேஷ்ட வீரர் கசுன் ஜயசூரிய போட்டியின் உபாதையீடு நேரத்தில் எதிரணியின் பெனால்டி எல்லையில் பெற்ற பந்துப் பரிமாற்றத்தைக் கொண்டு கோல் காப்பாளரையும் தாண்டி பந்தை எடுத்துச் சென்று தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

இதன்மூலம் போட்டியின் நிறைவில், இரண்டாம் பாதியில் பெற்ற 4 கோல்களுடன் ஏற்கனவே 11 முறை எப்.ஏ கிண்ணத்தை வென்றுள்ள சௌண்டர்ஸ் அணியினர் 6-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று இம்முறை தொடரில் காலிறுதிக்கான தகுதியைப் பெற்றுக்கொண்டது.

முழு நேரம்: சௌண்டர்ஸ் வி. 6 – 2 எவரெடி வி.

  • ThePapare.com இன் போட்டியின் ஆட்ட நாயகன் – கசுன் ஜயசூரிய (சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள் 

சௌண்டர்ஸ் வி.க – கிறிஷாந்த அபேசேகர 26′, சுந்தராஜ் நிரேஷ் 45+1′(P), கசுன் ஜயசூரிய 47′ 74′ & 90+2′, சனோஜ் சமீர 86′
எவரெடி வி.க – ரமேஷ் குமார 28′(P) & 78′(P)

மஞ்சள் அட்டை
சௌண்டர்ஸ் வி.க – மொஹமட் நலீம் 61′
எவரெடி வி.க – ஷெஹான் செல்வராஜா 33′

>>போட்டியை மீண்டும் பார்வையிட<<