பெனால்டியில் நியு யங்ஸை வீழ்த்திய கொழும்பு வீரர்கள் அரையிறுதியில்

369

நியு யங்ஸ் அணிக்கு எதிரான வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரில் நியு யங்ஸ் கால்பந்து கழகத்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கொழும்பு கால்பந்து கழகம் தொடரின் அரையிறுதிக்குதி தெரிவாகியுள்ளது.

ஏற்கனவே நடந்து முடிந்த காலிறுதிக்கு முன்னைய சுற்றில் நியு யங்ஸ் வீரர்கள் கம்பளை ரெட் சன் அணியை 4-0 என்ற கோல் கணக்கிலும், கொழும்பு கால்பந்து அணி வீரர்கள் 3-1 என்ற கோல் கணக்கில் ஜாவா லேன் அணியினரையும் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தெரிவாகியிருந்தனர்.

கொழும்பு முதல் பதினொருவர்

புத்திக பெரேர, ஷலன சமீர, நிரான் கனிஷ்க, அஹமட் சஸ்னி, ஜெய்ன், மொஹமட் பசால், மொஹமட் ஆகிப், கவீஷ் பெர்னாண்டோ (கோல் காப்பாளர்), அபீல் மொஹமட், மொஹமட் ரிப்னாஸ், ஷரித்த ரத்னாயக்க

நியு யங்ஸ் முதல் பதினொருவர்

டக்சன் பியுஸ்லஸ் (அணித் தலைவர்), ஹசித பிரியன்கர, நிஷான்த பெரேரா, W.S.D குரேர, U.G.C.L தனன்ஜய, சுதத் ஜயலத், தனுஷ்க ராஜபக்ஷ (கோல் காப்பாளர்), சந்தருவன் பெர்னாண்டோ, கவீன் சுவாரித், J.M நிமேஷ், மதுசங்க கருனாரத்ன  

எப்.ஏ கிண்ண அரையிறுதிக்கு செல்லும் முதல் அணியாக இராணுவப்படை

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதியில் இலங்கை போக்குவரத்து சபை….

இந்நிலையில், சுகததாஸ அரங்கில் இன்று (17) இடம்பெற்ற இந்த போட்டியில் ஆரம்ப நிமிடங்களில் பசால் உள்ளனுப்பிய பந்தை புத்திக பெரேரா முன்னோக்கி எடுத்துச் சென்று கோல் திசைக்கு செலுத்துகையில், அங்கே ஹெடர் செய்ய வந்த ஆகிப்பின் தலைக்கு மேலால் பந்து சென்றது.

மேலும் 5 நிமிடங்களின் பின்னர், நியு யங்ஸ் அணியின் கோல் பகுதியின் இடது புறத்தில் இருந்து பந்தை எடுத்து வந்த பசால், கோலுக்கு அண்மைவரை முன்னேறி, இறுதியாக பெனால்டி எல்லையில் இருந்த சக வீரர்களுக்கு பரிமாற்றம் செய்தார். எனினும், கொழும்பு வீரர்கள் எவராலும் பந்தை கோலுக்குள் செலுத்த முடியாமல் போனது.

23 ஆவது நிமிடத்தில் நியு யங்ஸ் வீரர்களுக்கு எதிரணியின் வலது பக்க கோணர் திசையில் ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதன்போது உள்ளனுப்பிய பந்தை மதுசங்க ஹெடர் செய்ய, பந்து கம்பங்களை விட உயர்ந்து சென்றது.

சில நிமிடங்களில் நியு யங்ஸ் வீரர்களுக்கு எதிரணியின் கோல் எல்லையில் கிடைத்த சிறந்த வாய்ப்பின்போது அவ்வணி வீரர்கள் தடுப்பில் இருந்த வீரர்களுக்கு பந்தை உதைந்த வாய்ப்பை வீணடித்தனர்.

மீண்டும், 30 நிமிடங்களின் பின்னர் புத்திக எரங்க எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தை கொண்டு சென்று கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தை தனுஷ்க ராஜபக்ஷ பிடித்தார்.

