சிறைச்சாலை அணியை வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறிய சௌண்டர்ஸ்

344

FA கிண்ணத்தில் பலம் கொண்ட் சௌண்டர்ஸ் அணிக்கு சிறைச்சாலை விளையாட்டுக் கழகம் கடும் சவால் கொடுத்த போட்டியில் சௌண்டர்ஸ் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. இதன் மூலம் சுகததாச அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற வான்டேஜ் FA கிண்ண 3 ஆவது காலிறுதியில் சௌண்டர்ஸ் அணி வெற்றியை உறுதி செய்தது.

15 தடவைகள் FA கிண்ண சம்பியனான சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், 16 அணிகள் சுற்றில் எவரெடி விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் 6-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டிய நிலையிலும் சிறைச்சாலை விளையாட்டுக் கழக அணி புனித நிகொலஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியை 2-0 என வெற்றி பெற்றே காலிறுதிப் போட்டிக்கு முன்னேறின.

பெனால்டியில் நியு யங்ஸை வீழ்த்திய கொழும்பு வீரர்கள் அரையிறுதியில்

சிறைச்சாலை அணி போட்டி ஆரம்பத்த விரைவிலேயே தாக்குதலுக்கு மேல் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அச்சுறுத்தல் விடுத்தது. எனினும் சௌண்டர்ஸ் கழகம் 7 ஆவது நிமிடத்தில் முதல் வாய்ப்பை பெற்றுக்கொண்டது. கிறிஷாந்த அபேசேகர கிடைத்த பிரீ கிக்கை சிறப்பான முறையில் உதைத்தபோதும் எதிரணி கோல்காப்பாளரும் தலைவருமான ஆர்.பி. ஜயசிறி சிறந்த முறையில் தடுத்தார்.

உடனடியாக பதில் கொடுத்த சிறைச்சாலை அணி அதன் முன்கள வீரர்கள் பரிமாற்றிய பந்தை எம்.கே.ஜி.எஸ் பிரபோத், வலையை நோக்கி உதைத்தபோதும் எதிரணித் தலைவர் அசங்க விராஜ் அது கோலாக மாறுவதை தடுத்தார்.

சௌண்டர்ஸின் கசுன் ஜயசூரிய மற்றும் சிறைச்சாலை அணியின் டீ. கஜகோபன் தமது அணிகக்காக சிறந்த வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தபோதும் அவை கோலாக மாறவில்லை. எவ்வாறாயினும் அசங்க விராஜ் மற்றும் ஜயசூரிய முறையே தமது அணிகளுக்காக கோல் முயற்சிகளை சிறப்பாக தடுத்தனர்.    

கடைசியில் கஜகோபன் 23 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையின் விளிம்பில் இருந்து வேகமாக உதைத்த பந்து கோலாக மாறியது.

27 ஆவது நிமிடத்தில் சுந்தராஜ் நிரேஷ் பெனால்டி எல்லை விளிம்பில் இருந்து உதைத்த பந்தை அணித்தலைவர் ஜயசிறி தட்டிவிட்டு பதில் கோல் போடுவதை தவிர்த்தார்.

எனினும் 29 ஆவது நிமிடத்தில் சமோத் டில்ஷான் பந்தை பெனால்டி பகுதிக்குள் உதைக்க கசுன் ஜயசூரிய தலையால் முட்டி சௌண்டர்ஸ் அணிக்கு பதில் கோல் திருப்பினார்.

தொடர்ந்து நிரேஷ் பந்தை வலைக்குள் புகுத்தியபோதும் ஓப் சைட் என அறிவிக்கப்பட்டதால் கொண்டாட்டம் பாதியில் நின்றது.

முதல் பாதி: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 1 – 1 சிறைச்சாலை விளையாட்டுக் கழகம்

இடைவேளைக்குப் பின்னர் போட்டி ஆரம்பமான விரைவில் ஜயசூரிய தனது இரண்டாவது கோலை புகுத்தி சௌண்டர்ஸ் அணியை முன்னிலை பெறச் செய்தார்.

சுந்தராஜ் நிரேஷ் மற்றும் இசுரு பெரேரா சௌண்டர்ஸ் அணிக்காக மேலும் இரண்டு வாய்ப்புகளை பெற்றபோதும் அவை இரண்டும் கோல் கம்பத்திற்கு வெளியால் சென்றது. ஒரு கோலால் முன்னிலை பெற்ற சௌண்டர்ஸ் அணிக்கு சிறைச்சாலை அணி தொடர்ந்து நெருக்கடி கொடுத்தது.   

எப்.ஏ கிண்ண அரையிறுதிக்கு செல்லும் முதல் அணியாக இராணுவப்படை

பிரபோத் பிரீ கிக் ஒன்றை உதைத்தபோது அது நேராக அசங்க விராஜின் கைகளுக்கு சென்றது. பிரபோத் மீண்டுமொரு பிரீ கிக் ஒன்றை உதைக்க அதனை அசங்க விராஜ் பாய்ந்து தடுத்தார்.

கஜகோபன் உதைத்த கோணர் கிக், கோல் வாய்ப்பில் இருந்து பந்து விலகிச் சென்றது. கடைசி நேரத்தில் சௌண்டர்ஸ் அணியின் கோல் எல்லை ஆக்கிரமிக்கப்பட்டபோதும் அந்த அணி தனது முன்னிலையை தக்கவைத்துக் கொண்டு அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

முழு நேரம்: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 2 – 1 சிறைச்சாலை விளையாட்டுக் கழகம்

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – கசுன் ஜயசூரிய (சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்
சிறைச்சாலை விளையாட்டுக் கழகம் – டீ. கஜகோபன் 23′
சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் – கசுன் ஜயசூரிய 29′, 50′

மஞ்சள் அட்டைகள்
சிறைச்சாலை விளையாட்டுக் கழகம் – பி.ஜி.பி. சதுரங்க 7′
சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் – இசுரு பெரேரா 78′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<