Photos : Java Lane SC vs Colombo FC – Vantage FA Cup 2018 | Round of 16

ThePapare.com | Waruna Lakmal | 05/11/2018 Editing and re-using images without permission of…..

சில நிமிடங்களில், மத்திய களத்தில் இருந்து மதுசங்க கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் நியு யங்ஸ் வீரர்கள் ஆரம்பத்தை விட சற்று அதிக வேகத்தைக் காண்பித்த போதும் கொழும்பு பின்கள தரப்பு எதிரணியின் வாய்ப்புக்களை தடுத்து ஆடினர். எனவே, கோல்கள் இன்றி முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி: கொழும்பு கா.க 0 – 0  நியு யங்ஸ் கா.க

இரண்டாவம் பாதி ஆரம்பமாகி 15 நிமிடங்களுக்கு இரண்டு அணிகளும் சம அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக கொழும்பு கால்பந்து கழகத்திற்கு மாற்று வீரராக வந்த சப்ரான் சத்தார் மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்தை புத்திக பெரேரா பெறுவதற்குள் கோல் காப்பாளர் தனுஷ்க வேகமாக முன்வந்து பற்றிக் கொண்டார்.

மூன்று நிமிடங்களில் ஜாவா லேனின் எதிர்பார்ப்பை உடைத்த கொழும்பு அணி

ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தை 3-1 …..

அடுத்த சில நிமிடங்களில் நியு யங்ஸ் பின்களத்தில் பந்தைப் பெற்று, பியுஸைத் தாண்டி தன்னைத் தனிமையாக்கிய ஆகிப் கோல் நோக்கி உதைந்த பந்து மேல் கம்பத்தை அணிமித்து வெளியேறியது.

தொடர்ந்து, கொழும்பு வீரர்கள் அடுத்தடுத்து மேற்கொண்ட கோலுக்கான முயற்சிகள் அனைத்தையும் தனுஷ்க ராஜபக்ஷ சிறந்த முறையில் தடுத்தார்.

85 நிமிடங்கள் கடந்த நிலையில் நியு யங்ஸ் வீரர்களுக்கு கிடைத்த இரண்டு ப்ரீ கிக் வாய்ப்புக்களையும் அவர்கள் வெளியில் அடித்து வீணடித்தனர்.

மறுபக்கம், கொழும்பு அணியின் முன்கள வீரர்கள் எதிரணியின் கோல் திசையில் எடுத்த அனைத்து கோல் முயற்சிகளையும் நியு யங்ஸ் அணித் தலைவர் டக்சன் பியுஸ்லஸ் தனியாளாக தடுத்து அங்கிருந்து பந்தை எதிர் திசைக்கு செலுத்தினார்.

வேகத்திற்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமின்றி இடம்பெற்ற இரண்டாவது பாதியில் இரண்டு அணி வீரர்களும் கடுமையாகப் போராடிய போதும், குறித்த பாதியும் கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில் ஆட்டம் சமநிலையடைந்தது.

முழு நேரம்: கொழும்பு கா.க 0 – 0  நியு யங்ஸ் கா.க

எனவே, வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கான பெனால்டி வாய்ப்பு இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது.

சுபர் சன் – நியு யங்ஸ் இடையிலான ஆரம்பப் போட்டி சமநிலையில் நிறைவு

யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் நியு யங்ஸ் மற்றும் சுபர்….

இதன்போது கொழும்பு வீரர்கள் தமது முதல் நான்கு வாய்ப்புக்களையும் கோலுக்குள் செலுத்தினர். எனினும், நியு யங்ஸ் வீரர்கள் முதல் வாய்ப்பை கோலுக்குள் செலுத்தி, ஏனைய இரண்டையும் கம்பங்களுக்கு வெளியே உதைந்தனர்.

எனவே, கொழும்பு கால்பந்து அணியினர் 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் எப்.ஏ கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு தெரிவாகினர்.

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – டக்சன் பியுஸ்லஸ் (நியு யங்ஸ் கால்பந்து கழகம்)

மஞ்சள் அட்டை

கொழும்பு கா.க – ஷலன சமீர

நியு யங்ஸ் கா.க – ஹசித பிரியன்கர, W.S.D குரேர  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<